அவர்கள் எல்லா வேலையும் ஒழுங்காக தான் செய்வார்கள். ஆனாலும் ஒரு குற்றமாவது கண்டுபிடிக்கவில்லை என்றால் அந்த அக்காக்கும் சரி, அம்மாக்களுக்கும் சரி அன்று நாளே ஓடாது.
ஏறத்தாழ ஒரு ஆறு வீட்டு வேலை புரியும் அக்காக்களிடம் இருந்து நடத்திய நேர்காணலை, கட்டுரை வடிவில் எழுத பட்டுள்ளது.
Life of house maid | வீட்டில் பணிபுரியும் அக்காக்களின் வாழ்க்கை
உங்களது வாழ்க்கை
எங்களது வாழ்க்கையில் வேலை மட்டுமே இருக்கும். எங்கள் வீட்டு வேலை, மற்றவர் வீட்டு வேலை இதான். வீட்டில் என்னதான் மருமகள் இருந்தாலும், அவர்களும் வேலைக்கு போக வேண்டும். அப்போது தான் வீடு கடன் அடைக்க முடியும்.
மாதம் மூவாயிரம் ரூபாய் ஒரு வீடு என்ற கண்ணக்கில் நாங்கள் சுமார் நான்கு வீட்டில் வேலை பார்த்தால் தான் மாத வருமானம் பனிரெண்டு ரூபாய் வரும். அதை வாங்கி கடனை அடைக்கவே சரியாகிவிடும். இழுத்த பிடி வண்டியை ஓடினால் தான் சரி வரும். மருமகள் வாங்கும் சம்பளம், பையன் வாங்கும் சம்பளம் எல்லாம் பிள்ளைகள் படிப்பிற்கும் அவர்களது தேவைக்கும் சரியாகி விடுகிறது. வீட்டுக்கு நாங்கள் வாங்கும் சாமான்கள் எல்லாமே "account" தான்.
காலை எங்கள் வீட்டில் வேலைகள் பார்த்து விட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் போய் வேலை பார்க்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் கூட்டி பெருக்கி, அங்கே இருக்கும் பாத்திரங்களை விளக்கி வைத்து, சில நேரங்களில் எங்களை கழிவறைகளையும் கழுவ சொல்வார்கள். கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். பாத்திரங்களில் கூட சாப்பிட்டதை அப்படியே வைத்து விடுவார்கள். அது அந்த நாற்றம் தாங்க முடியாமல் இருக்கும். ஒரு மாறி வாந்தி வரும்படி இருக்கும்.
நாங்கள் நேர்காணல் எடுத்த அக்காக்களின் கணவர்கள் சில பெரு வாட்ச்மன் ஆகவும் சில பெரு கூலி தொழில் செய்பவராகவும் இருக்கிறார்கள். இந்த இரண்டு தொழிலுக்கும் மது என்பது தான் அவர்களது ஊட்டச்சத்தாக இருக்கும். இது பல வருடங்கள் பின்பற்றியதால் சில பேருக்கு kidney failure ஆகி விட்டது. அதற்கு மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து திரிந்தே பாதி நாட்கள் போய்விடுவதுண்டு. இன்னும் எத்தனை நாட்களில் அவர் உயிர் போய்விடும் என்று தெரியாது. ஏதாவது நடக்கும் முன் எங்களால் எவ்வளவு செய்யமுடியுமோ செய்கிறோம். காசையும் சேர்க்கிறோம் என்று கூறி லேசாக கண் கலங்கினார்.
வேலை செய்யும் இடம் மற்றும் உரிமையாளர்கள்
அவர்கள் எல்லாம் நல்ல குணம் உடையவர்கள். ஏதாவது விடுமுறை வேண்டும் அல்ல சம்பளத்தை முன்னாடி கேட்டால் கண்டிப்பாக கொடுப்பார்கள். ஏதாவது அவர்களது வீட்டில் நல்ல காரியங்கள் என்றால் சாப்பிட அழைப்பார்கள். அவர்களது வீட்டில் ஏதும் கை குழந்தை இருந்தால் கண்டிப்பாக ஒரு மாதம் அல்லது ரெண்டு மாதங்களுக்கு எங்களை பார்த்துக்க சொல்வார்கள். அதற்க்கு சம்பளம் இல்லாமல் தனியாக காசும் கொடுத்து விடுவார்.
ஆனாலும் சில நேரங்களில் ஏதேனும் குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பார். மாதம் இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை எடுத்தால் சம்பளத்தில் கழிப்பர். ஏதும் வீட்டு விஷயங்களுக்கு இவர்களே சமைக்குறார்கள் என்றால் அதற்கு அணைத்து பாத்திரங்களுக்கும் விழும். அதை கழுவி முடிப்பதற்குள் இடுப்பும் முதுகும் ஒடித்துவிடும். அவ்வளவு வலி இருக்கும்.
சம்பளம் ஏற்றி தர யோசிப்பார்கள். இந்த மூவாயிரமே நங்கள் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் ஆனா பிறகு தான். அது வரை இரண்டாயிரம் போல தான் கிடைக்கும்.
அவர்கள் எங்களை கதியதில்லை. ஆனால் முகம் சுழிப்பார்கள் எப்பயாவதுதான். அவர்களும் மனிதர்கள் தான என்று நாங்கள் பொறுத்துக்கொண்டு போய்விடுவோம்.
பாலியல் தொந்தரவு ஏதேனும் இருக்க என்று கேட்டதிற்கு அனைவரும் ,"யம்மா அனைவரும் அம்மா அப்பா தான். யாரும் இது வரை அப்படி நடந்துகொண்டதில்லை." என்று உறுதியாக கூறியதில் ஒரு வித மகிழ்ச்சி இருந்தாலும், இந்த ஆறு பேருக்கு நடக்க வில்லை, ஒரு வேலை வேற ஒரு ஆறு பேரிடம் கேட்டிருந்தால் இதற்கு பதில் கிடைத்திருக்கேலாம் என்று தோன்றியது. பாலியல் தொல்லை இல்லை என்றால் மிகவும் சந்தோஷம் ஆனால் அது இருந்துவிட்டால் தீர்வு வேண்டும் அல்லவா.
பேசி அவர்களது ஆசைகள் என்னவென்று கேட்டதிற்கு ," ஒரு நாள் விடுமுறை வேணும். எந்த அழுக்கு பாத்திரங்களை தொடாமல், துடைப்பத்தை தொடாமல் இருக்க வேண்டும்." என்றார்கள் .ஆனால் அவர்களுக்கே தெரியும் ஒரு நாள் விடுமுறை போட்டால் கடனை கழிக்க முடியாது என்று.
Suggested Reading:
Suggested Reading:
இதெல்லாம் முடி உதிர்தலின் காரணமா?
Suggested Reading:
Suggested Reading: