இதை கேட்ட நான், பொழுது போவதற்காக அவர்களிடம் பேச தொடங்கினேன். பேச்சுவாக்கில் அவர்களது வேலைகளைப் பற்றி விவரித்த பொழுது தலைவிகள் யாரும் வேலைக்கு செல்லவில்லை என்று நான் அறிந்தேன்.
அப்போது தான் தோன்றியது, சம்பாத்தியத்தின் முக்கியத்துவத்தை இன்னும் அழுத்தமாக தெரியப்படுத்த வேண்டும் என்று.
இந்த காலக்கட்டத்தில் கணவர் மனைவி இருவரும் சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்தால் மட்டுமே குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளமுடியும். குடும்பத்திற்காக சம்பாத்தியம் ஒரு பக்கம் இருந்தாலும், தனக்கான சேமிப்பு மிகவும் அவசியம். அது அவளுக்கானது. கணவரிடம் ஒவ்வொரு பொருட்களுக்கும் பொய் நிற்க வேண்டாம் அல்லவா. அது மட்டுமல்ல, அவளுக்கு பிடித்த மாறி வாழலாம். பிடித்த உடை, பிடித்த இடத்திற்கு சுற்றுலா, பிடித்த உணவை வாங்கி சாப்பிடலாம்.
இதற்குத்தானா சுய சம்பாத்தியம்? சேமிப்பு எல்லாம் பயன் ஆகுமா? என்று கேட்டால், இது இல்லாமல் நிறைய மாற்றங்கள் உங்களிடம் உருவாக்கும். சிந்தனைச் செயல்பாடு, மன ரீதியாக, உடல் ரீதியாக நல்ல மாற்றங்கள் உருவாகும். நல்ல எண்ணங்கள் உங்களை சுற்றி இருக்கும். அதை விவரமாக பார்ப்போம் இந்த கட்டுரையில்.
மரியாதை மற்றும் நேர்க்கோடு சிந்தனை
/stp-tamil/media/media_files/3wt8z2DISo8i6Dy6lXem.jpg)
சம்பாதிக்க ஆரம்பித்த உடன் உங்கள் மீது நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் வைத்திருக்கும் மரியாதை மாறும். அது வரைக்கும் உங்களையும், உங்கள் பரிந்துரைகளையும் பெரியதாக எடுத்துக்காதவர்கள் நீங்கள் சம்பாதிக்ககிறீர்கள் என்றால் தானாகவே எடுத்துக்கொள்ளுவர்கள். சம்பாதிக்கும் பெண்கள் மீது இந்த சமுதாயம் வைக்கும் மரியாதை மற்றும் முன்னுரிமைகள் வேற. அது மட்டுமல்லாமல் "நிதி ரீதியாக சுதந்திரம் " (financially independent) ஆக இருப்பீர்கள். உங்கள் தேவையை நீங்களே பார்த்துக்கொள்ளும் திறன் வந்துவிடும்.
உங்கள் வாழ்க்கையில் தெளிவான சிந்தனையில் முடிவு எடுப்பீர்கள். ஏனென்றால் உங்களது திட்டங்கள் அடுத்து "இன்னும் எப்படி அடுத்த கட்டம் போகலாம்" என்ற சீரான நோக்கத்தில் ஓடுவீர்கள். அதனால் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பதினால் உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாடு உங்களிடம் இருக்கும்.
தைரியம், துணிச்சல் - இரு கண்களாக இருக்கும்.
மேலும் சம்பாதிப்பதால், வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை இன்னும் எளிதில் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் புதிய உலகிற்கு அறிமுகமாகவீர்கள். அவர்களிடம் பேசி பழகுவீர்கள், அவர்களிடம் இருந்து புதிதாக பல விஷயங்கள் கற்றுக் கொள்வீர்கள். அது உங்கள் வாழ்க்கையை மேன்படுத்த உதவும். தினம் தினம் நீங்கள் மன ரீதியாக வலுவாவீர்கள் .
அதையெல்லாம் தாண்டி நீங்க தைரியமாக இருப்பீர்கள், எந்த சூழ்நிலையும் துணிச்சலாக இருப்பீர்கள்.
பணம் இருந்தால் தான் இதெல்லாம் எங்களுக்கு இருக்குமா? என்று கேட்டால் அதற்க்கு பதில், "தைரியம் , துணிச்சல் எல்லாம் நம்முள் இருக்கும் ஒன்று அதை வெளியில் கொண்டு வரும் ஒரு கருவியாக தான் இந்த சம்பாத்தியம் இருக்கிறது" என்று நான் கூறுவேன்.
1000 வழி இருக்கு தோழி
/stp-tamil/media/media_files/l9NtfPINieA4HcrQvFRY.jpg)
நாங்கள் எல்லாம் படிக்கவில்லை. இப்போது எல்லாம் வீட்டு வேலைக்கு போக வேண்டும் என்றாலும் அதற்கும் போட்டிகள் அதிகம். அப்படி இருக்கும் பொழுது படிக்காதவர்கள் எங்க வேலைக்கு செல்வார்கள்?
சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தால், அதற்க்கு 1008 வழி இருக்கிறது. வீட்டில் இருந்ததே சம்பாதிக்கும் முறைகள் நிறையாக இருக்கிறது. அதற்க்கு முதலில் உங்களது plus என்னவென்று அறிய வேண்டும். அதற்க்கு ஏற்ற மாறி வேலைக்கான தேவைகளை ஆரம்பிக்கெல்லாம்.
ஒரு பெண் சம்பாதிக்குறாள் என்றால் அவள் மட்டுமல்லாமல் அவள் குடும்பமும், அவளால் அடுத்தக் கட்டம் செல்கிறது. அதனால் சுய சம்பாத்தியம் ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமானது . நூறு ரூபாயாக இருந்தாலும் சரி ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி அது அவளுக்கான சேமிப்பு. அது கண்டிப்பாக ஒரு நாள் அவளுக்கு கைக்கொடுக்கும்.
Suggested Reading: Breast cancer- சுய பரிசோதனை செய்வது எப்படி?
Suggested Reading: Working Women - க்கு கண்டிப்பாக உரிமை இருக்கிறது!
Suggested Reading: 2023இல் "பெண் சுதந்திரம்"(women freedom) யாரிடம் உள்ளது?
Suggested Reading: Arranged marriage செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!