தனக்கான நேரம் மற்றும் சம்பாத்தியம் - சுயநலமா ? தேவையானதா ?

உலகத்தில் பெண்களுக்கு 1008 பிரச்சனைகள் இருந்தாலும் வீட்டில் அவர்கள் சந்திப்பது,அதுவும் புதிதாக பிள்ளை பெற்றெடுத்த அம்மாக்கள். இவர்கள் படும் பாடு இருக்கே, அது திருவிழாவில் தொலைந்த குழந்தை போல் ,என்று அவர்கள் யோசித்து முடிக்கும் முன் விடிந்தே விடும்.

author-image
Nandhini
Aug 11, 2023 20:45 IST
working women with infant

women managing both work and baby

புதிதாக பிள்ளை பெற்றெடுத்த அம்மாக்களிடம் நடத்திய கணக்கெடுப்பின் படி எழுதிய பதிவு. நேர்காணல் முறை படி பதிவு செய்யப்பட்ட கட்டுரை.

Advertisment

அந்த முதல் பகுதி ( the new born phase)

ரொம்ப சந்தோஷம் அதே சமயத்தில் ரொம்ப சோர்வாக இருக்கும் .பேசிய பெண்கள் பெரும்பாலோர் சொன்னது இந்த ஒரு பதில் தான். " அது எதுக்கு அழுதுனே தெரியாது". பசிக்கா? தூக்கமா? ஏதும் கடித்துவிட்டதா? என்று தெரியாமல், பால், தூக்கம், விளையாட்டு காட்டுவது என மாறி மாறி அதை சமாதானம் செய்யவே பாதி நேரம் கழிக்க வேண்டியதாக உள்ளது. குழந்தை வாயை திறந்து பேசும் வரை இது தான் நிலைமை என சிரித்தே கொண்டே  கூறியது  ஒரு விதமான குழப்ப நிலையை அம்மாக்களிடம் உணர முடிந்தது . 

பிள்ளை பெறும்  முன் -  பின் வாழ்க்கை:

Advertisment

working women

விவரம் தெறிந்த பின் ஒரு சில பழகம் வைத்துக்கொண்டு இருந்துயிருப்போம் . காலை 6 மணி முதல் இரவு 10 வரை . சுமார் 10 வருஷம் கடைபிடித்து வந்ததை  குழந்தை பிறந்தது முதல்  2 வயது வரும் வரை அதை அடியோடு தொடர முடியாமல் போய்விடும்.

வீட்டில் அனைவரும் சொல்லி கேள்வி பட்டுயிருக்கிறோம் " குழந்தை தூங்கும் பொழுது  நீயும் தூங்கி விடு என்று . அது எல்லாம் செயல் படுத்த இயலாத ஒன்று . அப்படியே உறங்க சென்றாலும் , ஏதோ ஒரு சத்தம் கேட்டு குழந்தை முழித்து விடும்  , மறுபடியும் அதே routine  ஆரம்பித்து விடும்.

Advertisment

pregrancy  சமயத்தில் அனைவரும் சந்தோசமாக , அமைதியான  சூழல் இருக்கும். மனதில், எப்படி எல்லாம்  பிள்ளையை  வளர்க்க  வேண்டும் , என்ன என்ன  உணவுகள் தரவேண்டும் என்னென்ன பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நிறைய ஆசைகளோடு  சிந்தித்தது உண்டு. ஆனால் பிள்ளை பெற்ற பின்னர், அது அப்படியே மாறி விடுகின்றன . நாம் நினைத்தது ஒரு 6 மாதத்திற்கு நடக்காது. 6 மாதம் வெறும் குழந்தை என திரிவது மட்டுமே வேலை . வேறு ஏதோ ஒரு ஆள் போல் தெரியும் . நம்மை பராமரித்து கொள்ள முடியாது. நம்மால் குழந்தையிடமும் கோவத்தையோ சோர்வையோ காட்ட முடியாது.

உடலளவாகவும்  மனதளவாகவும் ரொம்ப சோர்த்து, எப்படா இந்த பிள்ளை தூங்கும் , எனக்கும் முடியவில்லை என்று ஆகிவிடும்.

