சாப்பாடு மட்டும் காரணமில்லை. புரிந்துக் கொள்ளுங்கள்!

"எந்த கடையில நீ அரிசி வாங்குற?" " இப்படி சாப்டுட்டே இருக்காத வெடிச்சிடுவ ", இந்த மாறி பல வார்த்தைகள் வைத்து எங்களை அழைக்கும் உரிமை உங்களுக்கு யாரு கொடுத்தது. ஆமாம். நாங்கள் குண்டு தான் அதற்கு என்ன செய்யலாம்? என் உடல் பாகை வெட்டி தூக்கி எரிந்து விடலாமா?

author-image
Nandhini
New Update
size 0

Image is used for representation purpose only.

Perks of being chubby

மேலே குறிப்பிட்ட எதையாவது செய்ய முடியுமா? முடியாது தானே. அப்புறம் எதற்கு எங்களிடம் வருகிறீர்கள் ? என்று கேட்க தோன்றும் ஆனால் முடியாது என்று 
பருமனான பெண்கள் கூறினர்
.

Advertisment

எங்கள் வீட்டில் உள்ளவர்களே,"சாப்பாடு,சாப்பாடு, சாப்பாடு இதை தவற வேற ஏதும் உங்களுக்கு தோணவே தோணாதா?வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கு அதை விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். ஏன் சோறில்லை என்றால் வாழ்க்கை ஓடாத என்ன?"என்று சும்மா வேடிக்கையாக கூறினாலும் அது எங்களை பாதிக்கிறது.இப்படி எல்லாம் கேட்கும் நபர்களுக்கு ஒரு கேள்வி. நீங்கள் சம்பாதிக்கும் பணம் எல்லாம் எதற்கு? மூன்று வேலை சாப்பாட்டுக்கு தானே? அதே தான் நாங்களும் செய்கின்றோம். 

முதலில் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது ஒரு பெண்ணோ ஆணோ குண்டாக இருப்பது அவர்காலத்து உணவு பழக்கம் மட்டுமல்ல , ஜீன்ஸ் (Genes)  ஆ கூட இருக்கெல்லாம்.  Genes எல்லாம் ஏதும் இல்லை உங்கள் மனதில் நினைத்தால் முடிக்க முடியும். அதனால் ஒடனே உங்கள் சாப்பாட்டை குறையுங்கள் என்று வராதீர்கள். ஆனால்எங்களுக்கு தான் தெரியும் எங்கள் சாப்பாடு அளவு என்னவென்று. அதை அவர்களிடம் சொல்லி புரிய வைக்க முடியாது.

நேர்காணலில் இருக்கும் பெண்களில் யாருக்கும் ஜீன்ஸ் (genes) மூலம் உடல் எடை கூட இருக்கவில்லை என்று தெரிந்துக் கொண்ட பிறகே அவர்களது உடல் எடை குறைக்கும் செயல்முறை என்னவென்று கேட்டோம்.

Advertisment

nithya menon

காலையில் ஐந்து அல்லது ஆறு மணிக்கு எழுந்து வெறும் வயிற்றில் சூடு தண்ணீர் ( hot lime water) குடித்து, நடக்க செல்வோம். பின்பு வந்து இரண்டு அல்லது மூன்று இட்லிகள் சாப்பிடுவோம் பின்பு வேலைக்கு சென்று வீடு திரும்புவோம். மதிய உணவிற்கு சப்பாத்தி தான். மாலை வீட்டிற்கு வந்து வீடு வேலைகள் எல்லாம் பார்த்துவிட்டுஇரவு சாப்பாடு இரண்டு தோசை அல்லது இரண்டு இட்லி அப்படியே இரவு தூக்கம். பின்பு அதே மாறி காலை எழுந்து.. இப்படியே போகும்.

எல்லாம் சரியாக தான இருக்கிறது பின்பு ஏன் உடல் எடை குறையவில்லை என்று கேட்டோம் .அனைவரும், "இது ஒரு நல்ல கேள்வி. ஆனால் பதில் எங்களுக்கே தெரியவில்லை."என்றார்கள் . எல்லாம் சரியாக தான் செய்கின்றோம். ஆனால் எல்லாம் சரியான செயல்முறையில் தான் செய்கின்றோமா? அதான் தெரியவில்லை.

Advertisment

ஒரு சில பேர் ஒப்புக்கொண்டார்கள் வாரம் ஒரு முறை அவர்களது பழக்கத்தை உடைக்கிறோம் என்று. ஒரு வாரம் சரியான பழக்கத்தை பின்பற்றி ஒரே நாளில் சிக்கன் மட்டன் என வெளுத்துவங்குவோம். 

இப்படி இருந்தால் எப்படி உடல் குறையும் என்று எங்கள் மனதில் இருப்பதை அவர்கள் உணர்த்தார்கள்.

எங்களது நோக்கம் அவர்கள் பருமனாக இருப்பதை சுட்டிக் காட்டல்ல . அவர்கள் ஏதோ ஒரு காரணதிற்காக ஆரம்பித்த இந்த உடல் எடை குறைவு பயணம் வீணாகிறதே என்பது தான்.

Advertisment

ஏன் இந்த பயணத்தை ஆரம்பித்தீர்கள் என கேட்டபோது , "வீட்டில் அல்லது அவர்களுக்கே ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கே தான் . யாரேனும் ஒருத்தருக்கு இதய நோய், நுரையீரல் கோளாறு, வயிறு கோளாறு , PCOS போன்ற நோய்கள் இருப்பதினால் இந்த உடல் எடை பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம். அதனால் தான் இந்த பயணத்தை ஆரம்பித்தோம்" என்று கூறும் பொது லேசாக ஒரு குற்ற உணர்வோட கூறியதை நாங்கள் உணர்தோம்.

நாங்கள் அறிவுரை கூறுவதற்கு என் உடல் நிலையும் வலுவாக இல்லை. ஆனால் ஒரு விஷயம் சொல்ல ஆசை படுகின்றோம்.

உங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு இருங்கள். முடிந்த உடற்பயிற்சி செய்யுங்கள். நல்ல ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பிட வேண்டாம் என்று நாங்கள் கூற வில்லை. அளவாக சாப்பிடுங்கள். ஏதோ ஒரு மருத்துவ தீர்வுக்காக தான் இந்த பயணத்தை எடுத்துள்ளீர். அந்த தீர்வு முடிவும் வரை சிறிது கட்டுப்பாடோடு இருந்து, அந்த தீர்வு உங்களுக்கு கிடைத்த பின்பும் அதையே முடிந்த அளவிற்கு தக்க வைத்து கொண்டால், பின்னர் வேற ஏதும் கொடிய நோய் வராது .எல்லாம் சரி ஆனா பிறகு பிடித்த உணவுகளை அளவோடு சாப்பிட்டு மகிழலாம். 

Suggested Reading: 

அய்யய்யோ!! மீண்டும் மீண்டுமா?

Perks of being chubby PCOS