நம் முன்னோர்கள் காலம் தொடங்கி இன்று வரை காதல் திருமணம் என்றாலே மேலும் கீழுமாக பார்க்கும் சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி என்ன இச் சமூகத்திற்கு கால் திருமணத்தின் மேல் கோபம் என்று தெரியவில்லை. ஒரு பெண்ணும் ஆணும் காதலித்து திருமணம் செய்து கொண்டால் போதும், அந்த தம்பதியினரை மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தையும் சேர்த்து இந்த சமுதாயம் பேசும் இழிவு சொற்கள் இவ்வளவுதான் இல்லை. இந்த சமூகத்திற்கு பயந்தே நம் பெற்றோர்கள் காதல் என்றால் தவறான விஷயம் என்று கூறிய நம்மை வளர்த்து விடுகிறார்கள்.
ஒரு ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டால் காதல் வருமா?
பள்ளிக்கூடம் முதல் கல்லூரி வரை இன்றும் பல இடங்களில் மாணவர்களும் மாணவிகளும் ஒருவரை ஒருவர் திரும்பி கூட பார்க்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதையும் மீறி, ஒரு பையனோ, ஒரு பெண்ணோ பாட சம்பந்தமான விஷயத்தை பேசினால் கூட போதும் அவர்களை மிரட்டியே தீர்த்து விடுவார்கள். இப்படி பல அனுபவங்களை நம் வாழ்வில் நாம் அனுபவித்திருப்போம். பெற்றோர் வளர்ப்பில் இருந்து தான் இந்தப் பார்வையானது மாறும். ஒரு ஆணும் பெண்ணும் தெருவிலோ, கடைகளிலோ, இல்லை சேர்ந்து வண்டியிலோ சென்று கொண்டிருந்தால், நம் Typical Mentality க்கு தோன்றுவது அவர்கள் காதலர்களாக இருப்பார்களோ என்பதுதான். ஏன் காதல் என்பது ஒரு பேசு பொருளாகவே இருக்கிறது? ஏனென்றால் நம் சமூகம் இன்னும் காதலை ஒரு இழிவான விஷயமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. எங்கே நம் பிள்ளைகள் காதல் செய்து விடுவார்களோ என்ற பயத்திலேயே ஒவ்வொரு பெற்றோர்களும் பெண் பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பிள்ளைகளின் ஆசைகளையும், விருப்பத்தையும் காட்டிலும், அவர்கள் கண் முன் முதலில் வந்து நிற்பது "ஊர் என்ன சொல்லும்" என்னும் கேள்விதான்.
Love marriage என்றால் ஏன் எதிர்க்கிறார்கள்?
ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள் என்றால் அதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் இந்த சமூகத்தில் யாருக்கும் இல்லை. Maybe சிலரிடம் எடுக்க வாய்ப்பு உண்டு. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அந்த எண்ணம் கிடையாது. வளர்ந்து வரும் சமூகத்தில் ஒரு பெண்ணும்,ஆணும் காதல் செய்கிறார்கள் என்றாலே, அதை எப்படி சேர்த்து வைப்பது என்னும் எண்ணம் முதலில் வருவதை விட, அதை எப்படி பிரிப்பது என்று எண்ணம் தான் முதலில் எல்லோருக்கும் வந்து நிற்கும். அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அவர்கள் தேர்வு செய்வதில் எந்த தவறும் இல்லை என்று இச்சமூகத்திற்கு புரியும் நாள் வெகு விரைவில் வரும். காதல் என்றாலே முதலில் கை தூக்குவது ஜாதி தான். வெளிநாடுகளில் ஜாதியை பார்த்து யாரும் பழகுவதில்லை. ஆனால், இந்தியாவில் பல ஜாதிகள் இருந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. பெற்றோரின் சம்மதம் இல்லாமல் பிரியும் காதலை விட ஜாதியால் பிரியும் காதல் தான் அதிகம்!
எதையும் Adjust செய்யாதீங்க!
ஒரு தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு அவர்களை சில குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். அப்படி ஏற்றுக் கொண்டு விட்டால் அந்தப் பெண்ணிற்கு அவள் வாழும் போது சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் பற்றி பேச அவளுடைய தாய் தந்தையினர் அல்லது உடன் பிறப்புகள் கூடே இருப்பார்கள். இதன் சதவீதமோ குறைவு. அப்படியே பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டாலும், உடன் பிறந்தவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளாத சூழலும் சில குடும்பங்களில் உண்டு. அதிலும் காதல் திருமணம் செய்தவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு சென்று விட்டால் போதும், உடன் பிறந்தவர்களின் மனதில் எப்படி இப்படி ஒரு Ego வருமோ தெரியவில்லை. பெற்றோர்கள் சம்மதித்த பிறகும் உடன் பிறந்தவர்கள் இப்படி பல பிரச்சனைகளை கிளப்பி விடுகிறார்கள். மறுபக்கம் காதல் திருமணம் செய்திருந்தால் அவர்களை குடும்பம், தள்ளி வைத்திருக்கும். அப்படி இருக்கும் பெண்கள், அவருடைய கணவனாலும் அல்லது கணவன் வீட்டாராலோ துன்புறுத்தப்பட்டால். "நாம் காதல் திருமணம் செய்து விட்டோம் நாம் எதையும் Adjust செய்து கொண்டு வாழலாம்" என இருக்கும் மனநிலையை மாற்றுங்கள். நீங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டீர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, நீங்கள் வாழ்வில் சந்திக்கும் எந்த பிரச்சனைகளையும் யாருக்கும் சொல்லக்கூடாது என்று நீங்கள் நினைக்கவே கூடாது. அது தீர்க்கக் கூடிய பிரச்சினையாக இருந்தால் உங்கள் இருவருக்குள் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக உங்கள் வீட்டு பெரியவர்களை நாடுவதில் எந்த தவறும் கிடையாது.
காதல் திருமணங்களால் பல குடும்பங்களில் பிரச்சனைகளும் அவமானங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன் பல குடும்பங்களில் காதலால் இறப்புகளை கூட சந்தித்திருக்கிறார்கள். அதற்கான காரணம் காதலின் மேல் சமூகம் வைத்திருக்கும் வெறுப்பு ஒன்றுதான். இந்த நிலை மாற ஒவ்வொரு பெற்றோரும் காதல் என்பது அவர்கள் வாழ்வில் நடக்கக்கூடிய ஒரு சாதாரண விஷயம் என்று குழந்தைகளை வளர்க்க வேண்டும். தன் மகனோ, மகளோ வந்து ஒருவரை காதலிக்கின்றனர் என்று சொல்லும் பொழுது உடனே அவர்களை திட்டி தீர்க்காமல் அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுமையாக யோசித்து முடிவு செய்யுங்கள். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணத்தில் காதல் இல்லையா என்ன? அப்பொழுது ஏன் காதல் உங்களுக்கு கசக்கவில்லை?
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/importance-of-simple-wedding
https://tamil.shethepeople.tv/news/say-no-to-toxic-relationship-with-out-any-guilt
https://tamil.shethepeople.tv/society/things-to-know-before-arranged-marriage
https://tamil.shethepeople.tv/society/truth-about-live-in-relationship