இந்த கட்டுரை யார் மனதையும் புண்படுத்தல்ல மேலும் இந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்கள் , தனிநபரை குறிப்பிடவில்லை.
அந்த காலத்தில் முக்காவாசி படங்களின் கதைகள் இப்படித்தான் இருக்கும். கதையின் நாயகன் இருப்பார். குடும்பத்தையே அவர்தான் காப்பற்றுவர். மது, புகைபிடித்தல் போன்ற எந்த ஒரு கெட்ட பழக்கமும் இருக்காது. அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று இருப்பார். கதாநாயகி பணக்கார வீட்டு பெண்ணாக இருப்பர். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கதாநாயகன் மேல் கதாநாயகிக்கு காதல் வரும். பின்னாடியே செல்வார், ஆனால் நாயகன் அவரை புறக்கணிக்க, நாயகி பின்னாலே சுற்றுவர், வில்லன் வந்து நாயகியிடம் ஏதாவது வம்பு செய்யும் பொது நாயகன் காப்பாற்றுவான். இருவரும் நெருக்கமாக கட்டிப்பிடிப்பார். காதல் வந்துவிடும். பின்னர் வில்லனை அடித்து சாகடித்து, இறுதில் நாயகனும் நாயகியும் கல்யாணம் செய்து சந்தோசமாக வாழ்வர்.
இதுவே நாட்கள் போக போக, அந்த 80'ஸ் காலகட்டத்தில் பெரிதாக எந்த ஒரு மாற்றம் இருக்காது. அதே ஏழை நாயகன், படித்த பணக்கார வீட்டு பெண்ணாக நாயகி. இவர்களது சந்திப்பு மோதலில் ஆரம்பிக்கும். பின் இருவருக்கும் சண்டை வர, அது காலப்போக்கில் நாயகனுக்கு காதல் நேர்த்திடும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாயகிக்கும் காதல் வர, நாயகனுக்காக இவர்களை முற்றிலும் மாற்றிக்கொள்ளுமாறு ஆகிவிடும். இந்த காலகட்டத்தில் வில்லனே அந்த அப்பாதான். அவரிடம் சண்டைபோட்டு எப்படி நாயகன், நாயகியை கரம் பற்றுகிறார் என்பது கதையாகும்.
இந்த காலகட்டத்தில், புது விதமாக அணுமுறையை கையாளுவார்கள். எப்போவும் போலே வந்து ஒரு காதல் பாடல், ஒரு இரண்டு மூன்று காட்சிகள் cute ன்ற பெயரில் பண்ணும் சேட்டைகள், வில்லன் கடத்தும் பொருளாக பயன் படுத்துவர். இப்போது இருக்கும் நாயகிகள் அதை விரும்புவதில்லை என்பதினால், இயக்குனர்கள், "நீங்கள் தான் முக்கியம், கதையில் நீங்கள் நகர்த்துகிறீர்கள். படம் முழுக்க வருவீர்கள்" என்று அழைத்து மீண்டும் அழகு பொருளாக மட்டுமே வைக்கின்றனர் . இது ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே. இருவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்பார்கள், நாயகனுக்கு கண்டதும் காதல், நாயகிகள் புறக்கணிப்பர். இருவரும் சண்டை போடுவார்கள். பின்னர் நாயகன் முடியாத ஒருதர்க்கு உதவும் பொது, நாயகி பார்த்து அவர் மீது காதல் வசப்படுவர். இந்த காலகட்டத்தில் வில்லன்கள் அப்பாக்கள் அல்ல மாமாக்கள். எப்போவும் போல சண்டைகள் வரும், இறுதியில் வீட்டார் சம்மந்தத்தோடு கல்யாணம் நடக்கும்.
Women Centric படங்களுமா?
இந்த women centric சினிமாகள் என்பது இப்போது ட்ரெண்ட். ஆனால் ஏன் பெரிதாக வரவில்லை என்றால் முதல் காரணம் பெண்களுக்குகாக எழுத வேண்டும். அவர்கள் ஒரு மாஸ் நாயகனுக்கு எழுத வேண்டியதெல்லாம் ஒரு நாயகிக்கு எழுதினால் எப்படி செல்லுபடி ஆகும்? இதை நாயகிகளே " தேவைக்கு ஏற்ப வைப்போம் மீதத்தை தூக்கிவிடுவோம் "என்று கூறிவர்.
ஒரு கதையில் நாயகிகள் அனைவரும் "secondary characters" தான். கதையில் அவர்களை தூக்கினாலும் கதை நகரும். இதற்கு காரணம் பெண்கள் வெறும் selling point ஆகா இருப்பதினாலேவா? ? இதற்கு பதில்கள் எப்போது கிடைக்குமோ?
Suggested Reading:
இந்த skills இருந்தாலே போதும் உங்களுக்கு Job confirm!
Suggested Reading:
சக்கரை நோயினால் கண்களில் பாதிப்பு!!
Suggested Reading:
Chubby girls'க்கு styling Tips!
Suggested Reading:
நீங்கள் சிரிக்க, நாங்கள் பலியா?