Advertisment

மீண்டும் இந்த தவறை செய்யாதீர்கள்.

நம் வாழ்க்கையில் பள்ளி, கல்லூரி, வேலை போன்று ஒவ்வொரு பருவத்திலும் நாம் ஒவ்வொரு விஷயம் கற்றுக்கொள்வோம். கல்யாணம் என்பதும் நம் வாழ்க்கையில் ஒரு பருவம். ஒரு சில பேருக்கு அது அடுத்த கட்டம். அந்த கட்டத்தில் ஒரு பெண் மிகவும் குழப்ப நிலையில் இருப்பார்கள்.

author-image
Nandhini
New Update
re marriage

Images are used for representation purposes only.

ஏனென்றால் அந்த பருவத்தில் தான், நாம் புதிதாக ஒரு இடம், புதிதாக ஒரு மனிதருடன், அவரது பழக்கவழக்கங்களை இவள் கடைபிடிக்க வேண்டும்.

Advertisment

சுமார் இருவது அல்லது இருவதைந்து வருடம் ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, ஏதாவது சந்தோஷம் சோகம் என்றாலும் அந்த குடும்பத்துடன் பகிர்ந்து, ஒரு பிரச்சனைக்கு தீர்வுகள் கேட்டு , அவர்களது பழக்க வழங்களை  பின்பற்றி , பின்பு யாரோ ஒருவருக்கு திருமணமாகி, அந்த குடும்பத்தின் பழக்கம் வழக்கத்திற்கு ஏற்ப மாற்றி நடப்பது என்பது ஒரு சிலருக்கு எளிதில் வந்துவிடும். ஒரு சில பேருக்கு அது கடினம். அந்த சமயத்தில் ஒரு சில மன கசப்புகள் ஏற்படும். அதை ஒரு சில பேர் பேசி சரி செய்வார்கள். ஒரு சில பேருக்கு அது கடினம். அதன் விளைவு, விவாகரத்து வரை செல்லும்.

விவாகரத்து வரை போகும் பிரச்சனையா? என்று நாம் அனைவரும் யோசிக்கேல்லாம். பார்க்கும் மூன்றாவது நபருக்கு அது சிறிதாக இருக்கெல்லாம் ஆனால் சம்மந்தப்பட்ட அந்த கணவர் மனைவிக்கு பெரிதாக இருக்கெல்லாம்.

விவாகரத்து ஆன பிறகு ஒரு தனிமை ஏற்படும். அது முதலில் "அப்பாடா ! ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பியாச்சு . இனிமே நமக்கு விடுதலை  என்று தான் தோன்றும்."ஆனால் கணக்கெடுப்பின் படி முக்காவாசி விவாகரத்து ஆன பெண்களோ ஆண்களோ மறுமணம் (Re marriage) செய்கிறார்கள்.

Advertisment

love after divorce

இதில் எந்த ஒரு தவறுமில்லை. கண்டிப்பாக ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒரு துணை இருத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுவது இயல்பு தான். நாமும் மனிதர்கள் தானே. ஆனால் முதல் திருமணத்தில் எதுவெல்லாம் உங்களுக்கு தடையாக இருந்ததோ அதையெல்லாம் மருமணத்தில் கவனிக்க வேண்டும். ஒரு முறை தவறு செய்துவிட்டோம் அடுத்த முறை திருந்த வேண்டும். என்னவெல்லாம் கவனித்தால் மருமணத்தில் அந்த தவறை தவிர்க்கெல்லாம் என்பதை இந்த கட்டுரையில்  காணலாம்.

 Re marriage'ல் முக்கியமாக கவனிக்க வேண்டியவை | Things to keep in my mind before re marrying.

Advertisment

அமைதியான mind ! peaceful ஆன life

மனம் என்பது ஒரு கைக் குழந்தை போல அதற்க்கு தெரியாது என்ன வேண்டும் என்று. நாம் இப்பொழுது தான் ஒரு கடினமான உறவில் இருந்து வெளி வந்து இருக்கிறோம். இப்போது நம் மனம் , இங்கையும் அங்கையும் சுற்றி திரியும் . அதை நிதான படுத்துவதே நம் முதல் வேலை. அதை கண்டதை யோசிக்க விடாமல், ஒரு நிலை படுத்த வேண்டும். அதற்கு உதவும் முறையில், இந்த யோகா, தியானம் , therapy போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் மனம் நிம்மதி அடையும்.

