பிப்ரவரி 2023இல் வெளியாக உள்ள பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்கள்

author-image
Devayani
Feb 04, 2023 18:21 IST
women centric movie list

கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் பெண்களை காண்பிக்கும் விதங்கள் மாறி வருகிறது. பெண்களின் கதாபாத்திரங்களும், படத்தில் அவர்களை காட்சிப்படுத்துவதும் முன்பை விட தற்போது நிறையவே மாறி உள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களும் நிறைய வருவதை நாம் பார்க்க முடிகிறது. இந்த பிப்ரவரி 2023 வெளிவர இருக்கும் பெண்களை மையமாக கொண்ட படங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

பிப்ரவரி 2023இல் வெளியாக உள்ள பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்கள்:

சகுந்தலம்(Shaakuntalam):

Samantha shaakuntalam

Advertisment

சமந்தாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல மொழி படமான சகுந்தலம் பிப்ரவரியில் வெளிவர தயாராக உள்ளது. இந்த காதல் புராணத்தை குணசேகர் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். 2023இன் சமந்தாவின் முதல் பெரிய திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படம் நவம்பர் 2022 வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் பார்வையாளர்கள் இந்தப் புராணக் காதல் கதையை 3டி வடிவத்தில் அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தால் தாமதமாக வெளியாகிறது. இப்படம் காளிதாசனின் 'அபிஜன சகுந்தலம்' என்ற புகழ்பெற்ற சமஸ்கிருத கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் சகுந்தலா மற்றும் துஷ்யந்த்தின் காதல் புராண கதையை விவரிக்கிறது. சகுந்தலாவாக சமந்தா நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக கிங் துஷ்யந்த் வேடத்தில் தேவ் மோகன் நடிக்கிறார். சகுந்தலம் திரைப்படம் பிப்ரவரி 17, 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தி கிரேட் இந்தியன் கிச்சன் (The Great Indian Kitchen):

the great indian kitchen aishwarya rajesh

Advertisment

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் மலையாளத்தில் அதே பெயரில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் ரீமேக் ஆகும். இந்த தமிழ் ரீமேக்கை ஆர் கண்ணன் இயக்கியுள்ளார், சவரி இதை எழுதியுள்ளார், ஆர் டி சி மீடியா கீழ் துர்கரம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரஹில் ரவீந்திரன் நடித்துள்ளார். 

இத்திரைப்படம் பெண்கள் ஆண்களுக்கு அடிபணிய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு ஆணாதிக்க குடும்பத்தில் திருமணமாகிய ஒரு பெண்ணின் கதை ஆகும். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் பெரிய வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து இது தமிழிலும் ரீமிக்ஸ் செய்யப்பட்டு தற்போது வெளியாக தயாராக உள்ளது. தி கிரேட் இந்தியன் கிச்சன் பிப்ரவரி 3, 2022 அன்று வெளியாக உள்ளது.

லாஸ்ட் (Lost):

Advertisment

Lost yami gautham.png

யாமி கௌதம் நடித்த லாஸ்ட் திரைப்படம் ஹிந்தி திரில்லர் திரைப்படமாகும். இதனை அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கியுள்ளார் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் உடன்  நம பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் இளம் நாடக ஆவலர் திடீரென காணாமல் போனதை குறித்த கதையில் பணிபுரியும் ஒரு இளம் குற்ற நிருபரின் கதையை விவரிக்கிறது. ஊடகத்தின் மறக்கப்பட்ட நேர்மை மற்றும் மதிப்புகளை முன்னிலைப்படுத்துவதே திரைப்படத்தின் நோக்கம் ஆகும். இப்படத்தில் பங்கஜ் கபூர், ராகுல் கண்ணா, நீல் பூபாலம் மற்றும்  பியா பாஜ்பி நடித்துள்ளார். திரைப்படம் பிப்ரவரி 16, 2023 திரையரங்குகளில் வெளியாகும்.

கிறிஸ்டி (Christy):

Advertisment

Malavika mohan christy

மாளவிகா மோகன் நடித்த கிறிஸ்டி படத்தை ஆல்வின் ஹென்றி இயக்கியுள்ளார் மற்றும் ராக்கி மவுண்டன் சினிமாஸ்(Rocky Mountain Cinemas) தயாரிப்பு கீழ் சஜி செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் தயாரித்துள்ளனர். இப்படத்தில் மேத்யூ தாமஸ் நடித்துள்ளார். படத்தில் கதையை குறித்து அதிக தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் இப்படம் ஒரு வயதான பெண்ணிற்கும் இளைய ஆணுக்கும் இடையிலான காதல் கதையை விவரிக்கிறது. இந்த படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது டீசர் மூலம் தெரிய வந்துள்ளது. கிறிஸ்டி பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Suggested Reading: சாய்பல்லவி கூறிய ஊக்குவிக்கும் வாக்கியங்கள்

Advertisment

Suggested Reading: இலக்குகளை நோக்கி செல்ல நயன்தாரா கூறும் ஐந்து அறிவுரைகள்

Suggested Reading: சமூகத்தில் உள்ள பாகுபாட்டை பற்றி தமிழ் நடிகைகள் கூறும் விஷயங்கள்

#Christy #Lost #The Great Indian Kitchen #shaakuntalam #women centric movies