ஒல்லியோ, குண்டோ அது Matter இல்ல!

ஒல்லியா இருக்குறது எல்லாம் எவ்வளவு பெரிய வரம் தெரியுமா? அவங்களுக்கு பிடித்த பாணியில் ஆடைகளை அணியலாம். குண்டாக இருந்தால் ஏதாவது நோய் வந்துவிட போகிறது. உங்களுக்கு கண்டிப்பாக அவசியம் உடற்பயிற்சி தேவை.

author-image
Nandhini
New Update
body shaming

Body shaming

என்று இந்த சமூகம்.ஏதாவது மாற்றி மாற்றி பேசுவதுண்டு. முதலில் ஒருவரை அவரது உடல் வாகை வைத்து கேலி செய்வதை நிறுத்துங்கள். அது உங்களுக்கு விளையாட்டாக இருக்கெல்லாம். ஆனால் அது அவர்கள் ஆழ் மனதில் காயமாகி, அதுவே ஒரு பெரிய மன அழுத்தும் தரும்.

Advertisment

ஒல்லியாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்கிறார், குண்டாக இருந்தால் இல்லை என்பதெல்லாம் பொய். அவரது உடல் நலத்தை பொறுத்தே ஆரோக்கியம் தவிர அவரது உடல் அமைப்பு வைத்து இல்லை.

Breaking Stereotypes

இந்த சமூகத்தின் பார்வை (perspective) மிகவும் வேதனை தர கூடியதாக இருக்கிறது. முன்னர் கூறிய படி ஒல்லியாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று நினைப்பதுண்டு. ஏன், நாமுமே ஒரு சில சமயங்கள் யோசித்தியிருப்போம், ஒல்லியா இருந்தால் இத்தனை நோய் வந்திருக்காது என்று. ஆனால் உண்மையில் அது அப்படியே உடைக்கப் படுகிறது. நமது மரபணுக்கள் (genes) , நாம் வாழும் வாழ்க்கை முறை, மன நிலை, ஒருவரின் உடல்வாகு, அவரது வளர்சிதை மாற்றம் (Metabolism) மற்றும் ஒரு தனிநபரின் உடல்நிலைஇதெல்லாம் தான் ஒருவரின் உடல் அமைப்பை தீர்மானிக்கிறது. bodyshamingஎன்ற பெயரில் ஒரு தப்பான சிந்தனையில் இருக்கிறது இந்த உலகம்.

இந்த சமூகம் கொடுக்கும் "Peer Pressure" ரீனால், நாம் தப்பான திசையில் பயணிக்கிறோம். தேவைல்லாதextreme weight loss diets, Crash diets அல்லது நமது உடல் தங்க முடியாத extreme workouts (உடற்பயிற்சி) எடுத்துக் கொள்வதினால், நாம் நன்றாக இருக்கும் உடலை கெடுக்கிறோம் மேலும் நமது மன நிலையையும் சேதமாகுகிறோம்.

Advertisment

ஒவ்வொரு நபரின் ஆரோக்கிய பயணம் தனிப்பட்டது. ஒருவருக்கு வேலை செய்வது இன்னொருவருக்கு வேலை செய்யாமல் போகலாம். மரபணு, அடிப்படை சுகாதார நிலைமைகள் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகள் அனைத்தும் ஒரு நபரின் நல்வாழ்வுக்கு பங்களிக்கின்றன. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதற்குப் பதிலாக, நமது உடலின் தேவைகளைப் புரிந்துகொள்வதிலும் ,நமது தனிப்பட்ட ஆரோக்கிய இலக்குகளை ஆதரிக்க செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

body type

ஒல்லியாக இருந்தால் தான் ஆரோக்கியம் என்பதை உடைத்து ஆரோக்கியமாக இருப்பதற்கு உடல் அமைப்பு முக்கியம் அல்ல என்பதற்கு இந்த சமூகம் மாறவேண்டும். சமூகம் ஏதாவது கூறினால், அதை மனதளவில் ஏற்றுக் கொள்ளாமல் , அதை எப்படி Postive ஆகா மாற்றி நம்மை வலுப்படுத்த வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.

Advertisment

நாம்,நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையை வலியுறுத்தி,உட்கொள்ளும் உணவை மனதார ஏற்று சாப்பிட வேண்டும். நாம் எப்படி இருக்கிறோமோ அதே மாறி அதை ஏற்றுக்கொள்ளுதல் , மகிழ்ச்சியாக இருத்தல், வழக்கமான உடற்பயிற்ச்சி, மன அழுத்தத்தை control செய்வது , ஆரோக்கியமான உறவுகளை வளர்க்கும், நமது Self Care , மன அமைதி மற்றும் முடிந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவு பழக்கத்தைகை ஆளுதல் இவற்றில் கவனம் செலுத்துங்கள். 

இந்த சமூகம் ஆயிரம் சொல்லும். உங்களது உடலை நீங்கள் பார்த்துக் கொண்டால் போதும்.

Suggested Reading:

Breaking Stereotypes Peer Pressure bodyshaming