Postpartum Depressionயை கையாளுவது எப்படி?

ஒரு பெண், பிள்ளைப் பெற்றெடுத்த பருவத்தில், அவளது ஹார்மோன்களின் சேட்டைகள் மிகவும் அதிகமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் ஒரு மாதிரியாகவும், பிள்ளை பெற்றேடுத்த காலத்தில் இன்னும் அதிகமாக, வேற மாதிரியாக இருக்கும். இது எல்லாம் மிகவும் சாதாரணம்.

author-image
Nandhini
Aug 17, 2023 15:43 IST
namitha

Images are used only for representational purpose only.

பிள்ளைப் பெற்ற பின்பு பெண்களுக்கு ஒருவிதமான சோகம் ஏற்படும். அதற்கு காரணம், ஹார்மோன்கள் (harmones). ஒரு முழு மனிதரை, ஓர் பெண் தன்னுள் இருந்து எடுக்கும் பொது, அவளது உடலில் மாற்றங்கள் வரலாம். அந்த மாற்றங்களின் விளைவு தான் இந்த சோகம்.

Advertisment

கர்ப்ப காலங்களில், இவளைப் பற்றி மட்டுமே இவள் கணவர், உறவினர் அனைவரும் யோசிப்பார்கள். அவர்களுக்கும் ஒரு விதமான பாசம் மற்றும் அரவணைப்பு எப்போதும் கிடைக்கும். அதுவே பிள்ளைப் பெற்ற பிறகு, அந்த பாசம் எல்லாம் இருக்கும் ஆனால், அவர்களது கவனங்கள் எல்லாம் அந்த குழந்தை மீது தான் இருக்கும்.

இதனை நாள் அவளைப் பார்த்துக்கொண்டிருந்த உறவினர்கள் தீடீரென்ன அவளை விட்டுவிட்டு சென்றது போல் தோன்றும். அவர்களை ஏதோ ஒரு அறையில் அடைத்து, ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்வது போல் தோன்றும். குழந்தைஎன மட்டுமே அவர்களது உலகம் சுற்றுவது போல் இருக்கும். இந்த சமயத்தில் அவர்களது குணாதிசையங்கள் மாறும். எதற்கு எடுத்தாலும் கத்துவார்கள். சட்டென்று அழுவார்கள். திடீரென சோகத்தில் மூழ்கி, அமைதியாக இருப்பார்கள்.

இதெல்லாம் வைத்து  தான் அவர்கள் “Postpartum depressionயை மேற்கொண்டிக்கிறார்கள் என தெரியும். இது எல்லோருக்கும் வருமா? தெரியாது, அவர்களது சூழல் பொறுத்து, அவர்களது மன நிலை மாறும். ஆனால் இதை மேற்கொள்ளும் பெண்கள், இதிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பதை இதில் பார்ப்போம்,

Advertisment

தவிர்க்கும் வழிமுறைகள்

SAY “NO”  TO தனிமை:

e

Advertisment

பிள்ளைப் பெற்ற பின்பு ஹார்மோனல் (harmonal ) மாற்றங்களால், அவர்களது வழக்கமான வாழ்க்கை முறை மாறும். குழந்தை, சாப்பாடு, தூக்கம் என்று அவர்களது மனம் சுற்றிக் கொண்டே இருக்கும். அதையும் தாண்டி பல யோசனைகள் வரும். அதில் மிகவும் ஆபத்தானது இந்த "தனிமை". என்னதான் உறவினர்கள், கணவர் எல்லாம் அருகில் இருந்தாலும், அவர்களுடன் சாதாரணமாக பேசினாலும், இதை மனரீதியாக மாற்றப்பட வேண்டிய ஒன்று. அது முழுக்க முழுக்க அந்த பெண் மீது உள்ளது.

அப்படி நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என நினைத்தால், உடனே அருகில் இருக்கும் நபரிடம் ஏதாவது பேச ஆரம்பியுங்கள். அருகில் யாருமில்லையா? நெருங்கிய நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து பேசலாம்.

உங்களுக்கு தெரிந்த பெண்கள் எவரேனும் பிள்ளைப் பெற்றிருந்தால், அவர்களிடம் பேசி அவர்கள் இந்த postpartum depressionயை எப்படி கையாண்டார்கள் என கேட்டு அதை பின் படுத்தலாம்.

