ஒரு பெண் பிறந்ததிலிருந்தே அவள் இப்படித்தான் இருக்க வேண்டும் இதையெல்லாம் செய்தால்தான் வருங்காலத்தில் திருமணம் முடிந்த பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும் என சொல்லி சொல்லி வளர்க்கப்படுகிறாள். ஆனால் எந்த ஒரு ஆண் பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்த பிறகு நீங்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என குழந்தை பருவத்தில் இருந்தே தயார்படுத்துவது இல்லை. இதனாலே தான் பல குடும்பங்களில் கணவன் மனைவி பிரச்சனை வருவதற்கான காரணமே.
பெண்களின் வளர்ப்பு:
குழந்தை பருவத்தில் இருந்தே ஒவ்வொரு பெண்ணிற்கும் அவள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி பேச வேண்டும் எப்படி மற்றவர்களை காயப்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும் என பல விதத்தில் சமூகம் அவளை செதுக்கி கொண்டே வருகிறது. பொதுவாக அதிகப்படியான பெண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே அவள் சிறுவயதில் இருந்து கற்றுக் கொடுக்கப்படுகிறது. அவள் வயதிற்கு வந்தவுடன் கல்வியை காட்டிலும் திருமணமே பெரிய விஷயம் என பதிய வைக்கின்றது இச்சமூகம். திருமணம் என்பது வாழ்வில் ஒரு பகுதியாகும். ஆனால் பெண்களுக்கு அதுதான் வாழ்க்கை என சொல்லி வளர்க்கப்படுகின்றனர். இது தவறு என்பது பெற்றோர்களுக்கும் புரிவதில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்ந்ததும் இதை கேட்டுத்தான்.
ஆண்கள் வளர்ப்பு:
ஆண்களை சிறுவயதில் இருந்தே இந்த வேலையை நீ செய்யக்கூடாது ஏனென்றால் நீ ஆண் என்று இச்சமுகம் சொல்லி வளர்கிறது. ஆண்களை திருமணத்திற்கு தயார் செய்வதை விட சம்பாத்தியத்திற்கு தயார் செய்கிறது தான் இச் சமூகத்தின் வேலையாக இருந்து வருகிறது. ஆண்களைப் பெற்ற அம்மாக்களும் சரி, இவன் இந்த வேலை எல்லாம் செய்ய மாட்டான் என்று அவர்களே ஒரு வட்டத்தை போட்டு விடுகின்றனர். இதனாலேயே திருமணத்திற்கு பிறகு தான் மனைவி எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. ஆண் ஒரு உதவியும் செய்யாமல் வீட்டில் இருப்பார்கள்.
இது மாற வேண்டும்:
சிறு வயதிலிருந்து தன் கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் இச் சமூகம் ஏன் மனைவியிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்க மறுக்கிறது. திருமணத்திற்குப் பிறகு சிறு வயதிலிருந்தே பழக்கப்படுத்த கருத்துகளால் பெண்களும் கணவன் தான் நமக்கு எல்லாமே என அவர்களுக்கு சேவகர்களாக மாறிவிடுகிறார்கள். அதை பயன்படுத்திக் கொள்ளும் ஆண்கள் பெண்களை அடிமையாக்கி இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலை மாற சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் நம் வாழ்க்கைக்கு உதவும் திறன்களே ஆகும், இதில் ஆண் இதைச் செய்யக்கூடாது பெண்தான் இதை செய்ய வேண்டும் என்ற பாகுபாட்டை முதலில் நிறுத்த வேண்டும். பெண்களுக்கு எப்படி கணவனிடம் நடந்து கொள்ள வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது, அதேபோல் ஆண்களுக்கும் மனைவியிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த மாற்றம் நமது சமூகத்தில் வர ஆரம்பித்தாலே, Gender inequality ஓய்ந்துவிடும்.
நமது பிள்ளைகள் இந்த மாதிரியான பாகுபாட்டை அனுபவிக்காமல் இருக்க, நம்மால் முடிந்த மாற்றத்தை நாம் செய்ய வேண்டும். வீட்டு வேலைகளை மனைவி தான் செய்ய வேண்டும் என எண்ணாமல், மனைவிக்கு முடிந்த வேலையை செய்து கொடுங்கள். அதேபோல் குடும்ப செலவுகளையும் ஆண்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என நினைக்காமல், உங்களால் முடிந்ததை நீங்களும் கணவன்மார்களுக்கு சம்பாதித்து கொடுங்கள். இரண்டுமே தப்பில்லை!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/work-from-home-opportunity-for-housewife
https://tamil.shethepeople.tv/society/things-about-love-marriage
https://tamil.shethepeople.tv/society/things-you-should-never-do-in-front-of-children
https://tamil.shethepeople.tv/society/single-child-parenting-tips