முருங்கை இலையுள்ள பயன்கள்

நாம் சிறுவயதிலும் சரி, நம் பிள்ளைகளும் சரி கீரை சாப்பிடு என்று கூறினாலே அலறி அடித்து ஓடுவோம் . நல்லது நல்லது என்று சொன்னாலும் நாம் காதில் வாங்கி கொள்ளலாம், எனக்கு பிடிக்காது என்று கூறி சாப்பிடமாட்டோம்.

author-image
Nandhini
Sep 02, 2023 17:30 IST
moringa powder

moringa powder

ஆனால் நமக்கு வயதான பிறகு கீரையிலுள்ள சத்துக்கள், நன்மைகள் எல்லாம் புரிகிறது. முருங்கை கீரையின் இலை முதல் தண்டு வரை அனைத்திலும் நிறைய பலன்கள் இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. இது "வாழ்க்கையின் மரம்" என்றும் ஒரு சிலர் அழைப்பதுண்டு. காயம் ஆறுவது முதல் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது வரை இதில் அடங்கும்.  

Advertisment

Benefits of moringa

முருங்கை கீரையின் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் மற்றும் இந்த சூப்பர் green உங்கள் உணவில் சேர்க்க வழிகள்:

முருங்கை இலையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. முக்காவாசி காய்கள் ஏதோ ஒன்று அல்லது இரண்டு வைட்டமின்கள் மட்டுமே இருக்கும். உதாரணம் : கேரட்டில் வைட்டமின் a போன்று. ஆனால் முருங்கை இலையில்  சிறந்த பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி முதல் எலும்பு ஆரோக்கியம் மற்றும் தோல் பிரகாசம் வரை அனைத்திற்கும் பங்களிக்கும், வைட்டமின் நிறைந்ததுஇந்த முருங்கை இலையில் இரும்பு, கால்சியம் , வைட்டமின் சி, வைட்டமின் B6, பொட்டாசியம் , வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ இருப்பதினால் இது நம் உணவு பழக்கத்தில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

Advertisment

morninga

முருங்கை இலை தாவர அடிப்படையிலான புரதம் என்பதினால் நாம் உடல் எடையை குறைக்க சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மேல் இதை தூவி சாப்பிட்டால் நல்லது. முருங்கை தூளில் ஒரு தேக்கரண்டிக்கு மூன்று கிராம் புரதம் உள்ளது மற்றும் ஆற்றல் உற்பத்தி, தசை பழுது மற்றும் பலவற்றிற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன.

harmoneகளை சமநிலை படுத்த உதவும். பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அதாவது menopause காலத்தில் ஒரு சில ஹார்மோனல் மாற்றங்களால் உடலுக்கு சோர்வு அல்லது ஏதேனும் மாற்றங்கள் வர வாய்ப்புகள் இருக்கு. அந்த சமயத்தில் பெண்கள் இந்த முருங்கை இலையை சாப்பிடுவதன் மூலம் சரி செய்யலாம். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இரத்த glucose மேம்படுத்துவதாகவும் மேலும் thryoid ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கல்லீரலை இது பாதுக்காக்க உதவும். நம்மில் பலர் இந்த "Detox " குடிப்பது வழக்கம். அது நம் உண்ட சாப்பிட்டில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்குகிறது. அது போல் நம் உடலின் இயற்கையான "detox" இந்த கல்லீரல் . அந்த கல்லீரலை பாதுகாத்து , கல்லீரல் சேதத்திலிருந்து காக்கும். முருங்கையில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முன்கூட்டிய சுருக்கங்களைத் தடுக்கலாம் மற்றும் நீண்ட காலம் வாழ உதவும்.

எப்படி மஞ்சள் நம் உடலில் ஏற்படும் எல்லாவற்றிக்கும் ஒரு மருந்துப்பொருள் என்று கேள்வி பட்டிருக்கோம். ஆனால் முருங்கை இலையும் அதே மருத்துவ குணம் உடையவை என்று பல பேருக்கு தெரியாது. நம் உடலில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டால் அந்த இடத்தில் மஞ்சள் தேய்ப்பது வழக்கம். இதுவே நம் உடலுள் ஏதேனும் வீக்கங்கள் இருந்தால் இந்த முருங்கை இல்லை சரி செய்யும்.

moringa

Advertisment

இரத்த சர்க்கரை நிலை அதிகமாகும் பொழுது நமக்கு இந்த சக்கரை நோய் மற்றும், mood swings போன்ரவை வரும். அப்போது நாம் இந்த முருங்கை இலையை தொடந்து எடுத்து கொண்டால், இதை அனைத்தையும் கட்டு படுத்த முடியும். எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவும். முருங்கை இலையில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் செரிமானத்திற்கு உதவுகிறது.

தாவரத்தின் வேர், பட்டை அல்லது பூக்களில் காணப்படும் இரசாயனங்கள் காரணமாக முருங்கை கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்களுக்குப் பாதுகாப்பற்றதாக இருக்கலாம். இல்லையெனில், இல்லை.

 

Advertisment

Suggested Reading:  

Advertisment
Advertisment
#Benefits of moringa