நாம் தினமும் செய்யும் Hair wash mistakes!

கூந்தல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் நாம் தினமும் முகத்தை பராமரிக்கும் அளவிற்கு கூந்தலை பராமரிப்பது இல்லை. தலைக்கு குளிக்கும் பொழுது நாம் நம்மை அறியாமலேயே சில தவறுகள் செய்கிறோம். அந்தத் தவறு நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

author-image
Pava S Mano
New Update
Hair care

Image is used for representational purpose only

இன்று ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தலைமுடி பராமரிப்பு என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. அனைவருக்கும் தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. அதற்கென பல நவீன பொருட்களும், ஷாம்பூக்களும், சலூன்களும் வந்துவிட்டது. ஆனால் பொதுவாகவே நம்மில் பல பேருக்கு முடியை எப்படி பராமரிப்பது என்ற basic knowledge இல்லை. நம் தலை முடியை சரியான முறையில் கழுவுவதால் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

Advertisment

அடிக்கடி ஷாம்பூ வேண்டாம்:

Hair care

அனைவருக்கும் hair bath எடுப்பது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் ஷாம்புவை பயன்படுத்தி தலைமுடியை கழுவுவது அடிக்கடி செய்தால், தலைமுடியில் இருந்து இயற்கையாக வரும் சில விஷயங்கள் அகன்று விடும். மேலும் பருவ நிலைக்கு ஏற்ப உங்கள் தலைமுடியில் ஏற்படும் மாற்றங்களும் மாறுதலாகவே இருக்கும். தேவைப்பட்ட நேரங்களில் மட்டுமே ஷாம்புவை பயன்படுத்தி கழுவுங்கள். இல்லை என்றால் வெறும் தண்ணீரிலேயே தலைக்கு குளித்து விடுங்கள். நீங்கள் தலைக்கு குளிக்கும் பொழுது சூடான தண்ணீர் பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால் இது தலைமுடியின் வேரை வலுவிழக்கச் செய்யும். மேலும் மிதமான நீரில் நீங்கள் தலைக்கு குளித்தால் உங்கள் கண்டிஷனரில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்ச மிகவும் எளிதாக இருக்கும். குளிர்ந்த நீரில் தலை குளிப்பதன் மூலம் முடி உதிர்வதை தவிர்க்கலாம் மேலும் முடியை shine ஆக வைத்துக் கொள்ளலாம்.

Conditioner சரியாக பயன்படுத்துங்கள்:

நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு முன் உங்கள் முடிகளை சீப்பல் வைத்து சிக்கு எடுத்து விடுங்கள். இதனால் நீங்கள் தலைக்கு குளிக்கும் பொழுது சுலபமாக இருக்கும். மேலும் தலைமுடியிற்கு ஏற்ப கண்டிஷனர்  பயன்படுத்துங்கள். உங்கள் முடி straight hair என்றால் அதற்கென்று ஒரு வகையான conditioner இருக்கிறது. அதேபோல் உங்கள் முடி curly hair என்றால் அதற்கு ஏற்ப conditioner பயன்படுத்துங்கள். கண்டிஷனரை அளவாக பயன்படுத்துங்கள். அளவிற்கு மீறி பயன்படுத்தினால் அதுவே உங்கள் முடியை சேதம் அடைய செய்ய வாய்ப்புள்ளது. நம் முடியில் இருக்கும் இயற்கையான ஈரப்பதம் மற்றும் nourishment பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே coin sized conditioner பயன்படுத்தினாலே போதும்.

Product change வேண்டாம்:

Hair care

நீங்கள் அடிக்கடி  உபயோகிக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை மாற்றினால் அதை ஒப்புக்கொள்ள உங்கள் தலைமுடிக்கு சிறிது காலமாகும். எனவே அந்த hair care products இன் முழு பையனையும் உங்களால் அனுபவிக்க முடியாமல் போய்விடும். மேலும் உங்கள் முடிக்கு ஏற்ப ஆராய்ச்சி செய்து எது சரியோ அந்த பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்துங்கள். 

Advertisment

சில tips:

  • தலைமுடியை துவட்டுவதற்கு உடம்பிற்கு உபயோகிக்கும் துண்டையே பயன்படுத்தாதீர்கள்.

  • ஷாம்பூ மற்றும் கண்டிஷனரை பயன்படுத்திய பின் தண்ணீர் ஊற்றி 30 வினாடிகளாவது நன்கு அலசுங்கள்.

  • வறண்ட முடியில் ஷாம்பூ போடாதீர்கள். என்னை வைத்த பின்பே தலைக்கு ஷாம்பு போட்டு குழியுங்கள்

  • ஈரமாக இருக்கும்போது தலை முடியை அழுத்தி தேய்க்காதீர்கள், மிருதுவாக தலைமுடியை காய வையுங்கள்

  • ஷாம்பு போட்ட பின்பு அதனை ஊற வைக்காமல் உடனேயே கழுவி விடுங்கள்

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/nayanthara-beauty-secret

https://tamil.shethepeople.tv/health/yoga-poses-for-glowing-skin

https://tamil.shethepeople.tv/health/5-ayervedic-skin-care-secrets

https://tamil.shethepeople.tv/society/benefits-of-marrying-after-30



hair care