/stp-tamil/media/media_files/I8SLY8cv0yYRN0EC4QNC.jpg)
kidney stones
சரியான நேரத்தில் இதை கண்டறிதால், அதை எளிதில் தீர்க்க முடியும். ஒரு சில சிக்கல்கள் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும்.
சிறுநீரக கல் (kidney stones)பொதுவாக சிறுநீரகத்திற்குள் நகரும் வரை அல்லது சிறுநீர்க்குழாய்களில் ஒன்றிற்குள் செல்லும் வரை அறிகுறிகளை ஏற்படுத்தாது. சிறுநீரகக் கல் சிறுநீர்க்குழாய்களில் படிந்தால், அது சிறுநீரின் ஓட்டத்தைத் தடுத்து, சிறுநீரகம் வீங்கி, சிறுநீர்க்குழாய் பிடிப்பை ஏற்படுத்தும், இது மிகவும் வேதனையாக இருக்கும். 
அறிகுறிகள் | Symptoms for kidney stones
1.விலா எலும்புகளுக்குக் கீழே, பக்கத்திலும் பின்புறத்திலும் கடுமையான, கூர்மையான வலி வரும்.
2. அடிவயிறு மற்றும் இடுப்பில் வலி ஏற்படும் 
3. மேலே குறிப்பிட்ட வலிகளில் ஏற்றம் இரக்கம் இருக்கும். வீரியம் சில நேரங்களில் அதிகமாகும், சில நேரங்களில் குறையும். 
4. சிறுநீர் கழிக்கும் பொழுது வலி அல்லது எரிச்சல் ஏற்படும்.
/stp-tamil/media/media_files/iW69U3G9mPXISNJHdTdb.jpg)
5. சிறுநீரின் நிறம் சிவப்பு அல்லது சிவப்பு சார்ந்த நிறங்களில் இருக்கும்.
6. துர்நாற்றம் கொண்ட சிறுநீர் 
7. தொடர்ந்து சிறுநீர் கழித்தல், வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறிய அளவில் சிறுநீர் கழித்தல்.
8. மயக்கம் மற்றும் வாதி வரும் மாறு தோன்றும்.
9. குளிர் காய்ச்சல் . 
எப்போது மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்?
1. உங்களால் தாங்க கூடிய வலியை மீறி இருக்கும் பொது. உங்களால் அந்த வலியால் ரொம்ப நேரம் உக்கார முடியாது.
2.வலியுடன் கூடிய மயக்கம், வாந்தி, குளிர்காய்ச்சல் வந்தால்.
3. சிறுநீர் கழிக்கும் பொது வலி ஏற்படுத்தல் 
4. சிறுநீர் கழிக்கும் பொது இரத்தம் வரும் பொது
மேலே குறிப்பிட்டதில் ஏதேனும் ஒன்று வந்தால் கூட உடனடியாக மருத்துவரை அணுகவும்
இந்த நோய்கள் கண்டிப்பாக ஒருத்தருக்கு வரும் என்பதற்கான காரணிகள் | Risk factor for kidney stones 
குடும்பத்தில் ஒருத்தருக்கு இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அது வர வாய்ப்பிருக்கு. அதுமட்டுமில்லாமல், உங்களுக்கே ஒரு கல் இருந்தால், மற்றொரு கல் உங்களுக்கு உருவாக வாய்ப்பிருக்கு.
முக்கியமான மற்றும் முதன்மையான காரணம் தண்ணீர் அருந்தாமல் இருப்பது. ஒரு மனிதர் அவர்களது உடல் எடையை வைத்து எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது இருக்கிறது. அது ஒரு நாள் இரண்டு நாட்கள் தவறலாம், ஆனால் அது தவறி கொண்டே இருந்தால் கண்டிப்பாக பிரச்சனையை உருவாக்கும்.
/stp-tamil/media/media_files/HqJcQeQv2TSwbNqKMTmE.jpg)
செரிமான நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சை ஏதேனும் மேற்கொண்டு இருந்தால் அதிக வாய்ப்பிருக்கு, ஏனெனில் இது உங்கள் கால்சியம்(calcium) மற்றும் தண்ணீரை உறிஞ்சுவதை பாதிக்கிறது,உங்கள் சிறுநீரில் கல்லை உருவாக்கும் பொருட்களின் அளவை அதிகரிக்கிறது.
  எப்படி தட்டுக்கெல்லாம்? | How to prevent
1. முதன்மையானது தண்ணீர் நன்றாக தாராளமாக குடிக்க வேண்டும். அதுவே பாதி பிரச்சனைக்கான தீர்வு.
2. கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடவும் உதாரணம்: பால், தயிர், இலைகள் காய்கறிகள் போன்ற வற்றை சாப்பிடவும்.
3. சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
4. முட்டை, சிக்கன், மட்டன் போன்றவற்றை தவிர்க்கவும். 
5.கல்லை உருவாக்கும் உணவுகளை தவிர்க்கவும் உதாரணம்: சாக்லேட், தேனீர் போன்றவை.
Suggested Reading:
Suggested Reading:
சாப்பாடு மட்டும் காரணமில்லை. புரிந்துக் கொள்ளுங்கள்!
Suggested Reading:
எங்களது வாழ்க்கையில் "வேலைகள்" மட்டுமே இருக்கும்.
Suggested Reading:
/stp-tamil/media/agency_attachments/x5HHWuqnt5ik7uLhUdAj.png)