முடி உதிர்தல், இருவது வயதாக இருந்தாலும் வரும் எழுவது வயதானாலும் வரும். எந்த வயதிலும் அது தொடங்கலாம். அதற்கு காரணங்களும் பல இருக்கும். முடி உதிர்வைத் தடுக்க நீங்கள் செய்யக்கூடியது சிறியது என்றாலும், அதை சரியான முறையில் செய்தால் தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு முடி உதிர்தலின் மிகவும் பொதுவான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
Reasons for Hair loss!
உணவு பழக்கம்
உங்களுக்கு கட்டுரையில் "பெண்களுக்கு தலை முடி உதிர்தல்" என்ற தலைப்பு பார்த்தவுடனே தெரிந்திருக்கும் முக்கிய காரணம் என்னவாக இருக்கும் என்று. "மன அழுத்தம்" (stress) . வீட்டில் வேலைப் பார்த்து, அலுவலகத்திலும் வேலை பார்த்து , பிள்ளைகளை பார்ப்பது என்று ஓடிக்கொண்டே இருப்பதே முக்கியமான காரணம். அதன் தாக்கம் சரியான உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ளாமல், அதனால் ஊட்டச்சத்து கிடைக்காமல், உடல் சோர்வடையும். சில நேரங்களில் பதப்படுத்தப் பட்ட உணவுகள் சாப்பிடுவதினால் கூட இந்த பிரச்சனைகள் வரலாம். அதனால் அதை தவிர்க்கவும்.
மருந்துகள் & உடல் நிலை
பொதுவாகவே நாம் வயது ஏற, நமது உணவு பழக்கங்கள் மாறுவதினாலும், நமது உடல் ரீதியாக நிறைய மாற்றங்கள் தாண்டி பிரச்சனைகள் வரும். அதனால் அதை சரி செய்ய,ஒரு சில மருந்துகள் உட்கொள்வோம். ஒரு சில மருந்துக்கள் எடுத்துக் கொள்ளவதினால் சில பக்க விளைவுகள் (side effects) வர வாய்ப்பிருக்கு. அதில் ஒன்று இந்த முடி உதிர்தல். ஏதேனும் தீவிரமான பாதிப்பைக் கொடுத்தால் மருத்துவரை ஆணுகுங்கள். எப்போதும் இல்லாமல் நிறையாக உதிர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள் அது PCOS, Thyoroid, Anemia இதில் ஏதேனும் ஒன்றாக இருக்கெல்லாம். அதை சீக்கிரம் சரி செய்தல் நல்லது. நீங்கள் கருத்தடை மாத்திரையை எடுத்துக் கொண்டாலும் முடி உதிரும். menopauseயும் காரணம் தான்
/stp-tamil/media/post_attachments/12gwDAxWosuCSNIoJAP9.jpg)
Genes
ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி உதிர்வதற்கு genetics / genes தான் பொதுவான காரணம். முடி உதிர்தல் genes ஒருவரிடமிருந்தோ அல்லது இருவரிடமிருந்தோ பெறப்படும். பெரும்பாலான பெண்களில் முடி உதிர்தல் காலப்போக்கில் படிப்படியாக ஏற்படுகிறது, ஆனால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது முழு உச்சந்தலையையும் பாதிக்கும். genes மூலமாக வரும் முடி உதிர்வை குறைக்க வழிகள் இருந்தாலும் அது பெரிய பலன் அளிக்காது என்று கருத்துக்கணிப்பு கூறுகிறார்கள்.
முடி உதிர்வை எப்படி குறைக்கெல்லாம்?
முன்னர் கூறிய படி சரியான ஆரோக்கியமான உணவுகள், தகுந்த இடைவேளையில் தண்ணீர் இது இரண்டும் மிகவும் முக்கியமான ஒன்று. இதை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுதல் மூலம் இந்த முடி உதிர்வு படி படியாக குறையும். புரோத சத்து நிறைந்த சாப்பாடை சாப்பிட்டுவதில்
நீங்கள் தலைமுடியில் நிறைய "styling" பண்ணுவதாலும் அதை நிறைய முறை செய்வதாலும் தலை முடியை பாதிக்கும். அதனால் அதை உபயோகிக்கும் பொது தகுந்த " heat protector" பாதுகாப்பு எடுத்துக் கொண்டு உபயோக்க வேண்டும் அல்லது உபயோகிக்க வேண்டாம்.
மது அருந்துவது அல்ல புகை பிடிக்கும் நபராக இருந்தால், தயவு செய்து அதை நிறுத்துங்கள். அது உடல் நடத்திற்கு கேடு.
என்னதான் எவ்வளவு பார்த்து செய்தாலும், ஒரு சில விஷயங்கள் இயற்கையாக நடக்க வேண்டும் என்றால் நடக்கத்தான் செய்யும். அதனால், முடி உதிர்கிறது என்றால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அது வெறும் முடி உதிர்ந்தால் அதுவாக வளர்ந்து விடும்.
Suggested reading:
அய்யய்யோ!! மீண்டும் மீண்டுமா?
Suggested reading:
நான் பிழை.. நீ மழலை..
Suggested reading:
இரவினில் ஓட்டம்.. பகலிலே தூக்கம்..
Suggested reading:
நாலு கழுத வயசான எல்லாமே போச்சா?