ஜெயா என்ற பெண்மணி குடும்ப வன்முறையிலிருந்து அவளை எப்படி பாதுகாத்துக் கொள்கிறாள் மற்றும் அவளின் வாழ்க்கையை எப்படி வழி நடத்துகிறாள் என்பது தான் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் கதை.
இந்த திரைப்படம் பல முக்கியமான விஷயங்களை எடுத்துரைக்கிறது. உதாரணத்திற்கு, படிப்பின் முக்கியத்துவமும், ஒரு பெண் பணரீதியாக சுதந்திரமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்றும், வீட்டில் நிலவும் பாலின பாகுபாடும் மற்றும் குடும்பங்களில் பெண்களை எப்படி தாழ்மையாக நடத்துகிறார்கள் என்பதையும் இந்த திரைப்படம் அழகாக எடுத்துக்காட்டி உள்ளது.
இது அனைத்துமே நாம் அனுபவித்து இருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம் அல்லவா?
ஜெயா பிறந்ததிலிருந்து பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நம்பும் ஒரு குடும்பத்தில் வளர்ந்து இருப்பாள். ஜெயா பிறந்தவுடன் அவரின் தந்தை அவளை கையில் ஏந்தி "நான் இவளை இந்திரா காந்தி போல வளர்க்க வேண்டும்" என்று கூறிய போது அவளுடைய மாமா அதற்கு "ஆனால், அவளுக்கு முடி பெரிதாக இருப்பதை உறுதி செய், இல்லையெனில் திருமணம் ஆகாது" என்று கூறியிருப்பார்.
ஒரு பெண்ணின் திருமணத்திற்காக நிறைய சேர்த்து வைக்க வேண்டும் அதனால் அவளது படிப்பில் நிறைய செலவு செய்ய வேண்டாம் என நினைத்து, அவள் வளரும் போது அவள் அண்ணன் பயன்படுத்திய பொம்மைகள், உடைகள் மற்றும் புத்தகத்தை அவளுக்கு வழங்குவார்கள். இதுபோன்ற காட்சிகள் இந்த குடும்பம் ஆணாதிக்கம் நிறைந்தது என்றும் இங்கு ஆண்கள் தான் முடிவுகள் எடுப்பார்கள், பெண்கள் அதை ஒற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்கிறது.
அவள் பருவ வயதை அடைந்த பிறகு அவள் குடும்பம் பாலியல் வேறுபாடை காண்பிக்கிறது என்பதை புரிந்து கொண்டாள். இருந்தும் ஒரு தைரியமான பெண்ணாக இருந்து அவளுக்கு மானுடவியல் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை கூறினால். ஆனால், அவளின் பெற்றோர் அவளை BA மலையாளத்தில் வலு கட்டாயமாக சேர்த்து விடுவர்.
அங்கே அவள் ஒரு பேராசிரியர் மீது காதல் கொள்வாள். அவர் பார்ப்பதற்கு இவள் குடும்பத்தில் இருப்பவர்கள் போல் இல்லாமல் முற்போக்கு எண்ணங்களை கொண்ட மனிதனாகவே தோன்றினார் மற்றும் பெண் உரிமைகளை பற்றியும் பேசுவார். ஆனால் அவரின் மறுபக்கம் ஒரு ஆணாதிக்கவாதியாக இருப்பது அவளுக்கு தெரிய வந்தபோது அவளின் முழு வாழ்க்கையும் அவர் கட்டுப்படுத்த தொடங்குவார். பிறகு இந்த உறவு அவர் அவளை அறைந்த பிறகு முடிந்துவிடும்.
ஜெயாவின் வீட்டில் அவளின் காதல் உறவை பற்றி அறிந்தவுடன் அவளுக்கு உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுத்து விடுவார்கள். மாப்பிள்ளை உடன் ஜெயாவின் முதல் சந்திப்பு ஒரு சிவப்பு கொடியாகவே இருந்தது. ராஜேஷ் தனது கோழி வியாபாரத்தை பற்றி மட்டுமே பேசும்போது சுயநலவாதியாக இருந்தது ஜெயாவை சங்கடப்படுத்தியது.
