நடிகர் விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தின் தலைப்பு தயாரிப்பாளர்களான செவன் கிரீன் ஸ்டுடியோஸ்(Seven Green Studios) மூலம் வெள்ளிக்கிழமை விளம்பரத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் பல்வேறு காரணங்களுக்காக பார்வையாளர்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ளது. முக்கியமாக இது லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸில்(Lokesh Cinematic Universe) ஒரு பகுதியாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதை அடுத்து நீண்ட கால இடைவேளைக்கு பின் இறுதியாக படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு லியோ: பிளடி ஸ்வீட்(Leo: Bloody Sweet) என்று தெரியவந்துள்ளது. ஆக்சன் திரில்லர் படமான இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் மற்றும் செவன் கிரீன் ஸ்டுடியோ திரைப்படத்தை தயாரிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இது LCUவில் ஒரு பகுதியாக இருக்குமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
ட்விட்டரில் தளபதி 67 தலைப்பை வெளியிடும் ப்ரோமோவை பகிர்ந்த தயாரிப்பாளர்கள் "உங்களைப் போலவே நாங்களும் உற்சாகமாக இருக்கிறோம். உங்கள் அனைவரின் அன்புடனும், ஆதரவுடனும் தளபதி 67 என்ற திரைப்படத்தை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று பதிவிட்டுள்ளனர்.
இந்த தலைப்பை வெளியிடும் ப்ரோமோவில் விஜயின் தோற்றம் புதுமையாக இருக்கிறது என்றும் இதற்கு முன் இப்படி விஜயை எந்த படத்திலும் பார்த்ததில்லை என்றும் மக்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்தத் தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இந்த ப்ரோமோ விக்ரம் டைட்டில் ரிலீஸ் ப்ரோமோவை போலவே உள்ளது. விக்ரமில் கமலஹாசன் தென்னிந்திய உணவுகளை தயார் செய்வதாகவும், லியோவில் விஜய் சாக்லேட் வகைகளை தயாரிப்பது போலவும் காட்டப்படுகிறது. சாக்லேட் தயாரிக்கும் காட்சிகளுக்கு இடையே விஜய் வாளை தயாரிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ப்ரோமோவின் முடிவில் விஜய் இருக்கும் இடத்தை நோக்கி கார்களின் அணிவகுப்பு வருவது போல காட்டப்படுகிறது மற்றும் விஜய் தனது வாளை சாக்லேட்டில் மூழ்கி எடுத்து தயாராக நிற்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த பின்னணி இசை அபாரமாக இருந்தது மற்றும் எதிர்பார்ப்பை உயர்த்தியது. இந்த டைட்டில் ரிலீஸ் ப்ரோமோ மூன்று நிமிடங்களுக்கும் குறைவாகவே இருந்தது. இருப்பினும் அது படத்தின் எதிர்பார்ப்பை மூன்று மடங்கு உயர்த்தி ரசிகர்களை பிரமிக்க வைக்கிறது.
விக்ரம் மற்றும் லியோ தலைப்பு வெளியீட்டு வீடியோவில் இருக்கும் ஒற்றுமைகளை பார்த்தும், படங்களில் உள்ள ஒற்றுமைகளை வைத்தும் திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸில்(Lokesh Cinematic Universe) ஒரு பகுதியாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இருப்பினும் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
ஒட்டுமொத்தமாக டைட்டில் ரிலீஸ் ப்ரோமோவை பார்த்த பிறகு இத்திரைப்படம் ஒரு அற்புதமான ஆக்சன் திரில்லர் என்று உறுதி அளிக்கிறது. லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இது ஒரு முழுமையான காட்சி விருந்தாக இருக்கிறது.
பட குழுவினர்:
கடந்த இரண்டு நாட்களாக தயாரிப்பாளர்கள் லியோ(Leo) திரைப்படத்தின் நடிகர்களை ஒவ்வொருவராக வெளியிட்டு வருகின்றனர். விஜய் கதாநாயகனாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார். அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தாத், மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான் மற்றும் நடன இயக்குனர் சாண்டி ஆகியோரும் பட குழுவில் உள்ளனர். கைதி திரைப்படத்தில் நடித்த ஜார்ஜ் மரியன் தளபதி 67 பூஜையில் காணப்பட்டார். மேலும் விக்ரம் நட்சத்திரமான வசந்தி (ஏஜென்ட் டினா) அவர்களும் காஷ்மீருக்கு சென்று பட குழுவினருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
லியோ: பிளடி ஸ்வீட் (Leo: Bloody Sweet) அக்டோபர் 19, 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது தீபாவளியுடன் இணைந்து இருக்கும் என்பதை நினைத்து பார்வையாளர்களின் கொண்டாட்டம் இரட்டிப்பாக்கிறது.
Suggested Reading: பிப்ரவரி 2023இல் வெளியாக உள்ள பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்கள்
Suggested Reading: மன ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள ஐந்து எளிமையான வழிகள்