ஏன்டா, உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா?

ஒரு பெண்ணிற்கு 25 வயது வந்துவிட்டால் போதும், எங்கிருந்து தான் வருவார்கள் என தெரியாது முறை தெரியாத உறவினர்கள் வருவார்கள் வந்து " என்ன பா பொண்ணுக்கு வரன் ஏதும் பாக்குறியா? நமக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் இருக்கான் பேசி பாரு" என்று.

author-image
Nandhini
New Update
nazriya

images are used for representation purposes only.

அப்போது கண்டிப்பாக எல்லோருக்கும் தோன்றும் ஒரே விஷயம், " ஏன்டா உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா " என்று.

Advertisment

இதைக் கட்டுரை என்று கூறுவதா? இல்லை ,ஒரு 25 வயதுடைய ( 25 years old girl )ஒரு பெண்ணின் மனநிலையை பிரதிபலிக்கும் கேள்வி பதில்களா என்று தெரியவில்லை.

சரி, முதலில் ஏன் கல்யாணம் (marraige)பண்ண வேண்டும்?  "வாழ்க்கையில் ஒரு துணை தேவை. அடுத்த கட்டம் என்பது வேண்டும். நீங்கள் வீட்டில் இருந்தால் உங்களுக்கு ஏதோ பிரச்சணை என்று ஊரு பேசும். அதுமட்டுமில்லாமல், வம்சம் வளர வேண்டும்" என்று எல்லாம் "ஊரு" பேசும்,"உறவுகள்" பேசும்  என்று கூறினார்களே தவிர, அந்த பெண்ணுக்கு என்ன வேண்டும் என்றெல்லாம் கேட்க வில்லை

வாழ்க்கையில் independent ஆக  இருக்க வேண்டும். யாரை நம்பியும் இருக்க கூடாது என்பதற்க்காக, நல்ல வேலையில் சேர்ந்து, வீட்டுக்கு நம்மால் முடிந்த வரை பணம் தர வேண்டும். நாமும்சிறிது பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்க்காக ஓடினால் , 25 வயசு வாந்தால் போதும் உடனே ஜாதகம் எடுக்க வேண்டியது. தெரிந்தவர்களிடம் கூற வேண்டியது, matrimony'இல் நம்மகே தெரியாமல் account create செய்ய வேண்டியது. 

Advertisment

ஏன்? இவ்வளவு கட்டாயம் ?

அந்த பெண்ணுக்கு என்ன வேண்டும்? அவளுக்கு உண்மையாவே, கல்யாணம் பண்ணும் மன நிலை இருக்கிறதா? இல்லை , அவள் யாரையாவது விரும்புகிறாளா? காதல் எல்லாம் இல்லை, வாழ்க்கையில் சிறிது பணத்தை சேர்த்து வைத்தபின் கல்யாணம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாளா என்று மனம் விட்டு பேசுங்கள்.

keerthy suresh tension

அதுவும் கூட பிறந்தது அண்ணனாக இருந்து அவர்களுக்கு "கல்யாணம்" ஆகிவிட்டிருந்தால், அவ்வளவு தான் சோலி முடிஞ்சு. கூட இருக்கும் அண்ணியும்  சேர்த்து எங்களைக்  கல்யாணம் என்ற குழிக்குள் தள்ளி விட பார்ப்பார்கள். 

இவளோ அவசரப் பட்டு கல்யாணம் பண்ணுவதன் நோக்கம் " காலக் காலத்துல எல்லாம் நடக்கணும். அப்போதுதான் வாழ்க்கையில் அந்த வயதிற்கான milestone அடைவீர்கள். நாங்கள் என்ன குழந்தையா? milestones அடைய 

Advertisment

வயது மீறினால் குழந்தை பெற இயலாது என்பது எல்லாம் அந்த காலம். இப்போது எல்லாத்துக்கும் தீர்வு இருக்கிறது. மருத்துவ தொழிலில் நிறைய முன்னேற்றம் இருக்கிறது. நான் நினைத்தால் முப்பது முப்பத்தைந்து வயதிலும் குழந்தை பெற முடியும். (excluding extreme cases)

குழந்தை அல்ல வாழ்க்கை. அதையும் தாண்டி இருக்கிறது. அதற்க்கு பணம் முக்கியம். இப்போது இருக்கும் விலைவாசியில் ," நாம் இருவர் நமக்கு ஒருவர் " தாண்டி, "நாமே குழந்தை நமக்கு ஏன்ஒரு குழந்தை" என்ற வாக்கியங்கள் வரும் போல.

 கல்யாணம் அல்ல ஒரு பெண்ணின் குறிக்கோள். அவள் நிம்மதியாக, அவள் நினைத்த வாழ்க்கையை அவள்  வாழ்வதே ஒரு பெண்ணின் சுந்திரம். இது கல்யாணம் பிறகும் சாத்தியம் என்று தெரியும். அனால் கல்யாணதிற்கு பிறகு நமக்கே தெரியாமல் ஒருசில பொறுப்புகள் வருகின்ற. அது நமக்கான தனிசுந்தந்திரத்தை பாதிக்கும். நமக்கே அறியாமல் கணவரின் அனுமதி தேவைப் படுகிறது. 

Advertisment

 என்னதான் நாம் பெற்றோரிடம் மனம் திறந்து பேசினாலும், அவர்கள் கூறுவது என்னமோ,"நாங்கள் இருக்கும் போதே , உனக்கு கல்யாணம் காட்சி பார்த்துவிடேலாம், எங்களுக்கு வயசாகிக் கொண்டே போகிறது". இதை சொல்லி விட்டால்,என்ன பேசுவது என்று தெரியாது.

aishwarya

"எங்களால் ஒரு கல்யாண காட்சிக்கு போக முடிகிறதா? எல்லோரும் கேட்கிறார்கள், பதில் சொல்ல முடியாமல் இருக்கிறது." உங்களுக்கு,"உங்கள் பெண்ணின் சந்தோஷம் முக்கியமா? இல்லை ஊரு , இந்த society முக்கியமா? "என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை . 

இது முக்காவாசி பெண்களின் மண் நிலையாக இருக்கும் என்று நம்பப் படுகின்றது. (கருத்துக்கள் வேறுபடலாம்). 

Advertisment

கல்யாணம் பணிக்க மாட்டோம் என்பது எண்ணமில்லை ,25இல் நாங்கள் வேற பாதையில் இருப்போம் அதை பாதிக்காத படி எந்த நேரத்தில் வேணுமோ நாங்கள் செய்வோம் என்பது தான். 

ஊரு ஆயிரம் சொல்லும். அதை நீங்கள் உங்கள் மனதிற்குள் ஏற்றினால் உங்கள் மனம் தான் பாதிக்கும்.அந்த society உங்கள் வாழ்க்கையை வாழவில்லை. நம் குடும்பத்துடன் வாழவில்லை. நாளைக்கு அந்த பெண் காதல் திருமணம் செய்தாலும் அந்த society "என்ன பொண்ண வளர்த்து வச்சிருக்கான் பாரு!" என்று வையத்தான் செய்யும். எது செய்தாலும்  இந்த ஊரு உங்களை ஏதோ ஒரு வகையில் குற்றம் சொல்ல தான் போகிறது என்றால், அந்த society காக நாங்கள் ஏன், அது குறிக்கும் வயதில் கல்யாணம் செய்ய வேண்டும்.

Suggested Reading: 

marraige 25 years old girl matrimony society