Nayanthara வின் Beauty secret

ஆரோக்கியமான சரும பராமரிப்பு அனைவரும் மேற்கொள்வது மிகவும் அவசியம். மாசு நிறைந்த தற்போதைய வாழ்க்கை சூழலில் சருமத்தை பராமரிப்பது சற்று சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் நயன்தாரா எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவரின் சரும பராமரிப்பை கைவிடுவதே இல்லை!

author-image
Pava S Mano
New Update
Nayanthara beauty secret

Image is used for representational purpose only

எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் நயன்தாராவின் தோற்றம் மிகவும் பளிச்சென்று இருப்பதற்கு அவர் தினமும் பின்பற்றும் beauty secrets தான் காரணம். Lady superstar இன்று அனைவராலும் அழைக்கப்படும் நயன்தாரா திரைப்படத் துறையில் இன்று limelight இல் இருந்து வருகிறார். இவர் தமிழ் முதல் இந்தி வரை உள்ள அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ரசிகர் பட்டாளம் மிகவும் அதிகம். தென்னிந்திய திரை உலகில் கொடிகட்டி பறக்கும் இவரது நடிப்பிற்கு மயங்காதவர் யாரும் இல்லை. இவருடைய திருமணம் மற்றும் Surrogacy மூலம் குழந்தை போன்ற விஷயங்கள் வாழ்க்கையின் மீதான இவரின் புதிய கண்ணோட்டத்தை இவ்வுலகிற்கு காட்டுகிறது. எந்த உடையிலும் எந்தத் தோற்றத்திலும் இவரின் அழகிற்கான காரணம் என்ன?

Ayurvedic Skin care:

Advertisment

Nayanthara beauty secret

இன்று பல காஸ்மெட்டிக் பிராண்ட் வந்து கொண்டே இருக்கிறது. எத்தனை வந்தாலும் அதற்கான ஆதரவு மற்றும் விற்பனை மக்களிடம் அமோகமாகவே இருக்கிறது. திரையுலகை பொருத்தவரை நடிகைகள் பயன்படுத்தும் அனைத்து அழகு சாதன பொருட்களும் விலை அதிகமாகவே இருந்தாலும் தயங்காமல் பயன்படுத்துவர். ஆனால் நயன்தாரா சருமத்திற்கு எந்த பக்க விளைவும் ஏற்படாத ஆயுர்வேத அழகு சாதன பொருட்களை மட்டுமே உபயோகிக்கிறார்.

Sunscreen இன் முக்கியத்துவம்:

சூரியனிலிருந்து வரும் UV கதிர்கள் நம் சருமத்தை சேதம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் skin cancer வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். சூரியனிலிருந்து வரும் வெப்பம் நமது சருமத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே அனைவரும் Sunscreen பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் நயன்தாராவும் sunscreen போடாமல் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை. சூரிய ஒளி வைட்டமின் டி சத்தை கொடுத்தாலும் அதில் இருந்து வரும் கதிர்கள் சருமத்தை பாதிப்படைய செய்யும். எனவே வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது கட்டாயம் Sunscreen அணிந்து செல்லுங்கள்.

தண்ணீரின் மகத்துவம்:

Advertisment

Nayanthara beauty secret

நம் உடம்பு முக்கால்வாசி தண்ணீரால் ஆனது. எனவே நாம் நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பார்த்துக் கொள்ள தினமும் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் நல்லதாகும். நீர் சத்து குறைபாடு இருந்தால் சருமம் பொலிவை இழக்கும். எனவே சருமத்திற்கு மாய்ஸ்ரைசர் மற்றும் உடலுக்கு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். நயன்தாரா தினமும் இளநீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அவர் தண்ணீர் அதிகம் பருகுகிறார். சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி நிறைந்த பழச்சாறுகளை தினமும் குடிப்பதாலேயே அவரின் சருமம் பளபளவென இருக்கிறது.

CTM Routine:

CTM என்று அழைக்கப்படும் Cleansing, Toning மற்றும் Moisturizing routine சருமத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். சரும பராமரிப்பு மேற்கொள்பவர் இந்த முறையை பின்பற்றினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சர்மம் மென்மையடைந்து, பொலிவாகும். நயன்தாரா எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இந்த முறையை தவறாமல் பின்பற்றி வருகிறார்.

Advertisment

உங்கள் முகம் அழகாக இருக்க இந்த முறையை பயன்படுத்துங்கள். மேலும் அகத்தின் அழகுதான் முகத்தில் தெரியும். உங்கள் அகத்தை அமைதியாக வைத்துக் கொண்டாலே, முகம் பளபளக்கும்!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/benefits-of-intermittent-fasting

https://tamil.shethepeople.tv/health/yoga-poses-for-glowing-skin

https://tamil.shethepeople.tv/health/5-ayervedic-skin-care-secrets

https://tamil.shethepeople.tv/health/how-to-handle-womens-mental-health




Beauty secret