ஜெயா திருமணமானதிலிருந்து உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டாள். ராஜேஷ் நச்சுத்தன்மையின் முழு உருவமாக இருந்தான்.
ஒவ்வொரு முறையும் அளித்த பிறகு ஒரு பேச்சுக்கு மன்னிப்பை கூறி படம் பார்க்க செல்வது, சாப்பிட செல்வது என அழைத்துச் செல்வான். அப்பொழுதும் அவளின் விருப்பங்களை கேட்காமல் அவனே அனைத்து முடிவுகளையும் எடுப்பான். ஜெயா அவளின் வீட்டில் தனக்கு நடக்கும் கொடுமைகளை கூறிய போது எல்லார் வீட்டிலும் கூறுவது போல அவள் வீட்டிலும் "ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள், மனைவியை அடிப்பதெல்லாம் சாதாரணமான விஷயம்" என கூறுவர்.
பெண்கள் தான் பொறுமையாக அனுசரித்து செல்ல வேண்டும் என்று அவளின் குடும்பத்தினர் அவனுக்கு ஆதரவு அளிக்காமல் இருப்பர். ஜெயா 21 அடிகளை பொறுத்த பிறகு, அவளை தற்காத்துக் கொள்ள முடிவு செய்வாள். அதனால் YouTube மூலம் தற்காப்பு கலையை கற்றுக் கொள்வாள். ஒரு நாள் ராஜேஷ் அவளை அறைய வரும்போது அவனை தற்காப்பின் மூலம் அடிப்பான்.
ஜெயாவிற்க்கு எதிரான ராஜேஷ் செய்த கொடுமைகள் "ஆண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள்" என்று கண்டு கொள்ளாமல் இருந்தது. ஆனால் அதுவே ஜெயா தற்போது அவனை அடித்தது குடும்பத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கியது. எனவே, இரு குடும்பங்கள் ஒன்று கூடி பொய்யான ஒரு சமாதானத்தை செய்து வைத்து, மறுபடியும் இதுவரை ஒன்று சேர்ந்து வாழ அறிவுறுத்தியது.
ஆனால் ராஜேஷின் சகோதரர் "பெண்களின் இடம் வீட்டில் மட்டும் தான் இருக்க வேண்டும்" என்று ராஜேஷுக்கு அறிவுரை கூறினார். ஜெயா அவர்களின் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்கிறாள். அனைவரும் அவளை கடுமையாக நடந்து கொள்கிறாள் என்றும், அவளின் வாழ்க்கையை அவளே கெடுத்து கொள்கிறாள் என்றும் அவளை குறை சொல்ல தொடங்கினர்.
ஜெயாவுக்கு கடைசியில் அந்த உறவிலிருந்து வெளிவரும் தைரியம் வந்தது. அனைவரும் அவள் படிப்பை முடிக்காதவள் என்றும் பணரீதியாக அவளிடம் சுதந்திரம் இல்லை என்றும் குறை கூற ஆரம்பித்தபோது அவர்கள் தான் அவளது படிப்பை நிறுத்தி திருமணம் செய்து வைத்தனர் என்பதை புரிந்து கொள்ள தவறுகின்றனர். அவள் அந்த உறவை விட்டு வந்த பிறகு அதிசயமாக அவளின் அண்ணன் அவளை புரிந்துகொண்டு ஆதரவு அளிக்கிறான்.
பிரிந்த இருவரும் கோர்ட்டில் விவாகரத்து பதிவு செய்கின்றனர். அந்த நீதிபதி பெண்கள் "நியாயம், சமத்துவம், சுதந்திரத்திற்கு உரிமையாளர்கள்" என்று கூறி தீர்ப்பளிக்கிறார். இந்த படம் இறுதியில் இது போன்ற நல்ல திருப்பங்களுடன் அமைந்துள்ளது.
இது இந்த சமூகத்தில் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்றும் நல்ல பெண்கள் என்றால் அனுசரித்துக் கொள்வது, சமைப்பது மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்றது போல் இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவி வருவதையும், அதனால் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் விளக்கியுள்ளது.