Advertisment

Dandruff/ Psoriasis வித்தியாசம் என்ன?

தலைமுடி ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். அதனை சரியாக பராமரிக்கவில்லை என்றால் பொடுகு மற்றும் ஸ்கேல்ப் சொரியாசிஸ் போன்ற சரும நிலையை பாதிக்க கூடிய விஷயங்கள் நடந்துவிடும். அவற்றை எப்படி பாதுகாப்பது என்பதை இக்கட்டுறையில் காணலாம்!

author-image
Pava S Mano
New Update
Dandruff

Image is used for representational purpose only

இன்று அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பிரச்சனையாக தலையில் ஏற்படும் பொடுகு பார்க்கப்படுகிறது. இதை பல பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. அதுவே வந்து சென்று விடும் என்று நினைத்து  கண்டுக்காமல் விட்டு விடலாம். ஆனால் அப்படி செய்வது scalp ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மருத்துவர்கள் சொல்வது பொடுகு தான் scalp psoriasis காண மிகப் பெரிய காரணம் என்று. பொடுகை நாம் கண்டுக்காமல் விட்டு விட்டால் அதன் தன்மை மாறி சொரியாசிஸாக மாறிவிடும். எனவே dandruff வந்த உடனேயே தோல் மருத்துவரை பார்த்து அதற்கான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு விடுங்கள். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு ஆரோக்கியத்தை கெடுத்து விடாதீர்கள். உங்களுக்கு சிறிது அறிகுறி வித்தியாசமாக தென்பட்டால் உடனே மருத்துவரை நாடி அதற்கான பரிசோதனையை பெற்று மருந்துகளை உடனே எடுத்துக் கொள்ள ஆரம்பிங்கள். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதுவே உங்கள் வருங்கால ஆரோக்கியத்தை பாதிக்க ஒரு பாலமாக இருந்து விடும்.

Advertisment

Dandruff என்றால் என்ன?

Dandruff

பொடுகு என்பது ஒரு பொதுவான தலையில் ஏற்படும் தோல் நிலையாகும். தலையில் எங்கெல்லாம் oil glands அங்கு அதன் சருமத்தின் பகுதிகளை இது பாதிக்கிறது. பொடுகு செதில்களாக இருக்கும். ஏற்படும் வறட்சியால் பொடுகு ஏற்படுகிறது. குளிர் காலங்களிலும் அடிக்கடி தலைக்கு ஷாம்பூ போடுதல் மற்றும் வறண்ட தலைமுடி போன்ற காரணங்களால் பொடுகு வருவது சாதாரணமாகிவிடுகிறது.

Advertisment

Scalp psoriasis என்றால் என்ன?

Dandruff

ஸ்கெல்ப் சொரியாசிஸ் என்பது நோய் எதிர்ப்பு செல்கள் அசாதாரணமாக வளரும் ஒரு நிலையாகும். இதில் வரும் செல்கள் ஊதா அல்லது சாம்பல் நிற செதில்களாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செதில்கள் திட்டு திட்டாக சிதறிக் கிடக்கும் என்று கூறுகின்றனர். காது நெற்றி மற்றும் கழுத்தின் பின்னால் உள்ள இடங்களில் இது வரக்கூடும் என தெரிவிக்கின்றனர்.

Advertisment

என்ன வித்தியாசம்?

Scalp இல் ஏற்படும் சொரியாசிஸ் தடிமனான வெள்ளி செதில்கள் கொண்ட சிகப்பு நிற தகடுகளைக் கொண்டது ஆனால் பொடுகு மெழுகு செதில்களாக இருக்கும், மேலும் பொடுகு இருந்தால் தலை அரிக்கும். பொடுகு அடிக்கடி எண்ணெய் பசையுடன் இருக்கும். 

பொடுகையும் சொரியாசிசியும் நினைத்து நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். பொடுகு தலையில் ஏற்படும் கிருமிகளுடன் சேர்ந்து உருவாகும் ஒன்றாகும். ஆனால் சொரியாசிஸ் என்பது நம் சருமத்தின் மேலே உருவாகும் ஒரு dead skin condition ஆகும்.

Advertisment

எப்படி தடுப்பது?

  • வைட்டமின் டி சத்துக்கள் உள்ள உணவை சாப்பிடுவதால் சொரியாசிஸில் இருந்து விடுபடலாம். Immunity boost செய்யக்கூடிய உணவுகள் மற்றும் பானங்களை குடிப்பது மிகவும் அவசியமாகும்.

  • மேலும் salicylic acid ஷாம்பூ பயன்படுத்தலாம்

  • பொடுகை அகற்றுவதற்கு selenium sulphide அடங்கிய ஷாம்புவை பயன்படுத்தலாம்.

  • இருந்தாலும் மருத்துவரை நாடி அவர்களின் ஆலோசனைப்படி அனைத்தையும் செய்யுங்கள்.

  • நீங்கள் எவ்வளவு முறை ஆன்ட்டி டான்ரப் ஷாம்பு பயன்படுத்தியும் பொடுகு போகவில்லை என்றால் மருத்துவரை உடனே பார்த்து விடுங்கள்.

  • சொரியாசிஸ் இருந்தால் உங்கள் காதுகளிலும் அதற்கான பாதிப்பு தெரியும்.

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/health/know-the-reason-for-your-acnepimples-1379039

https://tamil.shethepeople.tv/health/hair-wash-mistakes

https://tamil.shethepeople.tv/health/benefits-of-intermittent-fasting

Advertisment

https://tamil.shethepeople.tv/health/tips-for-weight-gain

 

dandruff psoriasis
Advertisment