ஏன் ரெண்டு பிள்ளைகள் என்று அம்மா, அப்பாக்களிடம் கேட்டால், "கஷ்ட காலங்களில் இருவரும், ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பார்கள்" என்று தான், என ஒரு கால இடைவெளி விட்டு பெற்றுக்கொள்ளுவார்கள். இது பத்தில் ஏழு தம்பதியர்களின் விருப்பம் மீதம் இருப்பவர்கள் உடல் நிலை காரணமாக அல்லது குடும்ப சூழலுக்காக இருக்கேலாமே தவிர ஆசைகள் இல்லாமல் அல்ல என கணக்கெடுப்புக் கூறுகிறது.
Effects of having only girl child in the family.
ஒரு பெண், பெண் பிள்ளையை பெற்றப் பின், அந்த உறவினர்கள் எல்லோருமே "வீட்டுக்கு மஹாலக்ஷ்மி வந்தாச்சு" "யப்பா உன்னோட அம்மாவே உனக்கு பிறந்து இருக்கிறாள் " என்றெல்லாம் சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். வீட்டில் அந்த கொலுசு சத்தம், பட்டு பாவாடை போட்டு, குட்டியா சிண்டு போட்டு பூ வச்சி, ஜிமிக்கி போட்டு இங்கையும் அங்கையும் வீட்டில் திரியும் பொது ரொம்ப அழகா இருக்கும். பையன் பிள்ளையும் அழகு தான் அதில் எந்த பாகுபாடும் இல்லை. வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருந்தாலே ஒரு தனி அழகு தான் என்று அனைவரும் நினைப்பதுண்டு. சரிதானா?
அந்த முதல் குழந்தை வளர்ந்து ஒரு மூன்று வயதான பிறகு, அந்த தம்பதியர் இரண்டாவது குழந்தைக்கு திட்டம் செய்வார்கள். அந்த சமயத்தில் கண்டிப்பாக அந்த மனைவியும் கணவரும் பேசி இருப்பார்கள், "அடுத்து பையனாக இருக்க வேண்டும்" என்று. ஆனால் அடுத்த பிள்ளையும் பெண்ணாக இருந்தால் அவர்களது முகங்கள் வாடி பொய் விடும். இது உறவினர்களுக்கு மட்டும்மில்லாமல் அந்த தம்பதியருக்கும் புஸ்ஸ்ஸ் என்று ஆகிவிடும். உறவினர்கள் அரசல் புரசலாக "என்னப்பா, அடுத்தும் பொண்ணா" என்ற வார்த்தையை பயன்படுத்தித் தான் அந்த பிள்ளையின் நலனை விசாரிப்பார்கள்
என்ன தான் எதிர்பார்ப்புகள் உடைக்கப் பட்டாலும், அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருந்தாலே போதும் என்ற எண்ணம் தான் அந்த பெற்றோர்களுக்கு வந்துவிடும்.
இந்த ஊரு சும்மா இல்லாமல் என்ன என்ன வேலைகள் செய்யும் தெரியுமா? பிள்ளையை பார்க்க வர சாக்கில் "எல்லாம் சரி வீட்டுக்கு வாரிசு ஒன்னு வேண்டாமா" என்று கேப்பார்கள். அது என்ன பெண் குழந்தையும் வாரிசு தான? அவர்களை ஏன் கருத்தில் வைக்க மறுக்குறீர்கள். கேட்டால் ஒரு பதில், "எப்படி பாத்தாலும் அந்த பிள்ளை கல்யாணம் பண்ணி வேற ஒரு வீட்டுக்கு போய்டுவாங்க. ஏதாவது நல்லது கெட்டதுனா நினைச்ச நேரத்துக்கு வர முடியுமா ? ஒரு பையன் இருந்தா, கூடையே இருப்பான்ல.
இதையே உறவினர்கள் தந்தையைப் பார்த்து "யப்பா ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி ,சீறு நகை நட்டு போடுறதுக்கே இங்க கஷ்டம். இதுல ரெண்டு புள்ளைவேற எப்படி பா கரசேக்க போறீங்களோ " என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். தந்தைக்கு என்னதான் தன்னுடைய பிள்ளை என்று எண்ணினாலும், இந்த மாறி பேசும் பொது அவருக்கே ஒரு பயம் வந்துவிடும்.
இதன் விளைவு, இன்னொரு பிள்ளைக்கு தயார் படுத்திக் கொள்ளுதல். அதுவும் பெண் பிள்ளையாய் வந்துவிட்டால், முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு அமைதி மட்டுமே நிலவும். குழந்தை பிறந்த சந்தோஷம் தாண்டி இதுவும் பெண்ணாக பிறந்து விட்டதே என்று தான் இருக்கும். அந்த குடும்பத்தை, இந்த சமூகம் ஒரு மாறி ஏளனமாய் பார்க்கும். ஏதோ சாபம் பெற்ற குடும்பம் என்ன அந்த ஊரு பேசும். வெளியில் சென்றால் ஒரு மாதிரி பார்க்கும். அந்த பார்வை " ஐயோ பாவம்" என்று இருக்குமா? அல்ல "என்னப்பா அடுத்துக்கு ரெடி பண்ணிடீங்களா?" என்று ஏளனமாய் பார்க்கிறதா என்று தெரியாது.
இந்த சமூகம் எப்படி பேசினாலும் பரவாயில்லை, அந்த பெண்ணின் அம்மா அப்பாக்கள் கூட ஒரு ஏமாற்றத்தில் இருப்பார்கள். அவர்களது ஆதரவு தான் அந்த கணவர், மனைவிக்கு வேண்டும். அதுவே அங்க குறையும் பொழுது, அவர்களுக்கே ஒரு சந்தேகம், பயம் எல்லாம் கலந்து வருகின்றது.
இது மன ரீதியாக பெரிய பாதிப்பைக் கொடுக்கும். தேவை இல்லாமல் வீடுகளில் சண்டைகள் வரும். ஒரு கட்டத்தில் யாராவது உங்களுக்கு என்ன பிள்ளை என்று கேட்கும் பொது "பெண் பிள்ளை" என்பதை மறைத்து "ஆண் பிள்ளை" என்று பொய்யாக கூற தோன்றும்
எல்லாவற்றையும் ஓரம் கட்டி வைத்து, இந்த பிறந்த பிள்ளை நன்றாக இருக்கிறது . அவர்கள் நன்றாக வளர்ந்து நல்ல திறமைசாயிலாக வளர்வார்கள். அதனால் பெண் பிள்ளை என வருத்தப்பட வேண்டாம்.
இந்த விஷயங்கள் எல்லாம் சமூகத்தில் மாறுமா? தெரியாது. மாற்ற முடியுமா? தெரியாது? அதனால் நாம் தான் மாற வேண்டும். பெண் பிள்ளை என்பது ஒரு அழகு. அம்மா அப்பாக்கள், " பெண் பிள்ளையும் நம் இரத்தம் தான் , நம் வாரிசு தான், அவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. அவர்கள் குடும்பத்திற்கு கௌரவ குறைச்சல் கிடையாது." என்று நம்ப வேண்டும். சமூகம் ஆயிரம் சொல்லும், அதை காதுகளில் போட்டுக்கொள்ளாமல் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
Suggested Reading:
நாலு கழுத வயசான எல்லாமே போச்சா?
இரவினில் ஓட்டம்.. பகலிலே தூக்கம்..
Suggested Reading:
மாதவிடாய் சுகாதாரத்தை எவ்வாறு பராமரிப்பது