Advertisment

Intermittent fasting- உடல் எடை குறையுமா?

இன்று உடல் எடையை குறைக்க என்ன வழி என்று அனைவரும் தேடிக் கொண்டுள்ளோம். ஏனென்றால் வருங்காலத்தில் வரும் நோயை தவிர்ப்பதற்கு, இது நாள் வரையில் நாம் வாழ்ந்த வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் மாற்றம் வேண்டும், என்னும் எண்ணம் நம்மில் பல பேருக்கு தோன்றியுள்ளது.

author-image
Pava S Mano
New Update
Intermittent fasting

Image is used for representational purpose only

Intermittent fasting என்பது சமீப காலத்தில் மிகவும் ட்ரெண்டாகி வரும் டயர் முறையாகும். உடல் எடையை  குறைப்பதற்கு மற்றும் பல்வேறு பிரச்சனையை சரி செய்வதற்கும் இந்த டயட் முறை உபயோகமாக இருப்பதாக ஏராளமானோர் கூறுகின்றனர். இந்த முறையை பொறுத்த வரையில் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் கட்டுப்பாடு கிடையாது. ஆனால் எப்படி சாப்பிட வேண்டும் எந்த நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுகிறது. இதில் பல்வேறு Ratio கணக்கில் டயட் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் உண்மையாகவே உடல் எடை குறைகிறதா என்பதை பார்க்கலாம்!

Advertisment

Procedure to follow:

இந்த டயட்டை பின்பற்றுவதற்கு மூன்று முறைகளை வைத்திருக்கிறார்கள். 

16:8 முறை:

Advertisment

16:8 hour fasting

24 மணி நேரத்தில் ஒரு நாளில் நீங்கள் ஏதேனும் எட்டு மணி நேரத்தை தேர்ந்தெடுத்து அந்த நேரத்தில் மட்டும் உங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதுவும் கலோரிகள் குறைவாகவே இருக்கும் உணவை எடுத்துக் கொண்டால் மிகவும் நன்று. மீதமுள்ள 16 மணி நேரத்திற்கு நீங்கள் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அந்த சமயத்தில் நீங்கள் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம் மற்ற எந்த Solid food உம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. 

5:2 முறை:

Advertisment

இந்த முறையானது ஐந்து நாட்களுக்கு நீங்கள் எப்பொழுதும் சாப்பிடுவது போல் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு 500 முதல் 600 கலோரிகள் மட்டுமே நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Eat Stop Eat:

இதில் நீங்கள் ஒரு வாரத்திற்கு இரண்டு முறை ஒரு நாள் முழுதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

Advertisment

Warrior Diet: 

Warrior Diet நீங்கள் ஒரு நாளில் சிறிதளவு பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு வேலை Full meal எடுத்துக் கொள்ளலாம்.

Intermittent fasting பலன்கள்:

Advertisment

Intermittent fasting

இந்த முறையில் நீங்கள் டயட்டை பின்பற்றினால் உங்களின் உடல் எடை குறையும் மற்றும் உடலின் metabolism அதிகரிக்கும். இதனால் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனையும் நீங்கிவிடும். மேலும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளும் கரைந்து விடும். நீங்கள் விரதமாக இருக்கும் நேரத்தில் உங்கள் உடம்பில் உடல் எடை குறைவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. மேலும் இன்டெர்மென்ட் பாஸ்டிங்கை கடைபிடிப்பதால் உடம்பின் சர்க்கரை அளவு சமமாக இருக்கிறது. இதனால் ஒரு lifestyle change நடக்கிறது. தேவையற்ற கலோரிகளை எடுப்பதிலிருந்து தடுக்கிறது. மேலும் நீங்கள் ஆரோக்கியமான உணவையும் சாப்பிட்டு இந்த டயட் முறையை கடைபிடிக்கும் போது உடல் ஆரோக்கியமா ஆவதற்கான வாய்ப்பு அதிகம். 

Intermittent fasting- Side effects:

Advertisment

இந்த டயட் முறையை கடைபிடிக்கும் பொழுது உங்களுக்கு ஆரம்பத்தில் அஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வழக்கமாக கடைபிடிக்கும் உணவு முறை மாற்றத்தால் அதிகம் சாப்பிட வேண்டும் என்னும் எண்ணம் வரும். தவிர ரொம்ப நேரம் சாப்பிடாமல் இருப்பதால் ஆரம்பத்தில் இதனால் சற்று சோர்வாக இருக்கக்கூடும். ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்தும் பழக பழக நம் உடம்பிற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

நம் முன்னோர்கள் அனைவரும் ஒரு நாள் இருக்கு இரண்டு வேலை தான் உணவுகளை சாப்பிட்டு வந்தனர். ஆனால் காலத்தின் கட்டாயத்தால் நாம் மூன்று முறை உணவு சாப்பிட ஆயத்தம் ஆகி உள்ளோம். தற்பொழுது அதனால் ஏற்படும் உடல் உபாதைகளால் மிகவும் பாதிப்படைந்துள்ளோம். மேலும் நம் வாழ்வின் நாட்களும் குறைவாகிக் கொண்டே வருகிறது. நம் உணவு முறை மாற்றமும் வாழ்க்கை முறை மாற்றமும் மட்டுமே இதற்கு தீர்வாகும்!

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/health/tips-for-weight-gain

https://tamil.shethepeople.tv/health/what-should-a-parent-talk-about-her-childs-vaginal-health

https://tamil.shethepeople.tv/health/yoga-poses-for-glowing-skin

https://tamil.shethepeople.tv/health/foods-to-strengthen-your-bones

 

intermittent fasting
Advertisment