Advertisment

Cholesterol ஐ குறைக்க இந்த உணவை சாப்பிடுங்கள்!

Cholesterol உள்ளவர்கள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள். நாக்கை நடனமாட செய்யும் சுவையைத் தாண்டி, நம் நாக்கை கட்டுப்படுத்தும் சுவையை கொண்டால் எந்தவித உடல் ரீதியான பிரச்சனைகளும் வராது. சுவைக்கு அடிமையாகாமல் ஆரோக்கியமான உணவை சாப்பிட என்ன வழி?

author-image
Pava S Mano
New Update
Cholesterol

Image is used for representational purpose only

எந்த ஒரு உடல் பரிசோதனைக்கு சென்றாலும் முதலில் மருத்துவர்கள் கவனிப்பது cholesterol அளவைதான். இதுதான் நம் ரத்த நாளங்களில் வலியாக கல்லீரலுக்கு சென்று சரியான செரிமானத்திற்கும் செல்களை உருவாக்குவதற்கும் ஹார்மோன்களை சமப்படுத்துவதற்கும் மிகவும் முக்கியமான ஒன்று. கல்லீரல் ஏற்படுத்தும் கொழுப்புகளை காட்டிலும் நம் உணவில் நாம் சேர்த்துக் கொள்ளும் கொழுப்புகள் எந்த வகை என்பது மிகவும் முக்கியம். இப்பொழுது அதிகப்படியான இருதய நோய் வருவதற்கு LDL எனப்படும் கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பதால்தான். ரத்த பரிசோதனையின் மூலம் இதன் அளவை கண்டறிய முடியும். LDL இன் அளவு அதிகமாக இருந்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பதாக அர்த்தம். இதனை சரி செய்வதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் சிறிது மாற்றத்தை கொண்டு வந்தால் போதும். உடம்பில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு தினமும் இந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம்.

Advertisment

பழங்கள்:

காலை உணவோடு நாம் தினமும் பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் அதில் இருக்கும் நார்ச்சத்து நம் உடம்பில் இருக்கும் கொழுப்பின் அளவை சீராக வைக்க உதவுகிறது. தினமும் குறைந்த அளவு 25 கிராம் நார்ச்சத்து ஆவது நம் உடம்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே நார்ச்சத்து நிறைந்த பழங்களை தினமும் உட்கொள்ளுதல் அவசியம். "An apple a day keeps the doctor away" என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்ப தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவது நம் உடம்பின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கும் செல்களின் ஆரோக்கியமான செயல்பாட்டுகளுக்கும் இது அவசியம் ஆகும். வாழைப்பழங்கள் தினமும் எடுத்துக் கொள்வதால் செரிமானத்தை அது ஊக்குவிக்கிறது.

கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய்:

Advertisment

கத்திரிக்காயிலும் வெண்டைக்காயிலும் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் நாம் சிறிது சாப்பிட்டாலே நிறைய சாப்பிட்டது போல் உணர்வு இருக்கும். மேலும் இதனால் செரிமானம் சீராக்கப்படுகிறது. வெண்டைக்காயில் இருக்கும் பசை போன்ற சத்து நம் உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. சுண்டல் கருப்பு அவரை போன்ற பருப்பு வகைகளிலும் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. நம் சராசரி உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால் தேவையற்ற கொழுப்பு நீங்குவதற்கு இது உதவியாக இருக்கும். 

Cholesterol

கீரை வகைகள்:

Advertisment

ரத்தநாணங்களில் ஏற்படும் அடைப்பை சுத்தம் செய்வதற்கு நம் உடம்பில் நைட்ரிக் ஆக்சைடின் உற்பத்தி மிகவும் தேவை. அதை கொடுப்பது கீரைகள் தான். எனவே தினமும் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும். மேலும் கீரையில் இருக்கும் பொட்டாசியம் ஆன்ட்டிஆக்சிடென்ட் மற்றும் நார் சத்து கொலஸ்ட்ராலால் ஏற்படும் hypertension ஐ கட்டுக்குள் வைத்திருக்கும்.

Nuts மற்றும் oats:

Walnuts தினமும் சாப்பிடுவதால் இருதய நோய் வராமல் தடுக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலக்கடலைகளில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நம் வயிற்றுக்குள் கொழுப்பை தங்க வைப்பதை தவிர்க்கிறது. பாதாம் சாப்பிடுவதாலும் இருதய நோய் வராமல் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதனால் HDL பராமரிக்கப்பட்டு LDL குறைக்கப்படுகிறது. Oats இல் இருக்கும் beta-glucan என்னும் நார்சத்துடைய பொருள், LDL இன் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் இது பயன்படுகிறது.

Advertisment

எந்த உணவை சாப்பிட்டாலும் உங்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சாப்பிடுங்கள்! 

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/benefits-of-flax-seeds-1385723

Advertisment

https://tamil.shethepeople.tv/health/reason-behind-mood-swing-1381141

https://tamil.shethepeople.tv/health/know-the-reason-for-your-acnepimples-1379039

https://tamil.shethepeople.tv/health/weight-maintenance-tips-1362813

Advertisment



Cholesterol
Advertisment