அழகில் மறைந்துள்ள சோகம்

குட்டி ஊர். அழகான இடம். உடம்பிற்கு மட்டுமல்லாமல் கண்ணுக்கும் குட்டி ஊர். ஊரே பச்சைப்பசேல் என காட்சி அளிக்கும். காலையில், சூரியனுடன் கூடிய ஒரு மிதமான குளிர். மாலையில் ஒரு மூன்று மணியிலுருந்து, சூரியன் மறைய தொடங்கி, குளிரின் தாக்கம் அதிகமாகும்.

author-image
Nandhini
New Update
workih

Workers in the tea estate

உதக மண்டலம், பள்ளிக்கூடங்கள் பார்க்கவே அழகாக இருக்கும். நான் மட்டும் இந்த இடத்தில் பிறந்து வளர்ந்திருந்தால், நானும்  பிடிவாதம் செய்யாமல் ஒழுங்காக பள்ளிக்கு சென்று இருப்பேனோ என்னமோ என்று நானே நினைத்து சிரித்த படி நடந்து கொண்டு இருந்தேன்.

Advertisment

காலையில் தேயிலை பறிக்க கூட்டம் கூட்டமாக அக்காக்கள் செல்வார்கள். ஒரு டெம்போவில் அனைவரையும் அழைத்து அந்த அந்த தேயிலை எஸ்டேயில் விடுவார்கள். அந்த அக்காக்களின் முகத்தில் மழலை கலந்த ஒரு சிரிப்பில் வேலை பார்த்தவண்ணம் இருப்பார்கள். ஊரே ஜேஜே வென்று இருக்கும். ஒட்டு மொத்த ஊருக்கும் ஒரு uniform "ஸ்வெட்டர்". வெயில் அடித்தாலும், ஸ்வெட்டர் போடும் ஒரு மிதமான குளிர். குட்டி ஊர். தேயிலை தோட்டம் தான் அதிகம். அங்க அங்க  கேரட் தோட்டங்கள். நாம் சுற்றுலா பயணி என்பதினால் நாம் கேட்டால் உடனடியாக பறித்து கொடுப்பார்கள். மாலை ஆறு மணிக்கு மேல் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீடு திரும்புவார்கள். ஒட்டு மொத்த ஊரும் வீட்டுக்குள் அடங்கி விடுவார்கள்.

இதனை அழகு நிறைந்த காட்சி நாம் இருக்கும் இந்த நகர்புறத்தில் எங்கையாவது காண்பதுண்டா?  இரண்டு நாள் சுற்றுலாவிற்க்காக வந்தோம், இங்கேயே இருந்து விடலாமா, இந்த அக்காக்கள் மாதிரி அமைதியான டீ எஸ்டேட்யில் குட்டி வீடு, நிம்மதியான வாழ்க்கை என்று கண்டிப்பாக எண்ணியதுண்டு. ஆனால் நாம் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து முடிவு செய்கிறோம். அனைத்து  கதைக்கும் மறுபக்கம் உண்டு. அந்த சிரிப்புக்கு, மழலை தன்மைக்கு பின்னால் ஒரு சோகம் ஒளிந்து கொண்டிருந்தது. அதை நாங்கள் நேர்காணல் மூலமாக தான் தெரிந்து கொண்டோம். உங்களிடமும் பகிர்கிறோம்.

 இந்த அழகான ஊரில் உங்களது வாழ்க்கை

tea working

எங்கள் மூதாதையர், அதாவது எங்கள் தாத்தாவின் அப்பா, இங்க வந்து வேலைக்கு சேர்ந்து, இங்கையே தங்கிவிட்டதால், அப்படியே எங்கள் அப்பா, நாங்கள் என்று இங்கையே தங்கிவிட்டோம். காலை ஐந்து அல்லது ஐந்தரை வரை வெளியில் செல்ல இயலாது. பனி, குளிர் தாண்டி காட்டு விளங்குங்களின்  நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதனால் நாங்கள் காலை ஆறு மணிக்கு மேல் தான் இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் சூரிய வெளிச்சம் தெரியும் வரை நாங்கள் வெளியே செல்வதை தவிர்ப்போம். அதே மாதிரி இரவு சூரிய வெளிச்சம் மறையும் வரை இருப்போம் அதாவது மாலை ஆறு வரை. 

Advertisment

தேயிலை வேலைக்கு காலை பிள்ளைகளைப்பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டு, காலை உணவை சாப்பிட்டு ஒரு 7:30 முதல் எட்டு மணி போல் நாங்கள் புறப்படுவோம். மாலை ஒரு ஐந்து மணி வரை பறித்து விட்டு, அதற்க்கான இடைப் போட்டு, தகுந்த காசை வாங்கி கொண்டு தான் வருவோம். காசும், ஏதாவது கடன் வாங்கியிருந்தால் அதை திருப்பி கொடுத்து, மீதமுள்ள காசை வீட்டுக்கு கொண்டு வருவோம்.

இந்த விலங்குங்கள் பற்றின பயம் ?

நாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்ததினால் எங்களுக்கு பயமில்லை. அமைதியே எங்கள் ஆயுதம். காட்டு விலங்குகளைப் பொறுத்த வரை, அதை சீண்டாமல் இருந்தால் அதுவும் நம்மைச் சீண்டாது. சில நேரங்களில் அது, நம்மை பார்த்து பயப்படும் . அப்போது அது "நம்மை ஏதோ செய்ய போகிறார்கள்" என்று அது நம்மை பார்த்து பயந்து இங்கையும் அங்கையும்  மிளிரும்.

