இந்த நோய், நமது சக்கரை அளவு எப்போதும் இருப்பதை விட அதிகமாக இருந்து, அதை கட்டுப்பாட்டில் வைக்காமல் இருந்தாலோ, கண் இமைகள் மீது கட்டிகள் அடிக்கடி வருவதாலோ வரலாம். இதில் பல்வேறு நிலைகள் இருக்கிறது - லேசானது, மிதமானது, கடுமையான மற்றும் பெருகும் நிலை.
மருத்துவர்கள் குறிப்பிடுவது, சக்கரை நோய் இருப்பர்வர்களுக்கு குறைந்தது ஒரு வருடத்திற்கு ஒரு முறை கண்ணை பரிசோதிக்கவும் என்று அறிவுறுத்துவார். அதில் எந்த ஒரு பாதிப்பும் தெரிய வில்லை என்றால் நல்லது, நோயாளிகள் வருடம் ஒரு முறை எப்போவும்போல் பரிசோதனைக்கு வருவது நன்மை.
நோயாளிகள் இந்த முதல் இரண்டு நிலையில் பெருதும் செய்யும் தவறு, " இது ஏதும் பிரச்சனை இல்லை பார்த்துக் கொள்ளலாம் என்று சக்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க மாட்டார்." இது நேரடியாக மூன்றாவது அல்லது கடைசி நிலை Proliferative diabetic retinopathyக்கு இழுத்து சென்று விடும்.
இதில் நம் நரம்பில் புதிதாக நிறைய இரத்தக் குழாய் உருவாகிவிடும். அது எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடும். அதனால் கண்களில் இரத்தக் கசிவு ஏற்படும். இதனால் கண் பார்வை போகக் கூடிய நிலைமையும் வரலாம். மேலும் retinal detachment (அடுக்கு திசுக்களின் ஒளி உணர்திறன் எப்போவும் இருக்கும் இடத்தில் இருந்து இழுக்கப்பட்டு இருக்கும்) வரலாம். மேலும் கண்களில் உள்ள நரம்புகள் நீர்கோர்த்து பார்வையும் மங்கலாக இருக்கெல்லாம். இந்த மூன்றும் முக்கிய சிக்கல்கள். இதெல்லாம் வந்துவிட்டால் நாம் கண் சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள், சக்கரை நோயால் பாதிக்கப்பட்திருந்தால் Diabetic Retinopathy பெறுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். உங்களுக்கு சக்கரை நோய் இருந்தால் மற்றும் கர்ப்பமாக இருந்தால், கூடிய விரைவில் விரிவான கண் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். உங்கள் கர்ப்ப காலத்தில் கூடுதல் கண் பரிசோதனைகள் தேவைப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
இதன் அறிகுறிகள் என்ன ? symptoms of diabetic retinopathy
தொடக்க நிலையில் எந்த ஒரு அறிகுறிகள் தெரியாது. ஒரு சில பேர் காண்பர். அவரது கண் பார்வைகளில் ஒரு சில மாற்றங்கள் தெரியும். விழித்திரையில் உள்ள இரத்த நாளங்கள் இரத்தம் வர ஆரம்பிக்கின்றன. இது நடந்தால், நீங்கள் இருண்ட, மிதக்கும் புள்ளிகள் போன்ற கோடுகளைக் காணலாம். சில நேரங்களில், புள்ளிகள் தாங்களாகவே அழிக்கப்படுகின்றன. ஆனால் உடனடியாக சிகிச்சை பெறுவது முக்கியம். சிகிச்சையின்றி, கண்ணின் பின்புறத்தில் வடுக்கள் உருவாகலாம். இரத்த நாளங்கள் மீண்டும் இரத்தம் வர ஆரம்பிக்கலாம் அல்லது இரத்தப்போக்கு மோசமாகலாம்.
கட்டுப்படுத்த வழிகள்:
இந்த diabetic retinopathy அபாயத்தைக் குறைக்க உங்கள் சக்கரை நோயைக் கட்டுப்படுத்துவது சிறந்த வழியாகும். அதாவது உங்கள் இரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமான வரம்பில் வைத்திருப்பது. வழக்கமான உடல் செயல்பாடுகளைப் பெறுவதன் மூலமும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமும், உங்கள் insulin அல்லது பிற சக்கரை மருந்துகளுக்கான உங்கள் மருத்துவரின் வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவதன் மூலமும் இதைச் செய்யலாம்.
சக்கரை நோய் வந்துவிட்டால் யாரும் அதை புறக்கணிக்க கூடாது. அது கண்களை மட்டுமல்ல பிற உறுப்புகளையும் பாதிக்கும். வரும்முன் காப்போம் என்ற வாக்கியம் ஏற்ற படி வரும் முன்னர் அனைத்தையும் கட்டுப்பாடோடு வைத்துக் கொள்ளவும்.
Suggested Reading:
Chubby girls'க்கு styling Tips!
Suggested Reading:
நீங்கள் சிரிக்க, நாங்கள் பலியா?
Suggested Reading:
Kidney stones - தவிர்க்க வேண்டியவை
Suggested Reading: