Infertilityக்கு காரணங்கள் இதுதானா?

கருவுறாமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் "கருத்தரிப்பதில் சிக்கல்" என்பதே தவிர குழந்தை பெற முடியாது என்பதல்ல. இதுவே அந்த காலம் என்றால் அந்த பெண்ணை இழுவு படுத்தி "மலடி" என்ற பட்டப்பெயர் வைத்திருப்பர். இந்த காலத்தில், இது மிகவும் பொதுவான நோயாக இருக்கிறது.

author-image
Nandhini
Aug 30, 2023 10:30 IST
infertility

image is used for representation purposes only.

சுமார் கருத்துக்கணிப்பு படி இந்த infertile பத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கிறது. இதற்கு சிகிச்சை இருக்கிறது. அதில் கண்டிப்பாக "குழந்தை வேண்டும்" என்று நினைக்கும் பெண்களுக்கு பதில் அளித்திருக்கு. ஒரு சில மருத்துவ நிலைகளுக்கு பதிலளிக்காது.

Advertisment

கருவுறாமை என்பதன் அர்த்தம், பன்னிரண்டு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வழக்கமான, பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தை அடையத் தவறியதன் மூலம் வரையறுக்கப்பட்ட ஆண் அல்லது பெண் இனப்பெருக்க அமைப்பின் நோய். ஒரு விஷயத்தை நன்கு ஏற்றுக்கொள்ளுங்கள் பெண் காரணிகள் மூலமாக இந்த நோய் வருவதற்கு காரணம் கால் வாசியாக இருப்பின், மீதியுள்ள முக்காவாசி நோய் வருவதற்கு காரணம், ஆண் காரணிகளே. அதனால் ஒரு பெண் கருவுற்றாமல் இருப்பின், அதன் காரணம் அவள் மட்டும்மல்ல.

பெண்களில் கருவுறாமைக்கான காரணங்கள் | Reason for Infertilty 

கருவுறுதல் , அண்டவிடுப்பின் (Ovulation) இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அண்டவிடுப்பு (ovulation) என்பது உங்கள் கருப்பையில் ஒன்றிலிருந்து முதிர்ந்த முட்டை வெளியாகும் தருணம், இது கர்ப்பம் தரிப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும்.

Advertisment

ovulation

ஆபத்துகாரணிகள் என்னவெல்லாம்? | Risk factors for infertility

வயது

Advertisment

நமது உடல் அமைப்பு, படி பெண்களுக்கு வயது முப்பது ஆகும் போதே பெண்களுக்கு குழந்தை பெறுவதற்கு கடினம் என்று மருத்துவர் கூறினார்கள். வயது ஏற ஏற வாய்ப்புகள் குறையும். ஆனால் முயற்சி செய்தால் ஒரு பெண், அவளது நாற்பது வயதிலும் கருவுற்றலாம். கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள், மருத்துவ உதவி கண்டிப்பாக இருக்கிறது. 

உடல் எடை

எப்படி ஒரு கல்யாணம் என்றால் அந்த ஒரு மாமா வந்துவிடுவாரோ அதே போல் தான் இந்த "உடல் எடை". இவர்கள் இரண்டு பேரோட பந்தம் என்பது சிக்கலான ஒன்று.  உடல் எடை கூடவோ அல்ல ரொம்ப குறைவோ இருந்தால் கருவுற்ற கடினம். 

Advertisment

சரியான ஆரோக்கியமான உணவு முறை இருந்தால் கண்டிப்பாக கர்ப்பம் தரிக்க உதவும். அதில் எந்த ஒரு சிக்கலும் வராது என்பது தெரியவருகிறது.

மன அழுத்தம்

மன அழுத்தத்தினால் கருவுறாமை உண்டாகுகிறதா? அல்ல கருவுறாமைனாலே மன அழுத்தம்  வருகிறதா? என்று தெரியவில்லை.  கருத்துக்கணிப்பு , Ivf மூலமாகவும் பெண் கருவுற்றல்லாம் என்று கூறுகிறது. அதனால் மன அழுத்ததோடு இருக்க வேண்டாம்.

Advertisment

என்ன செய்தால் ஆபத்து காரணிகளை தவிர்கெல்லாம்? | how to lower the risk factors?

சரியான உணவு பழக்கம், உடல் எடை, மனம் நிம்மதி இதெல்லாம் இருக்க வேண்டும். மது  மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள். உங்களது மனம் மற்றும் உடை இரண்டையும் பதட்டமின்றி வைத்துக் கொண்டால் நல்லது.

மருத்துவ ரீதியாக செய்ய வேண்டியது என்ன ?

Advertisment

ivf

மருத்துவ ரீதியாக நிறைய வழி முறைகள் இருக்கிறது . அதில் பொதுவாக உபயோகிக்கும் முறை IVF, அறுவை சிகிச்சை, மாத்திரைகள் . ஒரு வேலை நீங்கள் மருத்துவ ரீதியாக முயற்சி செய்ய விரும்பினால், ஒரு முறைக்கும் பல முறை யோசித்து நல்ல முறையை தேர்தெடுக்க வேணும். ஏனென்றால் இது உங்கள் மனம், உடல் இரண்டும் சம்பந்தம் பட்டவை. நீங்கள் முப்பது வயதிற்கு மேல் கருவுற்ற முயற்சித்தால்,மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நல்லது. மேலும் உங்களது உடலுக்கு தீங்கு வரும் என்று ஏதும் சொன்னால் தயவு செய்து யோசனையை நிப்பாட்டுங்கள்.

முக்கியமான ஒன்று. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் குழந்தை வேண்டும் என்றால் மட்டுமே இத்தகைய முயற்சியை கையாளுங்கள். இந்த சமூகத்திற்காக யோசித்து உங்களை வற்புறுத்திக்கொள்ளாதீர்கள். ஏனென்றால், இது உடல் மனம் இரண்டும் சமந்தம்ப்பட்டது.  

Advertisment

 

 

Suggested Reading : 

 

#how to lower the risk factors #Risk factors for infertility #Reason for Infertilty