ஆனால் இந்த சுற்றுலா பயணிகள் இரவில் "camp fire" நடந்த இந்த மாறி முதலாளியின் டீ எஸ்டேட்க்கு தான் வருவார்கள். அப்பொழுது காட்டு எருமையை அல்லது கழுதைப்புலியை பார்த்து விட்டால் பதறியடித்து உள்ளேசெல்வார்கள். அது சில சமயம் அமைதியாக போய்டுவிடும், ஒரு சில சமயத்தில் ஒரு ஆட்டம் காட்டிவிட்டு தான் செல்லும். அந்த மாறி சமயத்தில் எங்கள் கணவர்மார்களே அதற்க்கு உதவுவார்கள்.

Advertisment

கண் முன் ஏதாவது சம்பவத்தை பார்த்ததுண்டா?

முக்காவாசி நேரம், விலங்குங்கள் நடமாட்டம் இருந்தால்,எங்கள் கணவர்கள் எச்சரிக்கை கொடுத்துவிடுவார்கள். அப்போது சத்தமில்லாமல் உள்ளே சென்றுவிடுவார்கள். சில சமயம் அதையும் மீறி இந்த பாட்டு சத்தத்தில், அதன் சத்தம் கேட்காது. அதனால் ஒரு சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.பாவமாக இருக்கும். என்ன செய்ய முடியும். அந்த விலங்குகளிடம் சண்டையிட முடியுமா என்ன?

 உங்களது குடும்ப வாழ்க்கை

hini ooty

கணவர்கள், இங்க நிறைய எஸ்டேட் இருப்பதினால், அங்க ஏதேனும் ஒரு எஸ்டேட் வாட்ச்மேனாக இருப்பார். அந்த எஸ்டேயிலே ஒரு சிறிய வீடு போன்று, ஒரு ரூம் கொடுத்துவிடுவார். கழிவறை, சில பேர் வீட்டில் இருக்கும். பெரும்பாலோர் வீட்டில் இருக்காது. இல்லாதவர்கள், அந்த அறைக்கு பின்னால் ஒரு பள்ளம் மாறி அமைத்துபயன்படுத்துவோம். எங்களுக்கு அந்த நாட்களில் மிகவும் கடினமாக இருக்கும். குளிப்பதற்கும் அங்கையே தான். சில நேரங்களில்பக்கத்தில் ஒரு சிறிய அருவி இருக்கிறது அங்கே செல்வோம்.யாராவது பார்த்து விடுவார்களோ என்ற எண்ணம் தாண்டி, விலங்குகள் வருகிறதா என்று எண்ணி அஞ்சிய காலங்களே அதிகம்.

இங்கு முக்காவாசி பெண்களின் கணவர்கள் வாட்சமானாக இருக்கிறார்கள். ஒரு சில பேரோட கணவர்களை விலகுங்கள்தாக்கியுள்ளது. அதிகாலைஏதோ சத்தம் கேட்டு, பொய் பார்த்து, விலங்குகள் தாக்கி இறந்துள்ளனர். அல்லது கை , கால்கள் முறிவு ஏற்பட்டு படுத்த படி கிடக்கிறார்கள்.

Advertisment

ரொம்ப கஷ்டம் தான். தலையில் ஐந்து முதல் ஏழு கிலோ வரை தூக்கி எடை போட்டு இந்த குளிரில் வீடு வந்துசமைத்து சாப்பிட நேரம் சரியாக இருக்கும்.கண் முன் நிறைய உயிர் இழப்புகள் பார்த்து உள்ளோம். விலங்கின் தாக்கம், சாலை  விபத்து, காதல் தோல்வியில் உயிரை மாய்த்து கொண்டது போன்று பல .

எங்களது வாழ்க்கையே இதான்

பிள்ளைக்கு படிப்பு வேண்டியே இங்க இருக்கிறோம். கணவருக்கு இங்க தான் வேலை. அதனால் எங்களால் இந்த இடத்தை தாண்டி வர முடியாது. ஒரு மருந்து வேண்டும் என்றாலும் வாங்க ஊருக்குள் போக வேண்டும். மருத்துவமணைக்கு அவசரம் என்றாலும் போக 30 நிமிடம் மேல் ஆகும்.

வெளியில் இருந்து பார்க்க அழகாகத்தான் இருக்கும். ஆனால் இங்க இருக்கும் எங்களுக்கு இது தான் வாழ்க்கை.

Advertisment

அழகான விஷயங்கள் கூட ஒரு சில நேரம் ஆபத்தானது தான் என்று அந்த மழலை போன்ற சிரிப்போடு, எங்களுக்கு பொழுதுபோக்கெல்லாம் இங்கையே தான்என்று கூறியதில், எதும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்று நாங்கள் புரிந்து கொண்டோம்.

Suggested Reading: இதான் எங்கள் வாழ்க்கை - தள்ளுவண்டி கடை அக்காக்களின் நேர்காணல்

Suggested Reading: ஆசைகளுக்கு வயது வரம்பு இல்லை

Suggested Reading: தனக்கான நேரம் மற்றும் சம்பாத்தியம் - சுயநலமா? தேவையானதா?

Advertisment

Suggested Reading: PCOD - குணப்படுத்தலாம் சுலபமாக! பயம் வேண்டாம்

teaestate ooty teaestateworker