 

Advertisment

இந்த கட்டம் மிகவும் கடினம். இதை கடந்து விட்டால், நன்மை. இந்த நிலை உங்கள் மனம் கண்டதை போட்டு குழப்பி, இல்லாத ஒன்றை உருவாக்கி , இறுதில் எடுக்கக் கூடாத முடிவுகளை எடுக்க நேர்ந்திடும். அதனால் தான் நிதான படுவது முதன்மையான ஒரு செயல்.

Wait girl!!

முன்னர் கூறிய படி இப்போது தான் ஒரு பெரிய கடினமான உறவில் இருந்து வெளி வந்துயிருப்பீர்கள். உடனே நீங்கள் அடுத்த உறவுக்குள் போவதை தவிர்க்கவும். உங்களுக்கு இந்த தன்மையில் ஒருத்தர் மேல் ஈர்ப்பு வந்து "இவர் தான், அந்த இன்னோருத்தவர் " என்று தோன்றுவது இயல்பு. ஆனால்  உடனே அவசரம் படாதீர்கள். இந்த காலத்தில் அப்படி தோணுவது இயல்பு. இந்த கால அவகாசம் அவரை பற்றி நன்றாக புரிந்துக்  உதவியாக இருக்கும். 

Advertisment

Legal advice - அவசியம்

இது ஏன் அவசியம் என்றால் , முதல் திருமணத்தின் விவகாரத்தில் ஏதுனும் சிக்கல்கள் இருக்கிறதா? முதல் திருமணத்தில் குழந்தைகள் இருந்தால், உதாரணம் : குழந்தைங்களை யாரு பார்த்துக்கொள்வது ? அம்மாவிடம் வளருமா? அப்படி என்றால் வாரம் தந்தையிடம் செல்லும் பொது இந்த திருமணதிற்கு ஏதும் பாதிக்குமா?

lawyer

Advertisment

இது போன்ற கேள்விக்கெல்லாம் அந்த சட்ட ஆலோசகரிடம் கேட்டு முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் மட்டும் இருந்தால் அது பெரிய பாதிப்பு தராது அதை நீங்கள் சாதாரணமாக கடந்து செல்லலாம். ஆனால் இதுவே உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்து வைக்க வேண்டும். எந்த காரணத்திலும் அந்த குழந்தையின் மன நிலை பாதிக்கக் கூடாது.

 As always – Be independent.

வாழ்க்கையில் இனிமே அந்த தவறு செய்யக்கூடாது. அதனால் முதலில் உங்களை வலுவாக்கி கொள்ளுங்கள். நீங்களே திறன்களை வளர்த்து, ஒரு நல்ல சம்பாத்தியம் வைத்து கொள்ளவேண்டியதே முதல் கடமை. இன்னொருத்தர் வந்து உங்களை பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஒரு பொழுதும் இருக்க கூடாது. 

Advertisment

மறுமணம் செய்யபோகும் அந்த நபரிடம் மனம் திறந்து பேசுங்கள். உங்களுக்கு எது முக்கியம், என்னென்ன தேவை ,உங்களது விருப்பம் வெறுப்பு எல்லாவற்றையும் பேசுங்கள். அவரையும் பேச சொல்லுங்கள். ஏதேனும் மன கசப்புகள் இருந்தால் மறுமணம் செய்யும் முன்னரே அதை அகற்றி விடுங்கள்.

எந்த உறவாக இருந்தாலுமே அதில் முழு அன்பையும்பாசத்தையும் காட்டினால்  மட்டுமே அந்த உறவு நீடிக்கும். சும்மா பேருக்கு நானும் உன் மேல் பாசம் வைக்கிறேன் என்று கூறுவதெல்லாம் ஒரு வேலைக்கும் ஆகாது. அதனால் இருவரும் உண்மையான அன்போடு பழக வேண்டும். கண்டிப்பாக ஒரு பயம் இருக்கும். பயம் மட்டுமே இருந்தால் கடைசிவரை நம்மக்கு விருப்பமானது கிடைக்காமல் பொய் விடும். முடிந்த வரை கவனமாக இருக்க வேண்டும்.

 

Suggested Reading: 

Suggested Reading: 

Re marriage Things to keep in my mind before re marrying
Advertisment