Advertisment

நீங்கள் சிரிக்க, நாங்கள் பலியா?

பட்ட பெயர் யார் ஆரம்பித்த பழக்கம் என்று தெரிய வில்லை. நண்பர்களிடையே "டேய் தீனி மாடு", "கருவாச்சி" "குண்டச்சி" "ஒல்லிக்குச்சி" "ஏய் ஏணி " இது போன்று வார்த்தைகளை வைத்து குறிப்பிடுவதுண்டு. இந்த வாரத்தை எல்லாம் ஒரு தனி நபரின் உடல் அமைப்பை வைத்து கூறுவதே.

author-image
Nandhini
New Update
words have power

Words have power

நாம் பேச்சு வாக்கில் கேலிக்காகவும், கிண்டல் காகவும், நாம் பேசி அதை கடந்து போவதுண்டு. ஆனால் என்றாவது அந்த நபரின் மன நிலையை யோசித்ததுண்டா? அவர் அதை எப்படி எடுத்துக் கொள்வர் என்று? இது வரை நாம் யோசித்தில்லை. நம் பெற்றோர்கள் "மரியாதையாக பேசு, வார்த்தையை பார்த்து பேசு" என்றெல்லாம் சொல்லி வளர்த்தத்தின் காரணம் அவர் என்ன தான் "ஓல்ட் ஸ்கூல்" லாக இருந்தாலும், மரியாதை தெரிந்து தான் வளர்த்துள்ளார். காரணம் அவர்கள் வளர்ந்த விதம், படித்த சூழல். நமக்கு பிடித்து சிரிக்க வைக்கும் ஒன்று மத்தவர்களுக்கு அது பாதிப்பை தரும் என்ற ஒரு சின்ன பொது அறிவு கூட இல்லாத உலகம். இது அனைவரையும் குறிப்பிடவில்லை.

Advertisment

நாம் பேசிட்டு போய்விடுவோம் ஆனால் அவரது மனதில் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

இது ஒரு உண்மை சம்பவம் ( பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை ) ஒரு நாள் அந்த பெணின் குழந்தையை பார்க்க , அந்த பெண்ணின் அத்தை வீட்டிற்கு வந்துள்ளார். வந்தவுடன் நன்றாக இருக்கின்றாயா? உடல் நலம் எல்லாம் எப்படி இருக்கிறது? குழந்தை சாப்பிடுகிறாளா? என்றெல்லாம் கேட்கவில்லை , பார்த்தவுடன் " என்னடி இவளோ குண்டா அயிட்ட , உடம்பு போடுவ னு தெரியும் ஆனால் இவ்வளவு ?" என்று தான் இருந்தது. அந்த அம்மாவின் முகம் மாறி விட்டது. பட்டென்று அடித்தது போல் இருந்தது. இதன் அடிப்படை எங்கிருந்து வருகிறது, என்ன கூறினாலும் அவள் என் அண்ணன் மகள் என்று தானே ! உரிமைகள் இருக்கெல்லாம் ஆனால் ஒருவரின் உடல் அமைப்பை வைத்து பேசுவதில் அல்ல. மேலும் நீ திருமணம் முன் அழகை இருந்த இப்போ பாரு உண்ணும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள், ஒருவரின் உடல் அமைப்பு காலத்திற்கு ஏற்ற மாறி மாறுவதுண்டு. அதுமட்மில்லாமல் பிள்ளை பெற்றபின் ஒரு பெண்ணின் உடல் அமைப்பு முற்றிலும் மாறும். அது தெரிந்தும் ஒருவர், இப்படி ஒரு கருத்து வைப்பதை மிகவும் தவறு.

Advertisment

mental health

சரி அத்தை தானே என் மேல் இல்லாத உரிமையா என்று அந்த பெண் விட்டுக்கொடுத்து போவதினால் இது மாறாது. வாயை திறந்து பிடிக்கவில்லை என்று கூறினால் ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு உங்களிடம் பேச மாற்றார்கள். பின்பு ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழலில் பார்த்து தான் ஆகா வேண்டும். அப்போது பேச ஆரம்பித்து விடுவார்கள். அதனால் உங்களுக்குபிடிக்கவில்லை என்றாலும் வாயை திறந்து சொல்வது நல்லது.

இப்போது மேலே குறிப்பிட்ட உதாரணம் எதற்கு என்பதை இப்போது பார்ப்போம். | how words affect one mental health

Advertisment

 அந்த பெண், அவள் அத்தை சொன்னதை அந்த கணத்தில் விட்டால் கூட அன்று இரவு அவர் மனதில் அது ஓடிக்கொண்டேயிருந்தது. அது அவரது மன நிலையை பாதித்தது. அன்று முழுக்க அவரது வழக்கமான பழக்கம் உடைத்து, அவர்கள் பிள்ளையிடம் கவனம் செலுத்தலாமல் இது ஒரு நாள் மட்டுமில்லாமல் இந்த எண்ணத்தில் இருந்து வெளி வர ஒரு வாரம் மேல் ஆகி விட்டது. இது ஒரு உதாரணம் தான்.

இது போல் நமக்கே தெரியாமல் நிறைய விஷயங்கள் பண்ணிக்கொண்டு இருக்கிறோம். அது கண்டிப்பாக மனா நிலையை பாதிக்கும். அது ஒரு சில பேருக்கு அது அவரது உயிரை மாய்த்துக்கொள்ளும் வரை தூண்டும்.

அனைவரும் உங்களை போல் இருக்க மாட்டார்கள். அனைவரையும் ஒரு ஒரு வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். அதனால் பேசும் பொது மனம் நோகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது ஒரு நாள் உங்களுக்கே வந்து அடையும்.  அதனால்  வார்த்தையை பார்த்து பேசவும்.

Advertisment

 

 

Suggested Reading : 

Advertisment
Advertisment
Advertisment
how words affect one mental health
Advertisment