நீங்கள் இதை வெளியிடலாம் ஆனால் ஒரு நிபந்தனையோடு என் பெயர் வெளியில் தெரிய கூடாது. நான் பயத்தினால் கூறவில்லை. இப்போது இருக்கும் வாழ்க்கைக்கு இது பாதிப்பாக இருக்கும் என்பதற்காக" என்றார். எங்களால் அதை மறுக்கவில்லை. அவர் கூறியது என்னவென்று பார்ப்போம். கட்டுரை வடிவாகவும், ஒரு சில உரையாடல்கள் நேரடி பேச்சாகவும் கலந்து இருக்கும். அது அதன் தன்மை மாற கூடாது என்பதற்காக.
sexual harassment of women at workplace
"adjustments" இந்த வார்த்தைக்கு அர்த்தங்கள் வேற வேற இருந்தாலும், பெண்களிடம் இந்த வார்த்தை வைக்க படுவதற்கு ஒரே காரணம் "உடலுறவு". அதை நேரடியாக அணுக்கமாட்டார்கள். அதற்கு ஆண்கள் அணுமுறைகள் ஆட்களுக்கு ஏற்ப மாறும். இது அனைத்து ஆண்களையும் சொல்லவில்லை. சரி, இதனால் என்ன பயன்? ஒன்று அந்த காலக் கட்டத்தில் "வேலை" என்றாலே ஆண்கள் தான் செல்வார்கள். தப்பித்தவறி ஒரு பெண் வேலைக்கு வந்துவிட்டால், அவளிடம் வழுவதென்ன, தவறாக பார்ப்பதென்ன, தொடுவதென்ன. இது ஒரு துறையில் தான் இருந்ததா என்றால் இல்லை. முக்காவாசி துறைகளில், அணுகும் முறை மாறுமே தவிர, அர்த்தம் என்பது ஒன்று தான்.
உடனே ஒரு கூட்டம் கிளம்பிவிடும், "இதற்கெல்லாம் காரணம் பெண்கள் கொடுத்த இடமே". ஆனால் இதற்கு பதில் " பெண்கள் பழகும் விதமா? அல்ல ஆண்கள் எடுத்துக்கொள்ளும் உரிமையா " என்று.
இந்த சம்பவம் நடந்து ஒரு பத்து வருடம் இருந்திருக்கும். இன்றும் அதை நினைத்தால் கைகள் நடுங்க ஆரம்பிக்கும் என்று கூறி நடந்ததை கூற ஆரம்பித்தார்.
EEE பட்டதாரியான அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ஒரு ஆண்டு வரை நன்றாக போய்க்கொண்டு இருந்த நிலையில், திடீரென நிறுவனத்தின் நிதியின்மை காரணமாக ஆட்களை வேலை நிறுத்தம் செய்து வந்தார்கள். அப்போ இவர் மற்றும் இன்னொரு பெண் ஊழியர் மட்டுமே இருக்க, அவரது தலைமை இடத்தில் இருக்கும் மேனேஜர் (manager) தனியாக பேச வேண்டும் என்று அழைத்து நிறுவனத்தின் நிலைமையை கூறி நாங்களே வேலையை விட்டு விலகும் படி கேட்டு கொண்டார் . இதை கேட்டு தலையும் புரியாமல் காலும் புரியாமல் இருந்த நிலையில், இவரது குடும்ப சூழல் கண் முன் வந்த நிலையில்,இவருக்கு அறியாமல் கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. மேனேஜர் இவரை சமாதானம் செய்யும் சாக்கில் இவரை தொட்டுக்கொண்டு இருந்தார். இதை உணர்த்த இவர், அங்க இருந்து விலக முயன்ற சமயத்தில் மேனேஜர் அவர் அந்த நோக்கில் ஏதும் தொடவில்லை என்று