Advertisment

Flax seeds ல பெண்களுக்கு இவ்வளவு நன்மை இருக்கா?

ஆரோக்கியம் என்று வந்துவிட்டால் அதனை காப்பதற்காக நாம் எதை வேண்டுமானாலும் சாப்பிட தயாராக இருக்கிறோம். அவற்றில் இன்று பிரபலமாகி வரும் ஒன்றுதான் Flax seeds. இதில் பொதுவான நன்மைகள் இருந்தாலும், பெண்களுக்கென்று குறிப்பாக பல நன்மைகளை இது கொடுக்கிறது.

author-image
Pava S Mano
New Update
Flax seeds

Image is used for representational purpose only

Flaxseeds என்பது இப்பொழுது அதிகமாக அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு பயிர் வகையாகும். இதை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பதை புரிந்து கொள்ளாமல் பல விதங்களில் பல வீடியோக்களை பார்த்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு flax seeds மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுவும் குறிப்பாக பெண்களின் ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு இந்த பொருளானது நேர்மறை விளைவுகளை கொடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் இருக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் பெண்களின் எலும்புகள் மற்றும் தசைகளை வலுவூட்ட மிகவும் பயன்படுகிறது. மேலும் இதயம் மற்றும் மூளைக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் இது வழங்குகிறது.

Advertisment

இதன் சிறப்புகளை கீழே பார்க்கலாம்:

Flax seeds

  • Flax seeds இல் அதிகப்படியான phytoestrogens என்னும் தாவரக் கலவை இருப்பதால் பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன்ஸ் சமநிலையை சீராக வைத்திருக்க menopause மற்றும் PMS காலங்களில் இது மிகவும் உதவியாக இருக்கிறது

  • நம் உடம்பில் அதிகமாக estrogen சுரப்பதால் ஏற்படும் breast cancer, fibroids மற்றும் endometriosis போன்ற நிலைகளில் இருந்து பாதுகாக்கவும் estrogen சுரக்கும் சமநிலையை சீராக வைத்திருப்பதற்கும் இது மிகவும் உள்ளதாக இருக்கிறது

  • நாம் தினமும் flax seeds அருந்துவதால், menopause பழங்களில் ஏற்படும் இரவு நேர அதிகம் ஏற்பது மற்றும் private உறுப்பில் ஏற்படும் வரட்சித் தன்மையை இது குறைக்கிறது

  • மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களை இது ஒழுங்குபடுத்துகிறது. உடம்பில் ஏற்படும் வீக்கங்களையும் இது குறைக்கிறது.

  • Flax seeds ஐ தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்களுக்கு கருவுறுதல் மிகவும் சுலபமாக இருக்கிறது.

  • நம் சருமத்திற்கு என்று பார்க்கும் பொழுது ஆரோக்கியமான செல்லை உற்பத்தி செய்து சரும வீக்கம் போன்ற விளைவுகளில் இருந்து சருமத்தின் ஆரோக்கியத்தை காக்கிறது. மேலும் எப்பொழுதும் இளமையான மற்றும் துடிப்பான சருமத்தை இது கொடுக்கிறது Flax seeds

  • Flax seed இல் இருக்கும் Omega 3 அமிலம் ரத்த அழுத்தத்தை குறைத்து, உடம்பில் ஏற்படும் தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது. இதனால் இதயத்தின் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

  • அதிக நார்ச்சத்து flax seeds இல் இருப்பதால், எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை சாப்பிட்டாலும் மிகவும் நல்லது. மேலும் அதிகம் சாப்பிட்டது போன்று உணர்ச்சியே இது கொடுப்பதால் நாம் தினமும் எடுக்கும் Calorie இன் அளவு மறைமுகமாக குறைக்கப்படுகிறது.

  • Flax seeds இல் இருக்கும் நார்ச்சத்து சீரான செரிமானத்தை கொடுக்கிறது.

  • Lignans என்னும் பொருள் flax seeds இல் இருப்பதால் எலும்பு ஆரோக்கியம் காக்கப்படுகிறது. பெண்களை தாக்கும் osteoporosis இன்னும் எலும்பு சம்பந்தமான நோய் வருவதற்கான தீவிரத்தை இது குறைக்கிறது.

  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படுகின்றனர்

  • மேலும் அவர்களின் சர்க்கரை ரத்த அளவு சீராக இருக்கிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன

Advertisment

துரித உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்கும் ஆரோக்கிய பிரியர்களுக்கு flax seeds ஒரு வரப்பிரசாதமே!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/difference-between-dandruff-and-psoriasis-1381301

Advertisment

https://tamil.shethepeople.tv/health/facial-hair-removal-methods-1381241

https://tamil.shethepeople.tv/health/know-the-reason-for-your-acnepimples-1379039

https://tamil.shethepeople.tv/health/how-to-fall-asleep-fast-1377601

Advertisment

 

Flax seeds
Advertisment