Advertisment

மாதவிடாய் சுகாதாரத்தை எவ்வாறு பராமரிப்பது

மாதவிடாய் என்பது பெண்கள் அனுபவிக்கும் ஒரு இயற்கையான செயல்முறையாகும். அது சில நேரங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அந்த சமயத்தில், சுகாதாரமாய் பார்த்துக்கொள்வதன் மூலம், அந்த நாட்களை கஷ்டமின்றி கழிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும்.

author-image
Nandhini
New Update
menstrual hygiene

மாதவிடாய் சுகாதாரம் ( menstrual hygiene ) என்பது ஒவ்வொரு பெண்ணும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. எதனால் இந்த சுகாதாரம் முக்கியம்? இதை செய்வதின் முதன்மையான நோக்கம் தொற்றுகளை தடுப்பதற்க்கே. இந்த நாட்களில் ஏற்படும் நாற்றம் , கசிவு, சதை எரிச்சல் போன்றவற்றை பெண்கள் சந்திக்கும் முக்கியமான அசௌகரியங்கள். இவை எல்லாவற்றையும் அகற்றுவதத்திற்கு உதவும். 

Advertisment

எது சரியானது என அறிவது எப்படி?

துணிகள் உபயோகித்தது எல்லாம் அந்த காலம். அந்த காலத்தில், இந்த sanitary pads மற்றும் menstrual cups இரண்டே பொருட்கள் தான் உள்ளது. இதில் முக்காவாசி பெண்கள் பயன்படுத்துவது sanitary pads'களே.

sanitary pads

Advertisment

சரியான sanitary pads'யை நல்ல உயர்தர brandsஆக  பார்த்து வாங்குங்கள். அது நல்ல உரியக்கூடியதாக இருக்க வேண்டும். மிகவும் ககனமான பரப்பு (rough or hard surface) இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக சுவாசிக்கக்கூடியது, அதாவது அந்த இடத்தில் ஏற்க்கனவே இரத்தம் கசிவுகள் ஏற்பட்டு ஒரு அசௌகரியம் ஏற்பட்டிருக்கும். இந்த pad அதை மேலும் எரிச்சல் உண்டாக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய் கோப்பைகள் (Menstrual Cups)

இதை உபயோகிக்கும் பெண்கள் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல தரமான கோப்பைகளை, உங்களது அளவிற்கு ஏற்ற மாறி பார்த்து வாங்குங்கள். மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக இருப்பது நல்லது. நீண்ட நேரம் அணியும் பலன் தருகிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

Advertisment

நீங்கள் pad பயன்படுத்தினாலும் சரி, cups பயன்படுத்தினாலும் சரி, அதை நான்கு அல்லது ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இது ஏனென்றால் இரத்தக்கசிவு மூலம் ஏதேனும் தொற்று பரவக் கூடிய வாய்ப்பு இருக்கு. மேலும் துர்நாற்றம், கசிவு போன்றவற்றை தடுக்கவும் உதவும்.

 சரியான முறையில் அகற்றுவதும்  முக்கியமானது. pads'யை ஒரு காகிதத்தில் சுற்றி அதற்காகவே ஒரு disposable  பையில் வைத்து தகுந்த குப்பைத்தொட்டில் போட வேண்டும். கழிவறையில் சிவத்தலை (flushing) தவிர்த்துக் கொள்ளுங்கள். இது சுற்றுசூழல் பாதுகாப்புக்கு உதவும்.

Personal hygiene - பராமரித்தல்

Advertisment

 ஒரு சில பெண்களுக்கு வயிற்று வலிகள் வரும் அப்போது சூடான ஒத்தடம் குடுத்தால்  அது ஏதமாக இருக்கும். முடிந்த வரை உங்களுக்கு வசதியான ஆடைகளை அணியுங்கள். இது காற்றோட்டத்தை அனுமதிக்க மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவும்.

hot compression

அனைத்திற்கும் ஒரு மிக பெரிய தீர்வு.தண்ணீர். முடிந்த அளவிற்கு தண்ணீர் நிறையாக குடியுங்கள். ஒரு சில பெண்களுக்கு வயிறு வீக்கம் (bloating) ஏற்படும் அந்த சமயத்தில்  தண்ணீர் குடித்தால் அது சரி ஆகி விடும்.

Advertisment

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும்  புரதங்கள் நிறைந்த சத்தான உணவை உட்கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், caffiene ஆகியவற்றின் தவிர்க்கவும், இது வீக்கம் மற்றும் அசௌகரியத்தை அதிகரிக்கும்.

தொடர்ந்து இடைவெளியில் (bath at regular intervals)குளிப்பது நல்லது. குளிப்பதினால் நீங்கள் புத்துணர்த்தியாக உணர்வீர்கள். இரத்த கசிவினால் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும். ஒரு நல்ல துணி வைத்து முன்னும் பின்னும் நன்கு சுத்தமாக துடைத்தால், பரவ கூடிய bateria வை அழிக்கெல்லாம்.

Mind should also be fresh!!

Advertisment

உடல் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது நம் மனமும் நிம்மதியாக இருக்க வேண்டும். அதற்க்கு உங்களுக்கு நெருங்கிய நபர்களுடன் பேசலாம், உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களைப் பண்ணலாம். உங்கள் மனதை மாற்ற உதவும் யோகா, breathing exercise செய்தால் கொஞ்சமா நிம்மதியாக இருக்கும். மாதவிடாய் நேரத்தில் உங்களது சுய பாதுகாப்பு பார்த்துக்கொளவதி முதன்மை படுத்துங்கள்.

 தண்ணீர் எப்படி முக்கியோ அதை போல் தூக்கமும் , தூங்கும் இடமும்  முக்கியம். நமக்கு இரத்த கசிவு ஏற்படுவதன் காரணமாக நாம் மிகவும் சோர்வாக இருப்போம் அந்த சமயத்தில் தூங்கினால் உடல் சோர்வு சரியாகி விடும் 

 ஒரு ஒரு பெண்ணிற்கு ஒவ்வொரு மாதிரியான மாதவிடாய் முறைகள் இருக்கும். ஒரு சில பேருக்கு வலி உயிரை மாய்க்கும் படி இருக்கும், ஒரு சில பேருக்கு மாதவிடாய் என்பது போலவே தோன்றாது. இதெல்லாம் உங்களது உடல் வாகை பொறுத்து தான். 

Advertisment

 உங்கள் உடலிற்கு கவனம் செலுத்துங்கள் மற்றும் அதற்கேற்ப உங்கள் சுய பாதுகாப்பு வழக்கத்தை சரிசெய்யவும். உங்கள் உடலுக்கு நன்றாகத் தெரியும், எனவே அதன் தேவைகளை மதித்து, அதற்குத் தகுதியான கவனிப்பை வழங்குங்கள்.

இதை ஆங்கிலத்திலும் படிக்க :

source : gytree https://blog.gytree.com/menstrual-hygiene-11-tips-to-make/

 

suggested reading : 

menstrual hygiene sanitary pads
Advertisment