Advertisment

தனியாக இருப்பதில் என்ன ஆபத்து என்று எண்ணிவிடதீர்கள். தனிமை, நிறைய தேவையற்ற எண்ணங்களை திணிக்கும், அது காலப்போக்கில் "உயிரை மாய்த்துக்கொள்ளும்" அளவிற்கு கூட செல்லலாம். முடிந்த வரை தனிமையை தவிர்த்துவிடுங்கள்.

Healthy உணவு மற்றும் உடற்பயிற்சி

குழந்தைப் பெற்ற பின்பு நம் உடல் ரீதியாக மாற்றங்கள் நிறைய உண்டாகும். தலைமுடி உதிர்வு, உடல் இடை ஏறுவது, பருமன் மாற்றம், முக்கியமாக  size 0 வில் இருந்து  XXL ஆக மாறும். அப்போது கண்ணாடியில் தங்களைப் பார்த்து வெறுத்துப்போவார்கள்.

Advertisment

அதற்கு  ஒரே தீர்வு நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி

உணவே மருந்து என்ற பழமொழி அப்பொழுது தான் புரியும். கோவமோ சோகமோ சாப்பிட்டால் சரி ஆகி விடும் . அதுவும் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டால், நமது ஹார்மோன்கள் (harmones) சீர் ஆவதுடன், நம் மனநிலை மாறும். உடல் இடையும் குறைக்க உதவும். அவவ்போழுது பிடித்த உணவை சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்வதின் மூலம் நம் மனம் மற்றும் மூளை சிறிய நேரத்திற்கு குழந்தை தாண்டி "உங்கள்" மீது கவனம் செலுத்துவதால், நம்மக்கு வேண்டிய இலக்கை அடைய உதவுகிறது.

Me time

Advertisment

இந்த "தனக்கான நேரம்" என்பது குழந்தை பிறந்து முதல் ஆறு முதல் எட்டு மாதம் வரை கிடைப்பதற்கு அரிதான ஒன்று. ஆனால் முடிந்த வரை எடுத்துக்க முயற்சி செய்யவும். அது பத்து  நிமிடங்களாக இருந்தாலும் சரி. இதன் மூலம்  உங்கள் இயல்பு வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற உதவும். இந்த "தனக்கான நேரம்" என்பதில் உள்ள மிக பெரிய நன்மை என்னவென்றால், உங்கள் மனதில் ஓடி கொண்டிருக்கும் எண்ணங்கள் மட்டும் கேள்விகளுக்கு  நிதானமாக முடிவு எடுக்க உதவும்.

Rest is Must

sleep

Advertisment

முடிந்த அளவிற்கு ஓய்வு பெற வேண்டும். உடல் ரீதியாக ஒய்வு கிடைத்தால் தான், குழந்தை மற்றும் உங்களைப் பார்த்து கொள்ள முடியும். எப்போது வேண்டுமோ அப்பொழுதேல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள். உறவினர்கள் கண்டிப்பாக உங்கள் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள். அவர்களுடைய உதவி கண்டிப்பாக கிடைக்கும். 

உங்கள் மனதை மாற்ற ஆயிரம் வழி இருந்தாலும், புதிதாக பிள்ளைப் பெற்ற அம்மாக்கள் மனதால் வலுவாக வேண்டும். அவர்களால் இந்த கட்டத்தை தாண்டி வர இயலும் என்று அவர்கள் முதலில் நம்ப வேண்டும். அது தான் உண்மையாவே மாற்றங்களுக்கு உதவும்.

எப்படி கர்பக் காலத்தில் சிறு சிறு ஆசைகள் நிறைவேற்றப்பட்டு, அழகான காலமாக இருந்ததோ, அதே மாறி பிள்ளைப் பெற்ற பின்பு இருக்கும் இந்த காலமும்  அழகானது தான்.  இதுவும் கடந்து போகும். பின்னர் யோசித்து பார்த்தால் இந்த பருவம் கிடைக்காது. அதனால் தேவையில்லாததை யோசித்து மனதை வருடிக்காதீர்கள். ஒன்று சொல்லி இந்த கட்டுரையை முடிக்க நினைக்கின்றோம்.

"DEAR AMMAS, YOU ARE DOING GREAT!!"

 

Suggested Reading: PCOD - குணப்படுத்தலாம் சுலபமாக! பயம் வேண்டாம்

Suggested Reading: முடி உதிர்வதை தடுக்க சமையலறையில் இருக்கும் ஐந்து பொருட்கள்

Suggested Reading: Breast cancer- சுய பரிசோதனை செய்வது எப்படி?

Suggested Reading: சம சீரற்ற மார்பகங்கள்(uneven breasts) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

#depression #postpartum