Advertisment

பெண்களின் முன்னேற்றத்தை ஏன் ஆண்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்?

author-image
Devayani
New Update
women films

சென்னையில் வெற்றி திரையரங்கில் வெளியே பெண்களை மையமாக கொண்ட திரைப்படத்தின் பேனர்கள் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் நயன்தாரா நடித்த கனெக்ட், த்ரிஷா நடித்த ராங்கி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா மற்றும் கோவை சரளா நடித்த செம்பி பேனர்கள் உள்ளது. இது தென்னிந்திய திரை உலகில் பெண்களின் சித்தரிப்புகள் மாறி வருகிறது என்பதை உறுதி செய்கிறது. 

Advertisment

புகைப்படத்துடன் கூடிய இந்த ட்வீட் வைரலான நிலையில், நடிகை சமந்தாவும் இதை பார்த்து அதற்கு "Women Rising!" என்று ட்வீட் செய்துள்ளார். சமந்தா பதிவிட்ட இந்த பதிவுக்கு ஒருவர் "Yes. Just to fall" என்று பதில் அளித்து இருந்தார். சமந்தா இந்த ட்வீடுக்கு "Getting back up makes it all the more sweeter, my friend" என்று பதில் அளித்து இருப்பார்.

ஏன் ஆண்களால் லட்சியத்துடன் இருக்கும் பெண்களை ஆதரிக்க முடியவில்லை? ஏன் அவர்கள் பெண்களை தாழ்ந்தவர்களாகவே நினைக்கின்றனர்?

ஏன் லட்சியம் என்ற வார்த்தை பெண்களுடன் தொடர்பு கொள்ளும்போது எதிர்மறையான மாறுகிறது. இன்னும் நாம் ஆணாதிக்கம் உள்ள இந்த சமூகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். இந்த சமூகம் ஆண்கள் தான் எப்பொழுதும் வேலைக்கு சென்று குடும்பத்திற்காக சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறது. எந்த ஒரு பெரிய வேலையும் அல்லது மதிப்பான வேலையும் பெண்களுக்கானது இல்லை என்பதை மீண்டும் மீண்டும் இந்த சமூகமே நினைக்கிறது?

Advertisment

இந்த தடைகள் எல்லாம் உடைத்து பல பெண்கள் அவர்களின் திறமைகளை பல இடத்தில் நிரூபித்துள்ளனர். இருந்தும் லட்சியமுடைய ஒரு பெண் என்றால் அவர்களை கண்டு இந்த சமூகம் ஏன் பயப்படுகிறது. பெண்களுக்கு ஏன் எப்பொழுதும் ஆதரவும் அவர்களுக்கான அங்கீகாரமும் கிடைப்பதில்லை?
இது இப்பொழுது மட்டுமல்ல காலம் காலமாக இந்த நிலை தான் நிலவி வருகிறது. பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் பாராட்டு என எதுவும் கிடைப்பதில்லை.

ps

உதாரணத்திற்கு சோழ இளவரசி குந்தவையை எடுத்துக் கொள்ளலாம். அவள் பயங்கரமான திறமைசாலி, அரசியலில் அவரைப்போல முடிவுகள் எடுக்க யாரும் இல்லை மற்றும் தேச பக்தி உடையவராக திகழ்ந்தாள். ஆனாலும் பொன்னியின் செல்வன் வருவதற்கு முன் அவரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஏன் வரலாற்று புத்தகங்களில் கூட அவளின் பங்களிப்பும், சோழ நாட்டை விரிவடைய செய்ய அவளின் திட்டங்களும் பேசப்படுவதில்லை. நாம் அனைவரும் ராஜராஜ சோழன் பற்றியும் மற்ற ஆண்களைப் பற்றியும் தான் படித்தோமே தவிர அவர்களின் வெற்றிக்கு பின்னாடி குந்தவை என்று ஒரு பெண் இருந்தால் என்பதை எந்த ஒரு புத்தகமும் கூறவில்லை.

Advertisment

ஒரு கணக்கெடுப்பின்படி 33 சதவீத திருமணமான பெண்களே வேலைக்கு செல்கின்றனர். பல ஆண்கள் வெற்றிகரமாக வேலை செய்யும் பெண்களை, அவர்களைவிட பணம் அதிகம் சம்பாதிக்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ள மறுக்கின்றனர். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் பெண்கள் நல்ல படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில் அவள் திருமணத்திற்கு பிறகு வேலையை விட்டுவிட்டு வீட்டையும், குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அப்படியே அவள் வேலைக்கு சென்றாலும் அவள் தன் கணவனை விட அதிக வெற்றியடைவது அவர்களால் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

aanathikam

ஏன் இந்த வேறுபாடு? ஏன் ஆண்களால் அவர்களின் துணை அதிகமாக சம்பாதிப்பதையும், வெற்றியடைவதையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை? ஏனென்றால் இதை தான் பல ஆண்டுகளாக ஆணாதிக்கம் மக்களின் மனதில் பதிய வைத்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் வேலைக்கு சென்றாலும் அடிப்படை கடமையாக வீட்டு வேலையையும், குழந்தையையும் அவள் தான் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் ஆண்கள் அந்த வேலையில் பங்கு கொள்ளாமல் இருப்பதை யாரும் எதுவும் கேட்பதில்லை.

Advertisment

இன்னும் பல வீடுகளில் பெற்றோர்கள் தங்களின் மகனின் படிப்பிற்காக செலவு செய்ய தயாராக உள்ளனர். அதுவே மகள்களின் படிப்பிற்காக செலவு செய்ய தயங்குகின்றனர். இதுபோன்ற குடும்ப சூழலில் வளரும் ஒரு ஆண் பெண்களை தாழ்மையாக நினைத்துக் கொள்கிறான். அவர்கள் தனது துணையின் கனவுகளையும், லட்சியத்தையும் மதிக்காமல் பெண்கள் என்றால் ஒரு நல்ல மனைவியாக, தாயாக மட்டும் தான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

அதனால் அவர்களால் பெண்கள் லட்சியத்துடன் இருப்பதையும், வெற்றிகரமாக இருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் இந்த ஆணாதிக்க சமூகத்தில் ஒரு ஆணால் அவனின் மனைவியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லை என்றால் அதனை அவமானமாகவே கருதுகின்றனர்.
இன்னும் ஏன் இந்த சமூகம் பாலின பாகுபாட்டையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறது. கணவனை விட பெண் அதிகமாக படித்திருந்தால் என்ன? அவளுக்கு நல்ல வேலை இருந்தால் என்ன? அவள் அதிகமாக சம்பாதிப்பதால் என்னவாக போகிறது? இதையெல்லாம் நினைத்து ஒரு ஆண் பெருமைப்பட தானே வேண்டும்? 

இலட்சங்களை உடைய பெண்கள் சமூகத்திற்கு தீங்காக பார்க்காமல், ஆண்கள் அவர்களை ஆதரித்து நடந்து கொள்ள வேண்டும். பெண்கள் அவர்களின் கனவுகளையும், ஆசைகளையும் அணாதிக்கத்தின் காரணமாக விட்டுக் கொடுக்கக் கூடாது. அவர்களின் திறமைகளையும், திறன்களையும் இந்த ஆணாதிக்க மனிதர்களை கொண்ட சமூகத்தை சமாதானப்படுத்த அவர்கள் இறங்கி வரக்கூடாது.

tamil cinema women centric
Advertisment