Advertisment

இரவினில் ஓட்டம்.. பகலிலே தூக்கம்..

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் இருக்கிறது "Night is the mother of thoughts". உண்மைதான். இரவு நேரங்களில் தான், நாம் நிறைய, வாழ்க்கைக்கு தேவையான முடிவுகளை எடுத்திருப்போம். அமைதியான சூழல், கிரிக்கெட் பூச்சிகளின் இவை அனைத்தும் நம்மை நிதானப் படுத்தும்.

author-image
Nandhini
New Update
nayanthara

Images are used for representation purposes only.

இவை எல்லாம் காலை முதல் மாலை வரை வேலை செய்யும்  நபர்களுக்கு. இதுவே இரவு நேரங்களில் வேலை செய்பவர்களைக் கேட்டால், "அய்யொ நேரம் போகவே போகாது". தூக்கம் வரும், பசிக்கும், ஒரு மாறி மந்தமா போகும்" என்று தான் முக்காவாசி நபர்கள் சொல்லி கேட்டு இருப்போம்.

Advertisment

இரவு வேலை செய்வதன் என்பது விழிப்புணர்வு மற்றும் செயல்திறன் தடை உண்டாக்குகிறது என்று கருத்துக்கணிப்புகள் கூறுகிறது. ஆனால் அதையும் மீறி நமது வேலையின் நேரமே இரவு என்றால் வேலையை விடவா முடியும்? புரிகிறது. உடம்பையும் கெடுத்துக்க கூடாது. அதற்க்கு என்ன பண்ணலாம்? என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

முதலில் பயம் தரும் செய்தி சொல்லலாமா? இல்லை இரவு நேரங்களில் வெளியும் செய்யும் பொது எப்படி உங்களை பார்த்துக் கொள்வதை பற்றி கூறுவதா? என்ற சந்தேக போராட்டத்தில் இருந்தேன். முதலில் பின் விளைவுகளைப் பற்றி கூறலாம் அதன் பின் தீர்வுகள் சொல்லாம் என்று முடிவெடுத்தேன்.

இரவு நேரங்களில் வேலை செய்வதால் வரும் விளைவுகள்: Effects of working at night

Advertisment

நமது உடல் என்பது இயற்க்கையாக செய்த ஒரு அலாரம். அது நமக்கு எப்போது பசிக்க வேண்டும், எப்போழுது தூங்க வேண்டும், எப்பொழுது எழ வேண்டும் என்று நம் மூளைக்கு எச்சரிக்கை அனுப்பிக் கொண்டே இருக்கும். அதுக்கு ஏற்ப நாமும் நடந்துக்  கொள்வோம். இது சரியாக நடந்துக் கொள்ளும் படி, நமது வழக்கமான நிகழ்வுகள் (routine) உதாரணம் நமது செரிமானம் சீராக இருப்பது , இதயத் துடிப்பு இதையெல்லாம் சீராக வைக்க உதவுகிறது.

digestive system

இரவு நேரங்களில் வேலைபார்ப்பதினால் நமது வழக்கமான முறைகள் கெடுப்பதன் மூலம், தூக்கமின்மையை உருவாக்குகிறது. இதனால் பல பிரச்சனைகள் உருவாக்கெல்லாம் உடல் எடை கூடுவது, சக்கரை நோய், இதய நோய் போன்று பல உடல் ரீதியான பிரச்சனைகள் வரலாம்.

Advertisment

எப்படி வேலை மற்றும் உடல் சமமாக பார்த்துக் கொள்ளலாம் ?

சுய பாதுகாப்பு (self care) மிகவும் அவசியமான ஒன்று. அதுவும் நம் மன நிலை மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். அதற்க்கு yoga,  breathing exercise மற்றும் therapy  கண்டிப்பாக உதவும். மன நிலை அமைதியாக இருந்தால் நாம் மற்ற வேலைகள் சரியாக பார்க்க இயலும்.

Sleep and Power nap

Advertisment

தூக்கத்தை ஒழுங்கு படுத்துதல் மிகவும் அவசியம். இரவு நேரங்களில், உங்கள் வேலை போக மித நேரங்களில் கைபேசியை பயன்படுத்தாமல், தூங்கினால் அடுத்து வேலைக்கு நன்றாக இருக்கும். உதாரணம் உங்களது வேலை நேரம் இரவு ஒன்பது மணி முதல் காலை நான்கு அல்லது ஆறு மணி வரை என்றால், நீங்கள் ஏழு மணி முதல் மதியம் இரண்டு வரை தூங்கி எழுந்து பின்பு மற்ற வேலைகளை பார்த்து பின் அலுவலகம் செல்லலாம். பின்பு நீங்கள் வேலை நேரத்தில் (Power nap) எடுத்துக் கொள்ளலாம் . அப்படி என்றால், ஒரு 10 முதல் 15 நிமிடம் இடைவேளை எடுத்து தூங்குவது பெயர் Power Nap. இதன் மூலம் வேலை நேரத்தில் உங்களுக்கு சிறிது energy கூடுதலாக கிடைக்கும். மனமும் புத்துணர்வுடன் இருக்கும். 

Coffee tea Break.

இதை ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் எடுத்துக் கொள்ளுங்கள். இதை எடுப்பதன் மூலம் உங்களுக்கு அன்று இரவில் செய்யும் வேலைக்கு தகுந்த சக்தி தரும் மேலும் நம்மை அறியாமல் தூக்கம் வருவதை இது தடுக்க இயலும்.

Advertisment

3 roses!

ஆரோக்கியமான உணவு , தேவையான அளவில் தண்ணீர், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் அவசியம். பதப்படுத்தபட்ட உணவை அடியோடு ஒதுக்க வேண்டும். ஏனென்றால் இரவில் செரிமானம் ஆகா சிறிது கடினமாக இருக்கும்.

exercise

Advertisment

நீங்கள் இந்த பழங்கள் போன்று சாப்பிட்டால் உடலுக்கும் நல்லது, வயிறு முழுக்க இல்லாமல் இருப்பதினால் தூக்கம் வருவதும் குறைவாக இருக்கிறது. தண்ணீர், உங்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு, இரவு முழுக்க விழித்து இருப்பதினால், கண்கள் வறண்டு போகாமல் இருப்பதற்கும் , மேலும் இந்த மடிக்கணினி uv கதிர்கள் நமது சருமத்தை பாதிக்கவும் செய்கிறது. அதனால் தண்ணீரை அடிக்கடி குடிக்கவும். உடற்பயிற்சி முடிந்த அளவிற்கு செய்தால், அந்த உடல் சோர்வை தீர்க்கும். ஒழுங்கற்ற உணவு பழக்கம் இதின்  மூலம் சரியாகலாம் 

மேலும் நீங்கள் மது அருந்துவராக இருந்தால், அதை தவிர்ப்பது நல்லது. அது பொதுவாகவே உடல்நலத்திற்கு கேடு, அதுவும் இரவு நேரங்களில் கண் விழித்து வேலை பார்க்கிறீர்கள் என்றால் அடியோடு தவிர்ப்பது நல்லது.

என்னதான் உங்கள் சம்பளத்தில் நீங்கள் திருப்தி அடைந்தாலும், உங்கள் மனம்  மற்றும் உடல் ஆரோக்கியத்தை விட மதிப்பு மிக்கது  எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Advertisment

 

Suggested reading:

 Suggested reading:

 Suggested reading:

 Suggested reading:

 

Effects of working at night self care Sleep and Power nap
Advertisment