சிவனும் சக்தியும் சேர்ந்தா Mass டா!!

“இந்தியா பாகிஸ்தான் சண்டைக்கு கூட தீர்வு கிடைத்துவிடும் போல இவங்க ரெண்டு பேருக்கும் உண்டான சண்டைக்கு தீர்வு காணவே முடியாது போலையே" என்று கணவர்கள் கேலியாக கூறுவதைக் கேட்டிருப்போம். இவர்கள் சண்டைகள் பற்றி நிறைய படங்களில் சீரியல்களில் கேட்டிருக்க முடியும்.

author-image
Nandhini
New Update
mm banner

Images are used for representation purpose only.

"மாமியார் மருமகள்" உண்மையாகவே இந்த உறவு மிகவும் அழகானது. ஆனால் ஒரு hostelwardenபோல் மாமியாரையும், சேட்டை செய்யும் மருமகளாகவும் stereotypic சித்திரைக்க படுகின்றன. இரண்டும் பெரும் முதலில் ஜாடிக்கு ஏற்ற மூடியாக தான் இருப்பார்கள்,காலப் போக்கில் அது அப்படியே cold warஆகமாறும். இவரைப் பற்றி அவரும் , அவரைப் பற்றி இவரும் மாற்றி மாற்றி கணவரிடம் பழி சொல்லிக் கொண்டே இருப்பதும் ,அது முத்தி பொய் நாளடைவில் வாக்குவாதங்கள், அடிதடி சண்டையாக மாறி விடும். இது அனைவரது வீட்டில் நடக்காது. ஒன்றாக இருந்தால் அது நடந்து விடும் என்று cold war ஆரம்பிக்கும் பொதே யாரேனும் ஒருவர் தனியாக சென்று விடுவார்.

Advertisment

இதை முடிந்த வரை தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதே இந்த கட்டுரை .புதிதாக கல்யாணம் செய்ய போகும் பெண்கள் முக்கியமாக படிக்கச் வேண்டியவை.

என்ன செய்யலாம் இந்த பிரிவுகள் வராமல் இருக்க?

அம்மா - பொண்ணு

கிட்டத்தட்ட ஒரு அம்மா பொண்ணு போல் இருக்க வேண்டிய ஒரு உறவு இது. ஆனால் இருவரில் யாரோ ஒருவர் செய்யும் ஏதோ ஒரு தவறில் ,இருவரிடத்தில் மனஸ்தாபம் (misunderstanding) ஏற்பட்டு இந்த பிரிவினைகள் உருவாகிறது.உங்கள் பெண், ஏதாவது தவறு செய்தால், எப்படி அவரை மன்னிக்கும் இயல்பு இருக்கிறதோ அதே மாதிரி உங்கள் மருமகளும், அவர் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னிக்கும் பக்குவம் வேண்டும். 

mm5

Advertisment

அவர்கள், 25 முதல் 30 வருஷம் ஒரு குடும்பசூழலில் வளர்ந்தவர்கள். புதிதாக ஒரு சூழலில் ஏற்று வாழ வேண்டும் என்றால் அதற்க்கு கொஞ்சம் கால அவககாசம் ஆகும் .  அதற்குள் ஒரு சிறிய சண்டை வந்தாலும், அதை ஊதி, பெருசாகி வெடித்து விடும்.

அதனால் முடிந்த வரை அவர்களை உங்கள் பெண்ணாக பார்த்து கொண்டால் பாதி பிரச்சனைகள் வருவதை தவிர்த்துக் கொள்ளலாம்.இது மாமியார்களுக்கு மட்டுமல்ல மருமகளுக்கும் சேர்த்து தான். நீங்களும் உங்கள் அம்மாவை போல் பார்த்தால் நல்லது.

Personal'ஆ எடுத்துக்க வேண்டாம்

மாமியார்கள் வளர்ந்த காலகட்டம் என்பது வேற. அங்கே அவர் பார்த்த உலகம் என்பது வேற, இப்பொது மருமகள் வளர்ந்த அல்லது வளரும் சூழல் வேற. அதனால் அந்த generation gapஇருக்கும். இதில் மாமியார் எதிர்பார்ப்பை மருமகளும், மருமகள் எதிர்பார்ப்பை மாமியாரும் காண்க தவறுகிறார்கள் .

Advertisment

இந்த எதிர்ப்பரப்பின் ஏமாற்றத்தை, ஒரு சில வார்த்தை மனதை நோக்கக்கடிக்கும் படி பேசிவிடுவதுண்டு. அதை மனதளவில் எடுத்துக் கொள்ளாமல்,விட்டு கொடுத்துப் போனால்நல்லது . அவர்கள் கூறிய ஏதோ ஒன்று உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை மனதிற்குள் வைத்துக்கொள்ளாமல், மனம் திறந்து,இது பிடிக்க வில்லை, “சரி மாற்றிக்கொள்ளலாம் என்று பேசிவிட்டால் இருவருக்கும் நல்லது. குடும்பத்திற்கும் நல்லது.

