வயிறு வலி, முதுகு வலி, மூட்டு வலி இந்த மூன்று வலியும் ஒரு மனிதர்க்கு வந்து விட்டால் முடிந்தது சோலி. அந்த வலி போகும் வரை கடு கடு என்று இருப்போம். கீழ குனிய முடியாது, நிமிர முடியாது, ரொம்ப நேரம் ஒரே மாறி உக்கார முடியாது. அன்று தான் அனைத்து வேலையும் வரும், பிள்ளைகள் அன்று தான் வாலுத்தனத்தின் உச்சத்தில் இருப்பார்கள். வலி நிவாரணம் தடவினாலும் சரியாகாது. படுத்து உறங்கினால் தான் சரியாகும்.
முப்பது வயது தாண்டினால் பெண்களுக்கு ஒரு வித நோய்கள் வருவதுண்டு. அது முதலில் வரிசையில் நிற்பது முதுகு வலி. இதற்கு காரணங்கள் பல.
எலும்புகள் வலுவிழக்க செய்தல் : முப்பது வயது தொட்டாலே இந்த பிரச்சனை வந்துவிடும். இதன் முடிவு தான் முதுகு வலி வந்துவிடும். இது பிரசவத்தினால் கூட வரலாம். பிரசவத்திற்கு பிறகு தான் முக்காவாசி பிரச்சனைகள் வருகின்றது என கருத்துக்கணிப்புகள் கூறுகிறது.
நாம் செய்யும் வேலையும் முக்கியம் இதில். இப்போது நிறைய பெண்கள் வேலையைக்கு செல்கிறார்கள். அங்கே முக்காவாசி நேரம் அமர்ந்தே இருக்கும் படி இருப்பதினால் முதுகு வலி ஏற்படுகிறது. இது முதுகு வலி மட்டுமல்ல உடல் எடை கூடவும் செய்கிறது.
/stp-tamil/media/post_attachments/WxkddrSnb9QgcLcTe2tm.jpg)
அமரும் தோரணை (sitting posture) மிக முக்கிய காரணம் இருக்கிறது. நாம் நம்மை மீறி கூன் போட்டு உக்காருவது வழக்கமாக இருக்கிறது. இது ஒரு நாள் ரெண்டு நாள் என்றால் பெரிதாகத்தாக்கம் ஏற்படாது ஆனால் நாட்கணக்கில் நடந்தால் கண்டிப்பாக முதுகு வலியை தூண்டுகிறது.
ஏதேனும் முதுகில் அடிபட்டு இருந்தால் அதுவும் காரணமாக இருக்கெல்லாம். ஏதோ ஒரு சமயத்தில் கீழே வழுக்கி விழுவது அல்ல வண்டியில் செல்லும் போது ரோட்டில் இருக்கும் பள்ளத்தில் இறக்கி ஏத்தி ஓட்டுவதனால், முதுகு வலி இடுப்பு வலியை தூண்டுகிறது.
கனமான எடையை தூங்குவதினால் (heavy lifting) சதை சுலுக்கு ஏற்படும். அதையும் தூக்க முடியாமல் தூக்கி, அதனால் முதுகு வலியை தூண்டுகிறது
இதெல்லாம் ரொம்ப பொதுவான காரணங்கள் ஆகா இருக்கும். ஒரு பிரச்சனை என்றால் அதற்கு கண்டிப்பாக ஒரு தீர்வு இருக்க தான் செய்யும். அந்த தீர்வை பார்ப்போம்
Tips for Back pain
தீர்வு நம்மிடம் நமக்கு தெரிந்த விஷயங்கள் தான்.
சரியான தோரணையில் அமர வேண்டும். கூன் போடுவதை தவிர்க்கவும். தரையில் அமருவது நல்லது. நீங்கள் நீண்ட நேரம் அமர்வதால் கீழே தலையணை வைத்து அமர்ந்துக் கொள்வதனால் வலியைக் குறைக்கெல்லாம்.
கனமாக பொருளை தூக்குவது தவிர்க்கவும். அதையும் மீறி தூக்கும் சூழல் வந்தால் சரியான தோரணையில் தூக்கவும். குனிந்து தூக்காமல் , அமர்ந்தபடி தூக்கினால் முதுகு தண்டு பாதிக்காது.
உடல் எடையை கவனமாக பார்த்துக் கொள்ளவும். முதலில் உடல் எடை பின்பக்கம் தான் பெண்களுக்கு போடும். அதனால் கண்டிப்பாக இடுப்பு மற்றும் முதுகு வலி வரும். அதனால் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் நல்லது.
/stp-tamil/media/media_files/j16Ju7nUn2hjH5MZbPYb.jpg)
உங்கள் முக்கிய தசைகளை வலுப்படுத்துங்கள் அதற்ககு உடற்பயிற்சி முக்கியம். அது gym போகவேண்டும் என்று அர்த்தம் இல்லை. வீட்டில் இருந்தே பண்ணலாம். அடிப்படை உடற்பயிற்சி பண்ணலாம். stretch பண்ணலாம். நடைக்கு செல்லலாம். இதெல்லாம் தொடர்ந்து செய்தால், கண்டிப்பாக முதுகு வலி குறையும்.
உறங்கும் பொது முதுகில் அழுத்தம் அதிகமாக கொடுக்காமல் உறங்க வேண்டும். உங்கள் முதுகில் அழுத்தத்தைக் குறைக்க உங்கள் முழங்கால்களுக்கு இடையே ஒரு தலையணையை வைக்கவும்.
இதையெல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக முதுகு வலியை சரி செய்யலாம்.
Suggested reading:
அய்யய்யோ!! மீண்டும் மீண்டுமா?
Suggested reading:
இதெல்லாம் முடி உதிர்தலின் காரணமா?
Suggested reading:
நான் பிழை.. நீ மழலை..
Suggested reading:
இரவினில் ஓட்டம்.. பகலிலே தூக்கம்..