நான் பிழை.. நீ மழலை..

கணவன் மனைவி என்பது ஓர் அழகான உறவு. இரண்டு பேருக்கும் ஒரு புதிய பாதை. இரண்டு பேருக்கும் ஒரு துணை;வாழ்க்கையின் இறுதி வரை வரும் உறவு. இரண்டு புதிய நபர்கள் ஒன்றாக ஒரே வாழ்க்கை வாழ போகிறார்கள் என்றால் கண்டிப்பாக ஒரு சில சண்டைகள் வருவது இயல்பு தான்.

author-image
Nandhini
Aug 24, 2023 16:57 IST
suriya jyothika

images are used for representation purposes only.

சண்டைகள் வந்து ஒரு பிரிவு வருவதன் மூலம் இருவருக்கும் ஒரு புரிதல் வரும். அதையும் மீறி ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் விவாகரத்து வரை செல்வதுண்டு. அப்படி செல்லாமல், அந்த கணவர் மனைவி (husband and wife) உறவை(relationship) எப்படி வலுவாக்கலாம் என்பதே இந்த கட்டுரை.

Advertisment

Tips for a healthy relationship

ஒரே முகம்.

கல்யாணத்திற்கு முன்னும், பின்னும்  இருவரும் ஒரே மாறி இருத்தல் நல்லது. கல்யாணம் முன் இருவரும், ஒருவரை ஒருவர் ஈர்க்க அவர்கள் கூறும் அனைத்திற்கும் சரி என்று தலை ஆட்டும் பழக்கம் இருக்கும். "அது நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர்கள் மனம் நோகக் கூடாது என்பதற்காக செய்வோம்" என்று எண்ணுவது மிக பெரிய ஆபத்து. திருமணம் பின்பு அதே விஷயம் நடக்கும் பொது நம்மை மீறி கோவம் வரும்.

Advertisment

இதற்கு திருமணம் முன்பே இதெல்லாம் பிடிக்கும் பிடிக்காது, என்று இருவரும் மனம் திறந்து பேசிவிட்டால் நல்லது. இல்லை புதிதாக ஒரு விஷயம் நடந்து,அது பிடிக்க வில்லை என்றால் அதை தள்ளிப்போடாமல் அன்றே  பேசிவிட்டால் நல்லது. 

sailing in the same boat!!

இருவரும்  வாழ்க்கை என்ற படகில் பயணம் செய்வதினால் யாராவது ஒருத்திற்கு ஏதாவது பிரச்சனை என்றால் அது மற்று ஒருவருக்கும் பிரச்னை தான். அதனால் அவர்களிடம் பேசி அந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று முடிவு எடுங்கள். என் அலுவலக பிரச்சனையை ஏன் அவரிடம் சொல்ல வேண்டும்? அது உங்கள் தனிப்பட்ட விஷயம் என்றாலும், அந்த விஷயம் உங்கள் மண்டைக்குள் ஓடும். அந்த நேரத்தில் உங்களது கணவரோ அல்ல மனைவியோ ஏதாவது  ஒரு சிறிய விஷயம் செய்தாலும் உங்களுக்கு கோவத்தை உண்டாக்கும். அது தேவையில்லாத மனஸ்தாபங்களை உருவாக்கும். அதற்கு, "எனக்கு இந்த பிரச்சனை இருக்கு" என்று கூறினால்,அவர்களால் முடிந்த தீர்வைக் கூறுவார்கள் அல்ல உங்களை தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள். 

Advertisment

சிறு துளி பெரு வெள்ளம்

nayanthara and vignesh shivan

காதல் திருமணமோ அல்லது வீட்டில் பார்த்து செய்து வைத்த திருமணமோ, கல்யாணம் ஆகும் முன் சிறு சிறு விஷயங்களும் ஞாபகம் வைத்து நாம் அதை கொண்டாடுவோம். இதுவே கல்யாணத்திற்கு பிறகு அதை பெரிதாக மதிக்க மாட்டோம். இதெல்லாம் தான் ஒரு உறவுக்குள் இருக்கும் பிணைப்பு. அதுவே இல்லை என்றால் ஒரு சுவாரஸ்யமாக இருக்காதுஒரு முழம் மல்லிப்பூ, அல்ல அவர்களுக்கு கால் கை  அமைக்கி கொண்டு மலரும் நினைவாக ஏதாவது பேசிக் கொண்டு இருந்தால், மனம் லேசாகும். அந்த உறவும் விட்டுப்போகாமல் இருக்கும். 

Advertisment

தனி மனித சுதந்திரம்

என்னதான் இந்த உறவு இணைபிரியா நபர்கள் என்று கூறினாலும், அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு. உங்களுக்கு நடக்க பிடிக்கும் ஆனால் உங்கள் கணவருக்கு கிரிக்கெட் பார்க்க பிடிக்கும் என்றால் அது அவரின் விருப்பம். ஒருவருக்கு பிடித்தது தான் மற்றவருக்கும் பிடிக்க வேண்டும் என்பதல்ல. அதனால் தனிநபர் விருப்பங்களை மதிக்க வேண்டும். இது தான் உங்களது உறவு வலுவடைய முக்கியமானது.

"வார்த்தைகள்"

Advertisment

இது இரண்டாவது முக்கியமான ஒன்று. என்னதான் என் மனைவி , என் கணவர் எங்களுக்கு உரிமை இருக்கு என்று கூறினாலும், அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் மனம் இருக்கிறது. கோவத்தில் தகாத வார்த்தைக் கூறினால் அது அவர்கள் மனதில் ஆழமாக பதியும். அது, உங்களுக்கும் அவருக்கும் நடுவில் இருக்கும் பந்தம் விட்டு போகும். அதனால் அவர்கள் எதும் பிடிக்காததை செய்தால், கோவத்தை கட்டுப்படுத்தி, சிறிது நேரம் கழித்து " நீங்கள் செய்தது தவறு "என்று கூறினால் அவர்களுக்கு புரியும், திருப்பியும் அந்த தவறை செய்யாமார்கள். 

என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும், சண்டை என்பது வரத்தான் செய்யும். அது தான் மனித இயல்பு. அதையும் மீறி ஒரு உறவை பாதுகாப்பது என்பது விட்டுக்கொடுத்தல் மட்டுமே. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று இருவரும் நின்றாள் உறவு உடைந்து விடும். அதனால் விட்டுக் கொடுத்து போகுதல் நன்று.

 

Advertisment

Suggested reading: 

Advertisment
#husband and wife #relationship #Tips for a healthy relationship