துணிவு, வாரிசு படம் எப்படி இருக்கு? எதை பார்க்கலாம்?

author-image
Devayani
New Update
fdfs

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படம் பொங்கல் திருநாளையொட்டி வெளியாகி உள்ளது. இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் உலகமெங்கும் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தற்போது அது வெளியாகியுள்ள நிலையில் அனைவரும் அதை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இரண்டு படத்தை பற்றியும், மக்களின் கருத்துக்களை பற்றியும் பார்ப்போம். 

துணிவு:

Advertisment

vijay
ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் அவரின் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை கொண்டு இருந்தது. இதற்கு முன் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த வெளிவந்த வலிமை திரைப்படம் சில எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதையெல்லாம் மறக்க வைக்கும் படி துணிவு திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

துணிவு திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்ததிலிருந்து நம்மால் இது வங்கியை கைப்பற்றி அதில் இருப்பவர்களை பணையகைதிகளாக வைத்து ஒரு கும்பல் செய்யும் வேலை என தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த கும்பலுக்கு அஜித் தான் தலைமை தாங்குகிறார் என்பது தெரியவந்தது. அது மட்டும் இன்றி பல ஆக்சன் காட்சிகளை கொண்டுள்ள படம் என்பது தெளிவாகவே தெரிந்தது. துணிவு படத்தை பார்த்து ரசிகர்கள் பில்லா, மங்காத்தாவில் இருந்த வின்டேஜ் அஜீத் குமாரை மீண்டும் இதில் பார்க்க முடிகிறது என்று கூறுகின்றனர். 

மேலும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பது அஜித்திற்கு கைவந்த கலை என்றும் பாராட்டி வருகின்றனர். இந்தப் படத்தில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருந்ததாகவும், அதனுடன் சேர்ந்து சமூக கருத்தும் இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த திரைப்படத்தை குடும்பங்களுடன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்து, பொங்கலை கொண்டாடலாம்.

வாரிசு: 

Advertisment

ajith
தெலுங்கு திரைப்பட இயக்குனரான வம்சியின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படமும் இன்று திரைக்கு வந்தது. விஜயின் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனென்றால் கடைசியாக ஏப்ரல் 2022ல் தான் விஜயின் படமான பீஸ்ட் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் சில எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. 

இந்த நிலையில் வாரிசு டிரெய்லர் வெளியான போது அதிலிருந்து இது குடும்பத்துடன் பார்க்கும் ஒரு படம் என தெரிய வந்தது. இப்படத்தில் குடும்ப செண்டிமெண்ட்கள் இருப்பதாகவும், ஒரு வணிக குடும்பத்தின் கதையாகவும் இப்படம் இருக்க கூடும் என டிரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. 
இத்திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள், விஜய் ஒரு நல்ல நடிகர் என மீண்டும் நிரூபித்துள்ளதாக கூறுகின்றனர். படத்தில் வரும் கதாபாத்திரமாகவே மாறி நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன் என பலவகையான உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தினார் என்றும் கூறுகின்றனர். 

வாரிசு டிரெய்லர் வெளிவந்தவுடன் சில பல விமர்சனங்களையும் அது பெற்றது. ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் உடைக்கும் படி இத்திரைப்படம் இருக்கிறது என ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படத்தில் அனைத்து வகையான உணர்ச்சிகளும் அடங்கி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisment

எனவே, இந்த பொங்கல் திருநாளுக்கு குடும்பத்துடன் பார்ப்பதற்கு இது சிறந்த படமாக இருக்கக்கூடும்.
இந்த இரண்டு திரைப்படமும் நிறைய நேர்மறையான கருத்துக்களை பெறுவதால் இந்த 2023 திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கிறது. மேலும், பொங்கல் திருநாளுக்கு குடும்பங்களுடன் அல்லது நண்பர்களுடன் செல்வதற்கு இரண்டுமே சிறந்த படமாக அமைந்துள்ளது. இந்த பொங்கலுக்கு துணிவு vs வாரிசு அல்ல துணிவு மற்றும் வாரிசாக மாறி மக்கள் இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.

Read this and decide which movie you can watch: 

அஜித்தின் துணிவு படத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

வாரிசு‌ படத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது


movie review varisu thunivu