Advertisment

Menstruation சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் Mood Swing, Depression, Stress, Pain என அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பது நம் உணவு பழக்கமே. அப்பொழுது என்ன வகையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற குழப்பம் அனைவரிடமும் இருக்கும். இனி அந்த குழப்பம் வேண்டாம்.

author-image
Pava S Mano
New Update
Healthy food

Image is used for representational purpose only

Menstruations என்ற பேச்சை எடுத்தால் போதும் அனைத்து பெண்களுக்கும் அவர்கள் அந்த நாட்களில் அனுபவிக்கும் வழிதான் ஞாபகத்திற்கு வரும். அந்த வலியை கட்டுக்குள் வைத்திருக்க சிறந்த உணவு பழக்கத்தால் மட்டுமே முடியும். எந்தவித மன அழுத்தத்திற்கும் உணவுமே ஒரு மருந்தாக அமையும்.
மாதவிடாய் நாட்களில் சில பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அப்போதெல்லாம் அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது டீயும், COFFEE யும். ஒவ்வொருவருக்கும் இந்த தேவை வித்தியாசமாக இருக்கும். ஆனால் மாதவிடாய் நாட்களில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்று சிலருக்கு தெரிவதில்லை. அதை கீழே காணலாம். 

Advertisment

Complex Carbohydrates:

சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் சூடான பானங்களை குடிக்க தோன்றும். சிலருக்கு இனிப்பு பிடிக்கும். சிலருக்கு சாப்பிடவே தோன்றாது. அதிகப்படியான பெண்கள் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியை குறைப்பதற்காக டீ மற்றும் காப்பியை அதிகம் பருகுவார்கள். ஆனால் அதற்கு பதில் ரொட்டி, பாஸ்தா, பருப்பு, அரிசி உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் உடம்பில் ஏற்படும் சோர்வையும் பசியையும் கட்டுப்படுத்தும். அதிக உதிரப்போக்கு ஏற்படும் பெண்கள் கீரை வகைகளை எடுத்துக் கொள்ளலாம். அதிக கொழுப்பு உடைய உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

Sweet substitute:

Advertisment

Fruit bowl

Bloating ஐ கட்டுப்படுத்த தண்ணீர் நிறைய பருகுங்கள். நீர்ச்சத்து அதிகம் உள்ள Watermelon, வெள்ளரிக்காய் போன்ற பழம் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு ஏற்படும் Sugar Cravings கட்டுக்குள் இருக்கும். 70 இல் இருந்து 85% Dark chocolate ஐ 100 கிராம் அளவில் தினமுமே எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அதில் 67% இரும்பு சத்தும் 58 சதவீத மக்னீசிய சத்தும் இருக்கிறது. 

Mood Swing ஐ கட்டுப்படுத்தும் Non Veg:

Advertisment

Protein சத்து அதிகம் கொண்ட Chicken ஐ  மாதவிடாய் சமயத்தில் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அத்தோடு, மீன் எடுத்துக் கொள்வதால் மாதவிடாயால் வரும் வலி குறைவாகவே இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாமல், Mood Swing மற்றும் Depression ஐ கட்டுக்குள் வைத்துக் கொள்வது மீனில் இருக்கும் Omega 3 தான்.

பருப்பு வகைகள்:

Quinoa

Advertisment

கம்பில் அதிகம் இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து இருப்பதால் மாதவிடாய் நாட்களில் கம்பால் ஆன சாப்பாட்டை சாப்பிடலாம். அது உடலில் ரொம்ப நேரம் Energy வைத்திருக்கும். இது Gluten free என்பதால் அனைவரும் சாப்பிடலாம். பாதாம் பிஸ்தா வால்நட் முந்திரி போன்ற Nuts வகைகளில் அதிகம் வைட்டமின் இருப்பதால் அதை தனியாகவோ அல்லது Smoothies ஆகவோ செய்து சாப்பிடலாம்.  

Vaginal infection ஐ தடுக்கும் Dairy products:

Yeast infection இல் இருந்து பாதுகாக்க தயிர் அல்லது Yogurt ஐ மாதவிடாய் சமயத்தில் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதுபோக Tofu சேர்த்துக் கொள்ளலாம். Tofu வில் அதிகப்படியான இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து இருப்பதால் menstrual cramps ஐ குறைக்கும்.

Advertisment

மாதவிடாய் சமயங்களில் நம் உடம்பின் Energy ஐ தக்க வைத்துக்கொள்ள ஆரோக்கியமான வழியை தேர்ந்தெடுத்து, தேவையற்ற உணவை ஒதுக்கி, சத்துள்ளவற்றை சாப்பிடவும்!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/health/foods-to-strengthen-your-bones

Advertisment

https://tamil.shethepeople.tv/health/say-goodbye-to-pcod-with-this-5-days-complete-diet-plan

https://tamil.shethepeople.tv/health/sugar-substitutes-for-diabetic-patients

https://tamil.shethepeople.tv/health/pcod-can-be-cured-easily

Advertisment




menstruation
Advertisment