ஒரே கடுப்பான வேலை, ஒரு கட்டத்தில் பேசாம வேலையே விட்டுவிட்டு வீட்டியிலே இருந்திருக்கெல்லாம் என்று தோணும். ஆனால் ஏதாவது ஒரு commitment இருக்கும். அது மனதில் வரும், அப்படியே அந்த routine ஆரம்பிக்கும்.
"வேலையில் இடைவேளை" (career break) ஒரு பெண் எடுப்பதற்கு காரணங்கள் கல்யாணம், பிரசவம் அல்ல குடும்பத்தில் ஏதுனும் ஒரு சூழ்நிலையாகக் கூட இருக்கெல்லாம். அடிப்படை யோசணையாக work pressure.
ஒரு இடைவேளைக்கு பிறகு திரும்பவும் வேலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் வருவதும் இயல்பு தான்.
First analyse !
பல பேர் செய்கின்ற மிக பெரிய தப்பு என்ன தெரியுமா? அவர்களுக்கு கிடைத்த முதல் வேலைக்கு சேர்ந்து விடுவது. அது மிக பெரிய " NO" நமக்கு கண்டிப்பாக நிறைய வேலை வாய்ப்பு கிடைக்கும், அதனால் கிடைக்கும் முதல் வேலைக்கு செல்வதை தவிர்த்து, இன்னும் இரண்டு மூன்று இடங்களில் விசாரித்து, உங்களது குடும்ப சூழல், நிதி அனைத்தும் மனதில் வைத்து முடிவுகள் எடுக்க வேண்டும். நீங்கள் இடைவேளை எடுக்கும் முன் உங்களுக்கு சரி என்று தோன்றியது இப்போது தோணாது. அதனால் நிதானமாக இருக்க வேண்டும்.
CV யில் Update
பல பெரு இதை நினைப்பதுண்டு. ஏன் நானும் கூடத்தான். rsume'ல் நமது இடைவேளை எடுத்ததை மறைப்பது. அது மிகவும் தவறு. நாம் இடைவேளை எடுத்ததை குறிப்பிட்டால், அதன் மூலம் நமக்கு நல்லது நடக்கவும் வாய்ப்பிருக்கு. அது போக நாம் இடைவேளையில் ஏதேனும் திறமையை வளர்த்துக் கொண்டிருந்தால் அதையும் பதிவிடேலாம். பதிவிடுவதன் மூலம் வேற வேலை பாதையிலும் செல்லலாம்.
Connections
ஒரு இடைவேளையில் இருந்து மறுபடியும் வேலைக்கு செல்ல முடிவெடுத்த பின், நீங்கள் முன்னர் வேலைப் பார்த்த இடத்தில் இருக்கும் நண்பர்களிடம் தெரிய படுத்துங்கள். நீங்கள் வேலைக்கு ஆரம்பிக்க போகிறீர்கள் என்று தெரிந்தால் , கண்டிப்பாக அவர்கள் ஒரு நல்ல இடத்தில் உங்களை refer செய்வார்கள் . அதிகபட்சம் உங்களை எங்கு வேலை இருக்கிறதோ அங்கே உங்களை refer செய்வார்கள்.
அடுத்து என்ன interview தான்!
கண்டிப்பாக அனைவரும் இதை கேட்பார்கள், "ஏன் இந்த இடைவேளை" என்று. அதற்க்கு பதிலை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். உண்மையான பதில்களை கூறுவதே நல்லது. ஒரு சில நேர்காணல் செய்பவர்கள் , ஒரு சிறிய தயக்கத்துடன் இருக்க வாய்ப்பிருக்கு, உங்களால் திரும்ப எந்த தடையின்றி வேலைக்கு வர இயலுமா என்று. அதற்கு நீங்கள் தைரியமாக பதில்கள் கூறினால் பாதி சந்தேகங்கள் தீர்ந்து விடும்.
தொழில் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வேலைக்கு வருவதைப் பற்றி நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் உங்களை சரியான பாதையில் கொண்டு செல்ல இந்த குறிப்புகளை நினைவில் கொள்ளுங்கள்.
Suggested reading:
ஏன்டா, உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா?
Suggested reading:
மாதவிடாய் சுகாதாரத்தை எவ்வாறு பராமரிப்பது
Suggested reading:
மீண்டும் இந்த தவறை செய்யாதீர்கள்.
Suggested reading: