Skin Care கான 5 Ayervedic ரகசியங்கள்

இன்று Beauty Parlours தொடங்கி Cosmetology clinic என சருமம் மேம்பட பல நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. ஆனால் இதன் பக்க விளைவுகள் மற்றும் விரைவான தீர்வை நம்பலாமா என பலதரப்பட்ட கேள்விகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. எந்த காலமானாலும் ஆயுர்வேதமே சிறந்த வழி!

author-image
Pava S Mano
Aug 28, 2023 13:09 IST
Skin care

Image is used for representational purpose only

Pollution, உடலுக்குத் தீங்கான உணவுகளை உட்கொள்வது, முகத்திற்கு ரசாயன பொருட்கள் உபயோகிப்பது மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் நம் சருமத்தை நாளுக்கு நாள் மந்தமாகவும் உயிரற்றதாகவும் மாற்றுவதற்கு காரணமாக உள்ளது. Parlour க்கு சென்று சருமத்தை பாதுகாப்பது என்பது ஒரு தற்காலிக மற்றும் விரைவான தீர்வாக இருக்கலாமே தவிர சருமத்திற்கான ஒட்டுமொத்த தீர்வாக இருக்காது. Damaged skin ஐ குணப்படுத்த online இல் பல பல கிரீம்கள், லோஷன்கள் மற்றும் மாய்ஸ்ரைசுக்கு என பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பக்க விளைவுகள் அதிகம் ஆகும் வாய்ப்பு உள்ளது. ஆயுர்வேதத்தின் படிz நமது சரும பிரச்சனைகளுக்கு இயற்கை பொருட்களும் மூலிகைகளும் தான் நிரந்தர தீர்வு தரும். 

Advertisment

சந்தனம்:

கூடை காலங்களில் ஏற்படும் Skin Tan, உணவு பழக்கம் மற்றும் உடல் உஷ்ணத்தால் வரும் முகப்பருக்கள் என இந்த மாதிரி சரும பிரச்சனை ஏற்படும் பொழுது சந்தனம் மிக சிறந்த ஆயுர்வேதிக் பரிந்துரையாகும். ஒரு டீஸ்பூன் Sandalwood powder உடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் மற்றும் Rose water சிறிது சேர்த்து நன்கு கலந்து Mask ஆக வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தடவினால் முகப்பரு மற்றும் வெயிலால் ஏற்படும் Skin Tan குணமடையும்.

மஞ்சள்:

Advertisment

Skin care

இன்று அனைத்து திருமண நிகழ்வுகளும் Haldi இல்லாமல் நடைபெறுவதே இல்லை. அனைத்து இந்திய திருமணங்களிலும் Haldi ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்கள் மஞ்சளை காயங்கள் குணப்படுத்தவும் மற்றும் வலியை குறைக்கவும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். மஞ்சள் என்பது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே Skin and Beauty Products இல் உள்ளார்ந்த பகுதியாக செயல்பட்டு வருகிறது. மஞ்சளில் உள்ள Curcumin சருமத்தை உள்ளிருந்து புத்துயிர் பெற உதவுகிறது மற்றும் Dead cells ஐ இது அளிக்கிறது. மஞ்சள் ஒரு சிறந்த Natural exfoliating substance ஆக செயல்படுகிறது. மஞ்சளை தயிருடன் கலந்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் சருமம் ஜொலிக்கும்.

Amla:

Advertisment

ஆயுர்வேதத்தின் Super food என ஆம்லா அழைக்கப்படுகிறது. ஆமலாவை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அது Dandruff ஐ கூட கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கசப்பான பழம் என்பதால் சாப்பிடுவதற்கு சற்று சிரமமாக இருந்தாலும், அதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் முக்கிய Antioxidants சருமத்திற்கு சிறந்த மருந்தாகும். Free radical changes ஏற்படும் சரும முதுமை, மந்தமான தோல் மற்றும் சுருக்கங்கள் வராமல் தடுக்கும் 

தயிர்:

Curd facial

Advertisment

இயற்கையாகவே ஈரப்பதம் ஓட்டும் தன்மையை கொண்டுள்ள தயிர், சர்மா ஆரோக்கியத்திற்கு தேவையான குளிர்ச்சி மற்றும் ஊட்டச்சத்தை கொடுக்கிறது. தயிரை உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது முகத்தின் மேல் தடவிக் கொள்வதால் சருமத்தில் அதிசய மாற்றங்களை நீங்கள் உணர முடியும். உடலில் இருக்கும் குடல் பிரச்சனையால் தான் முகப்பரு பெரும்பாலும் வருகிறது எனக் கூறப்படுகிறது. எனவே தினமும் தயிர் சாப்பிடுவதால் குடல் மற்றும் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. தயிரில் இருக்கும் Lactic acid முகத்துக்கு ஒரு சிறந்த exfoliator ஆக செயல்பட்டு Dead Cells ஐ அழிக்கும்.

இரும்பு சத்து நிறைந்த உணவுகள்:

ஆயுர்வேதம் எப்போதும் Seasonal food சாப்பிடுவதை ஆதரிக்கிறது. குளிர்காலங்களில் உணவில் கேரட் மட்டும் பீட்ரூட்டை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். கோடை காலங்களில் மாதுளம் பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து இயற்கையாகவே இரத்த சுத்திகரிப்புக்கு உதவுகிறது. இதுவே சருமத்தின் பளபளப்பை தூண்டும்.

Advertisment

சிறந்த உணவு பழக்கத்தால் நம் சருமத்தையும் பளபளக்க வைக்கலாம்!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/foods-to-eat-during-menstruation

Advertisment

https://tamil.shethepeople.tv/health/foods-to-strengthen-your-bones

https://tamil.shethepeople.tv/health/say-goodbye-to-pcod-with-this-5-days-complete-diet-plan

https://tamil.shethepeople.tv/health/sugar-substitutes-for-diabetic-patients

#skin care