கூறியுள்ளார். சொல்ல, இந்த தோழிக்கே ஒரு நிமிடம் சந்தேகம் வந்துள்ளது தான் யோசித்தது சரியா தவறா என்று. பின் இந்த பெண்ணும் சமாதானம் ஆகி, தன்னை நிதானம் பண்ணிக்கொண்டார். பின் தான் அழுத காரணத்தை அந்த மேனேஜர் விவரமாக , அன்பாய் அவர் மேல் பாசம் உடையவராய் அந்த சந்தர்ப்பத்தை உபயோகிக்க முயன்றார். “தன்னுடன் உடலுறவு வைத்து கொண்டால் , அவரை வேலையை விட்டு விலகாமல் பார்த்து கொள்வேன் என்று கூறியுள்ளார். இந்த தோழி , அதை கேட்டு அதிர்ச்சியில் ஒரு மாதத்திற்கு அவர் அலுவலகம் செல்லாமல் இருந்துவிட்டு பின் விலகியுள்ளார். ஆனால் அந்த மேனேஜர் இன்னும் அந்த அலுவலகத்தில் இருப்பதாக குறிப்பிட தக்கது"
இதை ஏன் எங்களிடம் கூறுகிறீர்கள்? " நாங்கள் பத்து வருடம் முன் அனுபவித்ததை இன்றும் பல பெண்கள் வேறு அணுகுமுறையில் அனுபவிக்கெல்லாம். அவர்களுக்கு ஒரு வழிகாட்டலாக, உங்கள் பார்வையில் இந்த போன்ற சமயத்தில் ஏது செய்ய வேண்டும் என்பதை கூறினால் நன்றாக இருக்கும் என்பதற்காக" என்று கூறினார்.
அறிவுரை சொல்ல நாங்கள், உங்கள் நிலையை பார்க்கவில்லை. ஆனால் எங்களால் , நீங்கள் அந்த சமயத்தில் என்ன செய்யலாம் என்பதை கூறுகிறோம் ...
2. உங்களிடம் தவறாக நடக்கும் ஆண்களிடம் , மரியாதை , வயதில் மூத்தவர், எனக்கு வேலை வாங்கி கொடுத்தவர் என்றெல்லாம் பாராமல் , “பட்டு” என்று அடித்து விடுங்கள். அதிகபட்சம் கத்துங்கள் அருகில் இருக்கும் நபர்கள் உங்களை காப்பாற்ற வருவார்கள்
3. உங்களின் சுய மரியாதைக்கு முன்னாடி குடும்பத்தை கொண்டு வராதீர்கள். உங்களின் சுய மரியாதையை இழந்து சம்பாதிக்கும் பணத்தில் உங்கள் குடும்பம் நடக்க வேண்டும் என்ற நிலைமை வேண்டாம். இந்த வேலை இல்லையென்றால் வேற ஒரு வேலை.
4. உலகத்தில் எங்கு சென்றாலும் இப்படி ஒரு ஆள் இருக்கத்தான் போகிறார்கள். அதற்கு அந்த சூழலில் எப்படி அவரை எதிர்கொள்ளலாம் என்று சிந்தியுங்கள்.
5. சகோதரிகளே உங்களுக்கு நீங்கள் தான், ஏதாவது இந்த மாறி நேர்ந்தால் உங்களுக்காக பேச நீங்கள் மட்டுமே. நீங்கள் தப்பு செய்யாவிட்டால் எதற்காகவும் யாருக்காகவும் நீங்கள் பயப்படக்கூடாது.
இதெல்லாம் எங்களால் முடிந்த வரை கூறும் அறிவுரைகளே. இதை செயல்படுவது உங்கள் கையில் தான் இருக்கிறது.
Suggested Reading :
சாப்பாடு மட்டும் காரணமில்லை. புரிந்துக் கொள்ளுங்கள்!
Suggested Reading :
எங்களது வாழ்க்கையில் "வேலைகள்" மட்டுமே இருக்கும்.
Suggested Reading :
Suggested Reading :
இதெல்லாம் முடி உதிர்தலின் காரணமா?