 பணியாளராக இருந்து இப்பொது முழு நேர குழந்தை கவனிப்பு என மாறியது

Advertisment

playing with kid

முதலில் இருந்தே வேலை சம்பளம் வாழ்க்கையில் அடுத்து என்ன? என்று ஓடி கொண்டே இருந்து, இப்பொது ஒரு 2 வருடம் வேலை விட்டு நின்றது மிகவும் வருத்தமாக உள்ளது . குழந்தைக்காக இருந்தாலும்  எனக்காக நான் ஓடியது , மறுபடியும் அதை நான் தொடர வேண்டும்  என்று ஆசை எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும். குழந்தை பெற்று ஒரு 6 முதல் 8 மாதம் வரை ஒரு  வேலை  தடை இருப்பது தேவை தான் . அதே நேரத்தில் ,குழந்தை இடம் இருந்து ஒரு பிரேக் தேவைப்படும் இந்த சமயத்தில் தான் வீட்டில் உள்ள  கணவர் மற்றும் உறவினர்களின் உதவி தேவைப்படும்.

 கணவரின் பங்குகளிப்பு :

Advertisment

father playing

எப்படியும் தாய்ப்பால் கொடுப்பதற்கு அம்மா தேவை , மற்ற நேரத்தில் கணவரின் பங்களிப்பு இருக்க வேண்டும். நாம் ,நமது வேலை  பார்க்கும் பொது ,கணவர் குழந்தையை பார்த்து கொண்டால் , வேலையை முடிப்பதோடு ,அப்பா பிள்ளை உறவும் நன்றாக இருக்கும்.  அவர்கள் செய்யும் ஒரு சிறு சிறு உதவி அம்மாக்களுக்கு  மிக பெரிய relief  ஆக இருக்கும் . இது வேலைக்காக  மட்டுமில்லாமல் அவர்களது இயல்பு வாழ்க்கையை தொடரவும் உதவியாக இருக்கும்.

கணவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் . அவரும் வெளியில் வேலை பார்த்து வருகிறார் என்பதை குற்றம் கூற வில்லை அனால் முடிந்த வரை அலுவலக பணியை அங்கையே முடித்து வந்து பிள்ளையை பார்த்து கொண்டால் அம்மாக்களுக்கு பெரும் relief ஆக இருக்கும்.

Advertisment

 நேர்காணல் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டது :

அம்மாக்கள் ஆசை படும் ஒன்று, " அவர்களுக்கான நேரம் " அது அம்மாக்கள் மட்டும் அல்ல  அனைவரும் ஆசை படும் ஒன்று. முடிந்த வரை அதை எடுத்து கொள்ளுங்கள். இது மன ரீதியாக ஒரு நிம்மதி தரும். அது ஒரு பாடலாக இருக்கெல்லாம் , ஒரு புத்தகமாக இருக்கெல்லாம், 10 நிமிடம் உடற்பயிற்சியாக இருக்கெல்லாம். முடிந்த வரை அது எடுத்து கொண்டு , உடல் மற்றும் மன ரீதியாக அமைதி நிலைகொண்டு .வீட்டாரிடம் குழந்தையை அவ்வப்பொழுது பார்த்துக்கொள்ள சொல்லி உங்களுக்கான  நேரத்தை ஒதுக்குங்கள் .

பெண்களுக்கு சுயசம்பாத்யம் என்பது மிகவும் அவசியம் . அது ஒரு 2 வருடம் குழந்தை  பெற்றுஎடுப்பர்த்தாக தடையானால் சரி  செய்துவிடலாம் . ஆனால்  குழந்தைக்காக ,அதை ஒட்டுமொத்தமா நிறுத்த கூடாது என்பது ஒரு வேண்டுகோலாக வைக்கிறோம்.

Advertisment

 

Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி

Suggested Reading: குழந்தை பெற்ற பெண்ணிடம்(new mom) சொல்லக்கூடாத மூன்று விஷயங்கள்

Suggested Reading: மற்றவர்கள் செய்வதற்காக இந்த நான்கு விஷயங்களை செய்யாதீர்கள்

Suggested Reading: காதல் உறவின் நான்கு சிவப்பு கொடிகள் - Relationship counsellor

 

 

#supportive husband #working women #selfempowerment #career #baby