Uterus health சுலபமாக மேம்படுத்தலாம்!

Uterus health ஐ மேம்படுத்துவது எப்படி என்று தெரியாமல் பல பெண்கள் விதவிதமான கர்ப்பப்பை சார்ந்த நோய்களை அனுபவித்து வருகின்றனர். அதற்கான விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே தொடங்கி விடுவது மிகவும் அவசியiமாகும்.

author-image
Pava S Mano
New Update
Uterus health

Image is used for representation purpose only

ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் மிக முக்கியமான பங்கு வகிப்பது uterus தான். Reproduction ஐ விரிவு படுத்துவதற்கும் பெண்களின் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் கர்ப்பப்பையின் ஆரோக்கியம் மிகவும் அவசியம். ஆனால் சிறு வயதிலிருந்து அதன் ஆரோக்கியத்தை பற்றிய புரிதல் யாரிடமும் இருப்பதில்லை. அதற்குக் காரணம் அனைவரின் அறியாமை தான். இதனைப் போக்க நாம் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே கர்ப்பப்பையின் முக்கியத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இன்று பல பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் இருக்கிறது. இவை அனைத்திற்கும் காரணம் அவற்றை எப்படி பராமரிப்பது என்றை விழிப்புணர்வு யாரிடமும் இல்லாமல் போனதுதான். எனவே நாம் கற்றுக் கொள்ள மறந்ததை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.

Uterus ஐ தாக்கும் ஆபத்துகள்:

Advertisment

இன்று பெண்களின் வாழ்க்கை முறை என்பது மாறிவிட்டது. மேலும் அவர்கள் உபயோகிக்கும் சமையலறை கருவிகளில் தொடங்கி அனைத்து விதமான வேலைகளிலும் மாற்றங்கள் வந்துவிட்டது. இதனாலேயே அவர்களின் உடல் உழைப்பு என்பது மிகவும் கம்மியாக தான் இருக்கிறது. அன்று இருந்த பெண்கள் சமையலறையில் இருந்தாலும் அதற்காக உபயோகிக்கும் கருவிகள் உடலுக்கு வேலை தருவது போன்ற இருந்தது. ஆனால் இன்று அனைத்திலும் automation இருப்பதால் பெண்களுக்கான உடல் ரீதியான வேலை என்பது மிகவும் கம்மியாக தான் இருக்கிறது. எனவே உடலில் இருந்து கெட்ட கொழுப்புகள் அப்படியே தங்கி விடுகின்றன. இதனால் உடல் எடை கூடி அவர்களின் ஆரோக்கியத்தை இழக்கின்றனர். முக்கியமாக இன்று பல பெண்களுக்கு சீக்கிரமே கர்ப்பப்பையை எடுத்து விடுகின்றனர். மேலும் பல இளம் தலைமுறையினரிடம் PCOD காணப்படுகிறது. Uterus health பராமரிக்க என்ன வழி என்பதை சீக்கிரம் கண்டுபிடித்து அதனை பின்பற்றுங்கள்.

இதை செய்யுங்கள்!

  • இப்பொழுது பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். பல பெண்களுக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்த வேலை செய்வது போன்று தான் வேலை இருக்கிறது. ஆனால் நீண்ட நேரம் பெண்கள் அமர்ந்த வேலை செய்யும் பொழுது இடுப்பு பகுதி அதாவது கர்ப்பப்பை இருக்கும் பகுதிக்கு செல்லும் ரத்தமானது பாதிக்கப்படுகிறது. எனவே இதனை சீர்படுத்த, நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது எழுந்து நடக்க முயலுங்கள்.

  • உங்களின் உணவில் தினமும் தானியங்களை சேர்த்துக் கொள்வதில் குறியாக இருங்கள். இதனால் fibroid கட்டிகள் வராமல் இருக்கும். மேலும் நம் உடம்பில் சுரக்கும் அதிக estrogen ஐ இது கட்டுப்படுத்தும்.

  • பெண்களுக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆண்களை விட பெண்கள் தான் நீண்ட நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் நம் வீடுகளில் அப்படி நடப்பதில்லை. சரியான தூக்கம் தான் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மற்றும் ஹார்மோன் சமநிலைக்கு சரியான தீர்வாக அமையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • என்னதான் கடைகளில் சாப்பிட்டாலும் நம் வீட்டில் நாம் சத்தோடு சமைப்பது போல் வராது. சுவைக்காக மயங்கி வெளி உணவை அடிக்கடி சாப்பிட வேண்டாம். பிளாஸ்டிக் பைகளால் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் சாப்பிடும் பொழுது நம் உடம்பில் இருக்கும் ஹார்மோன் சமநிலை குறைக்கப்படுகிறது. எனவே அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த உணவை மட்டுமே சாப்பிடுங்கள்.

  • பெண்களுக்கு கர்ப்பப்பை ஆரோக்கியம் சீர்குலைந்தால் எலும்புகள் சம்பந்தமான பிரச்சனைகள் வரும். எனவே தினமும் பால் தயிர் அல்லது மோர் குடியுங்கள். இதனால் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது.

  • Vitamin C அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழம் ஆரஞ்சு முட்டைகோஸ் கொய்யாப்பழம் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் பொழுது, நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. மேலும் நார்ச்சத்து இதில் இருப்பதால், ovarian cancer ஐ இது தவிர்த்து விடுகிறது.

Uterus health

Advertisment
  • நீங்கள் அதிகம் stress ஆகிறீர்கள் என்றால் அது உங்களின் கர்ப்பப்பை ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும். எனவே மனநல ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். தினமும் யோகா மற்றும் தியானம் அல்லது உங்களின் மனரீதியான பிரச்சனையை போக்குவதற்கு உங்களுக்கு பிடித்த ஏதோ ஒன்றை செய்யுங்கள்.

  • உடற்பயிற்சி மிகவும் முக்கியமாகும். ரத்த ஓட்டம் சரியாக இருப்பதற்கு உடற்பயிற்சி தான் உறுதுணையாக செயல்படுகிறது. கைகளை வலுவு படுத்த இது மிகவும் முக்கியமாகும். மேலும், uterus health ஐ மேம்படுத்த தினமும் உடல் பயிற்சி செய்வது அவசியம்.

Uterus health

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றத்தை பின்பற்றி, நோய்களிலிருந்து விடுபட்டு வாழுங்கள்!

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/health/foods-to-control-cholesterol-1386529

https://tamil.shethepeople.tv/health/reason-behind-mood-swing-1381141

https://tamil.shethepeople.tv/health/know-the-reason-for-your-acnepimples-137903

https://tamil.shethepeople.tv/health/weight-maintenance-tips-1362813

Uterus health