Advertisment

Periods காலத்தில் பின்பற்ற வேண்டிய Tips!!

Menstural காலத்தில் உடல் tired ஆவது என்பது வாடிக்கையான ஒன்று. அதிலும் ‘free menstural syndrome’ பிரச்னை இருப்பவர்களுக்கு tension, anxiety, head ache, hand, leg pain போன்ற பிரச்னைகளும் சேர்ந்துகொள்ளும்.

author-image
Nandhini
New Update
TIPS DURIN PERIODS.jpg

Image is used for representation purposes only.

இது தவிர vomit, digestion problem  என ஐந்து நாளும் நரகம்தான். கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். அந்த சமயத்தில் ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் ஓய்வுக்கே நேரமில்லாமல் பரபரவென்று ஓடிக்கொண்டு இருக்கிறோம். Menstural காலத்தில் இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம்.

Advertisment

இந்த கட்டுரையை நமக்காக நம் சகோதரி இந்து பிரியா சக்திவேல் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.

Tips to follow during periods

Calcium சேர்த்துக் கொள்ளுங்கள்

Advertisment

அந்த நாட்களில் கால்கள் இழுப்பதும், cramps புடித்து அடி வயிற்றில் அதிக வலியும்  இருக்கும். அதனால் calcium நிறைந்த உணவுகளான பால், தயிர், வெண்டைக்காய், பாதாம் ஆகியவற்றை  சாப்பிடுங்கள். மேலும் கண்டிப்பாக ஏதேனும் கீரைகளை சேர்த்துக் கொண்டால் படிப்படியாக இந்தப் பிரச்னைகள் குணமடையும்.

Vitamin களை தவிர்க்காதீர்கள்

Vitamin B6  நமது உடலில் ஏற்படும் hormone பிரச்னைகளை சரிசெய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ‘free menstural syndrome ’  – ஐ குறைக்கிறது. Vitamin D எலும்புகளை வலுவாக்கிறது. மிகவும் முக்கியமாக,  mensturationக்கு முன்பு மேற்கூறிய vitamin சத்துக்கள் அதிகம் இருக்கும்  ஆரஞ்சு, நட்ஸ் வகைகள், வாழைப்பழம், மீன், தர்பூசணி, கீரை போன்றவற்றை சாப்பிடுங்கள். வலியில்லாத மாதவிடாய்க்கு  தயாராக இந்த வைட்டமின்கள் தேவை.

Advertisment

நிறைய தண்ணீர் குடியுங்கள்

பலர்  periods இன் போது கழிப்பறையை பயன்படுத்துவதை எரிச்சலான ஒரு விஷயமாக நினைத்து,  அந்த நாட்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு வயிற்றுவலி குறையும். தண்ணீருக்கு பதில் juice களையும் குடிக்கலாம்.

Chocolate சாப்பிடுங்கள்

Advertisment

நாம் மகிழ்ச்சியாகவும், tension இல்லாமலும் இருக்க மூளையில் serotonin என்ற அமிலச்சுரப்பு அவசியம். Dark chocolate களை சாப்பிடுவதால் serotonin அதிக அளவு சுரக்கிறது. அதனால் மாதவிடாயினால் ஏற்படும் tension, anxiety  குறைய chocolate சாப்பிடுங்கள்.

அதிக cholesterol வேண்டாம்

அதிக cholesterol உள்ள வெண்ணெய், cream போன்ற உணவுகள் பெண்களின் estrogen ஹார்மோனைத் தூண்டிவிடும். மாதவிடாய் காலத்தில் இதனால் அதிக blood flow ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisment

Fibre அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்னையால் பலர் சாப்பிடவே மாட்டார்கள்.  சாப்பிடாமல் இருப்பதால் கிராம்ப்ஸ்தான் அதிகம் வரும். அதனால் உணவில் பட்டாணி, கோதுமை, ரெட் பீன்ஸ், அவகாடோ, கொய்யா, ப்ராக்கோலி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள Feel freeஆக உணருவீர்கள்.

Advertisment
Advertisment

 





Tips to follow during periods
Advertisment