பாராட்டு >>>>> ஆளுமை

அவர்கள் செய்யும் சின்னச்சின்ன விஷயங்களுக்கு நன்றி அல்லது அவர்களைப் பாராட்டினால், அவர்களுக்கு உங்கள் மீது ஒரு நல்ல பிம்பம் ஏற்படும். அவர்கள்,சில நேரங்களில் ,உங்களுக்கு மிகவும் மன அழுத்தம் தரலாம், இருந்தாலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போனால்,அவர்களும் இறங்க வாய்ப்பிருக்கு. குடும்பத்தில் இருவரும் ஒரே மாறி இருந்தால், குடும்பத்தின் மேன்மைக்கு கடினமாக இருக்கும். இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தால் , மற்றொருவரும் மாற வாய்ப்பிருக்கு.இது மருமகள், மாமியார்கள் இருவருக்கும் பொருந்தும்.

mm2

Advertisment

ஒரு மனிதர்க்கு கோவம் எதனால் வரும் என்று ஆராய்ந்து பார்த்ததில், ஒருத்தர் மன சோர்வு, உடல் சோர்வு, அல்லது பசியில் இருந்தால்வரும் என்கிறது. நீங்கள் அவர்களுக்குவீட்டுவேலைக்கு உதவவில்லை என்றாலும் பரவாவில்லை, அவர்கள் செய்யு விலைக்கு முடிந்த வரை பாராட்டுங்கள். மாமியார்கள் பொறுத்த வரை ஒரு முப்பது முப்பத்தைந்து வருடங்கள் வேலை வேலை ஓடி மருமகள் வந்து விட்டால், அவர்கள் கொஞ்சம் rest எடுக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அது இயல்பு தான். அதுவே மருமகள் செய்யும் முறையை குற்றம் சொல்ல வேண்டாம். பெரிய விஷயங்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் சமைக்கும் சாப்பாட்டை சுவைத்து "நன்றாக இருக்கிறது" என்று கூறினால் அதுவே ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

இரண்டும் பெரும் , குடும்பத்தை ஒரு அலுவலகம் என்று எண்ணாமல் , Dominant ஆக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. வெறும் சுவர்கள் அல்ல வீடு, உள்ளே இருக்கும் மனிதர்களே அதை வீடாக மாற்றுகிறார். அதனால் control எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஏதோ ஒரு விஷயம் அவர்கள் செய்ததில் பிடிக்கவில்லை என்றால், அதை பெருசாகாமல், அன்பால் சொன்னால் , இன்னும் உங்கள் இருவரின் உறவு வலுவாக்கும்.

Give respect,Take respect!

இதனை நாள் தன் மகனுடன் வாழ்ந்து, அவர் எல்லாத்தநிற்க்கும், "அம்மா அம்மா" என்று அழைப்பதுண்டு. ஆனால் கல்யாணமானபிறகு அந்த கணவர் என்னிடம் தான் அனைத்தையும் கேக்க வேண்டும் என்று மருமகளும், என்னிடம் இருந்து பையனைப் பிரித்து விட்டார் என்று மாமியாரும் நினைப்பது உண்டு.

Advertisment

mm5

ஆரம்பத்தில் பாச மழையில் நினையும் இருவர், அப்படியே படிப்படியாக குறைந்து எலியும் பூனையுமாம் மாறிவிடுவார்கள். அதற்க்கு முன்னரே "Expectations" break செய்யும் படி மனம் திறந்து பேசுதல் நல்லது. நாங்கள் இரண்டு பேருக்கும் ஒன்று சொல்ல ஆசை படிக்கிறோம். 

To மருமகள்: நீங்கள் உங்கள் மாமியாரை அம்மாவை போல் நடத்துவது கடினம் என்று நினைத்தால் (அது தனிமனிதர் விருப்பம்), ஆனால் மரியாதை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். வயதில் மற்றும் அனுபவத்தில் மூத்தவர். கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல. அதனால் மரியாதையுடன் நடத்துங்கள்.

Advertisment

To மாமியார்: உங்கள் பெண் வயது தான் அவளுக்கும். அதனால் கொஞ்சம் பொறுத்துக் கொண்டு இருந்தால் நல்லது. வயதில் சிறுவர், அந்த துறுதுறு தன்மை இருக்கும். உங்கள் காலக்கட்டத்தில் நீங்கள், உங்கள் மாமியாரிடம் இருந்தது போல இந்த காலகட்டத்தில் இருக்க முடியாது அதனால் உங்களது expectationsயை குறையுங்கள்

கடைசி காலங்களில்,வாழ்வில் திரும்பி பார்த்தால், இந்த உறவு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். ஏற்ற தாழ்வு இருக்கும் அதையும் தாண்டி இந்த உறவு ஒரு நல்ல நினைவுகள் தர வேண்டும்.

Suggested Reading: 

Job 'ஆ எங்களுக்கு நாங்களே வைத்த ஆப்பு!!

Suggested Reading: 

motherinlaw daughterinlaw healthyrelationship