Children Vaginal health ஐ எப்படி கற்றுக் கொடுப்பது?

உள் உறுப்பு என்பது உடலின் ஒரு பாகம். அதை பற்றிய பேச்சு என்பது பெற்றோர்களிடம் தான் தயக்கம் இன்றி தொடங்க வேண்டும். அதை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

author-image
Pava S Mano
New Update
Vaginal health

Image is used for representational purpose only

உங்கள் குழந்தைகளிடம் இது பற்றிய பேச்சை எடுப்பது உங்களுக்கு சற்று கூச்சமாக இருக்கலாம். ஆனால் சிறு வயதில் இருந்தே உள் உறுப்பை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் விழிப்புணர்வு கண்டிப்பாக வேண்டும். நீங்கள் மிகவும் ஆழமாக சென்று சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் அதைப் பற்றிய சிறு புரிதலை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். 

Advertisment

எப்படி ஆரம்பிப்பது?

Parenting

நம் உடம்பில் எப்படி அனைத்து உறுப்பிற்கும் ஒவ்வொரு செயல்பாடு இருக்கிறதோ, அப்படித்தான் vagina விற்கும் ஒரு செயல்பாடு உள்ளது என்று உணர்த்துங்கள். அதுவும் உடம்பில் ஒரு பாகமே என்று அவர்களுக்கு புரிய வையுங்கள். மேலும் நம் உடலை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதே போல் தான் உள்ளுறுப்பையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று புரிய வையுங்கள். மேலும், எந்தத் தொற்றும் பரவாமல் இருக்க அந்த இடத்தை சுத்தமாக வைத்திருப்பது அவசியம் என கற்றுக் கொடுங்கள். அதற்கு என்னென்ன தேவையோ அவைகளை அவளுக்கு வாங்கிக் கொடுத்து, இப்படி தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். 

எப்படி செய்வது?

நம் உள்ளுறுப்பு எப்பொழுதும் சுத்தமாகவே இருக்க வேண்டும். இதனால் தொற்றுக்கள் பரவாமல் இருக்கும். பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும் போது எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள். மேலும், அவர்களுக்கு அந்த இடத்தில் ஏதேனும் மாற்றமோ, வலியோ அல்லது அசௌகரியம் இருந்தால் அதை உடனே உங்களுக்கு தெரியப்படுத்துமாறு சொல்லுங்கள். இப்பொழுது பெரும்பாலான குழந்தைகளுக்கு white discharge இருக்கிறது. அந்த சமயத்தில் மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறுவது அவசியம். மேலும், அதனால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அவர்களுக்கு தைரியம் சொல்லுங்கள். 

Puberty பற்றிய விழிப்புணர்வு:

உங்கள் குழந்தைகளிடம் Puberty பற்றி பேசுவதற்கு எப்பொழுதும் தயக்கம் கொள்ளாதீர்கள். ஏனென்றால் எந்த நேரத்தில்  வேண்டுமானாலும் அதனை அவர்கள் சந்திக்க நேரிடும். அந்த சமயத்தில் என்ன செய்வதென்று புரியாமல் அவர்கள் பயப்படுவதற்கு முன்னரே, நீங்கள் என்ன செய்ய வேண்டும், அதனால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்று கற்றுக் கொடுங்கள். உள் உறுப்பை எப்படி ஆரோக்கியமானது வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு Puberty நாட்களிலும் சொல்லிக் கொடுங்கள். மேலும் எந்த வலி வந்தாலும், உங்களிடம் எந்த தயக்கமும் இன்றி கூறுமாறு அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். Period products பற்றி அவர்களுக்கு முன்னரே தெரிந்திருந்தால், அதனைப் பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் ஏற்கனவே இருந்தால், எந்த அச்சமும் தயக்கமும் இன்றி Puberty ஐ எதிர்கொள்வார்கள்.

Advertisment

உங்கள் உடம்பை ரசியுங்கள்:

Parenting

குழந்தைகள் கல்விக் கூடங்களுக்கு செல்லும் பொழுது, அங்கு பலவிதமான கருத்துக்களை அவர்கள் கேட்டு, தங்கள் மீது தன்னம்பிக்கை இல்லாதவராய் சில சமயம் உணரக்கூடும். அவர்களை உடல் ரீதியாக கேலி செய்வோர் இருந்திருக்க கூடும். அவற்றை எல்லாம் அவர்கள் உங்களிடம் சொல்வார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் முன்னரே அவர்கள் மனதில், நிறத்தையோ, உயரத்தையோ, உடலமைப்பையோ பற்றி யாரையும் கேலி செய்யவும் கூடாது, மேலும் யார் என்ன சொன்னாலும் உன்னை முதலில் நீ ரசித்துப் பழகு என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள். 

இப்படித்தான் சமூகத்தில் குழந்தைகளிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் எல்லா வகையான மாற்றத்தையும் கொண்டுவர முடியும். இதற்கு முதலில் நம் மனம் பக்குவத்தை மாற்ற வேண்டும். இன்னும் சிலர் பெண் குழந்தைகளிடம் இது பற்றிய பேச்சு தவறு என்று விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இதை சிறுவயதிலிருந்தே கற்றுக் கொடுக்காதுதால், பெரியவர்கள் ஆன பின்பு எப்படி செய்ய வேண்டும் என்று சரியான முறையை அறியாமல் பல நோய்களுக்கு உள்ளாகின்றனர் பெண்கள். சமூக மாற்றம் நம் வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்கிறது!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/be-careful-when-you-have-a-girl-child

Advertisment

https://tamil.shethepeople.tv/society/why-household-chores-is-only-meant-for-women

https://tamil.shethepeople.tv/society/work-from-home-opportunity-for-housewife

https://tamil.shethepeople.tv/society/stress-relief-tips-for-housewife

Vaginal health