Advertisment

Luxury wedding அவசியமானதா?

உறவினர் முன் அந்தஸ்தை காட்ட தான் அதிக திருமணம் இப்பொழுது நடைபெறுகிறது. ஆடம்பரம் என்ற பெயரில் கடன் வாங்கி கோடிக்கணக்கில் திருமணத்தில் முதலீடு செய்து, பின் அதை கட்ட முடியாமல் தவிக்கும் பலரை நாம் பார்த்துள்ளோம். ஆடம்பர திருமணம் அவசியமானதா?

author-image
Pava S Mano
New Update
Luxury wedding

Image is used for representational purpose only

திருமண பேச்சு என்று ஆரம்பித்தால் போதும், உறுதி வார்த்தைகள் ஆரம்பித்து ஹனிமூன் செல்லும் வரை அதற்கான செலவிற்கு பெரிய லிஸ்ட் போட வேண்டி இருக்கும். எங்கு புடவை எடுப்பது, எங்கு நகை எடுப்பது, எப்படி மேக்கப் செய்வது, எப்படி துணிகளை தைப்பது, எந்த மண்டபம் பார்ப்பது, எந்த candid photographer ஐ அழைப்பது என பல கேள்விகள் கண்முன் வந்து நிற்கும். அதன் பிறகு, மண்டபம் எப்படி டெக்கரேட் செய்வது, மாப்பிள்ளை அழைப்பு எப்படி இருக்க வேண்டும், பெண் அழைப்பு எப்படி இருக்க வேண்டும், விருந்தில் சாப்பாடு வகைகள் எத்தனை இருக்க வேண்டும் என கல்யாண வீட்டாருக்கு பட்ஜெட் கூடிக் கொண்டே போகும். தற்போதைய திருமணங்கள் எல்லாம் திருவிழா கொண்டாட்டங்களாக மாறி வருகிறது. திருமண பத்திரிக்கையிலேயே ஆடம்பரத்தை காட்ட தொடங்கி விட்டார்கள். இப்பொழுது எல்லாம் திருமண பத்திரிக்கையிலேயே Google Pay QR Code  அமைத்து மொய் வசூலிக்க ஏற்றவாறு பிரிண்ட் செய்கிறார்கள். 

Advertisment

விரலுக்கேற்ற வீக்கம்:

Nirmala Sitharaman daughter

பெரிய தொழிலதிபர்கள் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் வீட்டு திருமணங்கள் எல்லாம் மைதானங்களில் மாநாடு போல் நடத்தப்பட்டு வருகின்றது. அப்படி இருக்க, சமீபத்தில் Finance Minister Nirmala Sitharaman, அவருடைய ஒரே மகளுக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். தனியார் ஹோட்டலில் அவர் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு, அரசியல் வாடையே இல்லாமல் அவர்கள் குல வழக்கப்படி நடைபெற்றது. Upper middle class மற்றும் middle class குடும்பங்களும் தற்பொழுது தொழிலதிபர் வீட்டு திருமணத்தைப் போல அவர்கள் வீட்டு திருமணத்தையும் ஆடம்பரமாக நடத்த ஆசைப்படுகிறார்கள். கடன் வாங்கியாவது கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்கள். வெறும் ஆடம்பரத்திற்காக மட்டுமே வட்டிக்கு கடன் வாங்கி திருமணத்தை முடித்துவிட்டு, அதன் பின் எப்படி அந்த கடனை தீர்ப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். 

Advertisment

திருமணம் என்பது வாழ்க்கையின் நிம்மதியான ஆரம்பம்:

Luxury wedding

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முன் கௌரவமாக திருமணம் நடைபெற வேண்டும் என்று அவர்கள் சக்திக்கு மீறி கடன் வாங்கி திருமணத்தை செய்கின்றனர். இதனால் திருமணம் முடிந்த பின்பு அந்த கடனை அடைப்பதிலேயே பாதி வாழ்க்கை முடிந்து விடுகிறது. பின் எங்கு நிம்மதியை தேடுவது. திருமணம் என்பதே ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கும் ஒரு நல்ல செயல் ஆகும். அது தொடங்குவதே நிம்மதியாகவும் எளிமையாகவும் இருந்தால் வாழ்க்கை எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும். ஊருக்காக ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி விட்டு, பின் அதன் விளைவுகளை நம் வாழ்க்கை முழுதும் சந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். அதனால் ஊர் பெயர்ச்சையும் உறவினர்களின் தகுதியையும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். திருமணம் என்பது ஒருமுறை மட்டுமே நடக்கும் விஷயமாகும். அதற்காக பல லட்சங்களையும், கோடிகளையும் முதலீடு செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. இந்த ஆடம்பரத்தை ஒரு சுய தொழிலுள்ளோ வியாபாரத்திலோ காட்டினால் அது நாளை பல மடங்கு வருமானத்தை திரும்ப தரும். 

Advertisment

ஊருக்காக வாழ்க்கையை இழப்பதா?

இரு மனங்கள் இணைவதே திருமணமாகும். ஆனால் இன்று அந்தக் காலம் மாறிப்போய் இரு வீட்டாரின் சமூக அந்தஸ்தை காட்டுவதற்கே திருமணங்கள் நடைபெறுகிறது. Pre wedding shoot இல் ஆரம்பித்து Maternity shoot வரை பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர். இன்றும் பல எளிமையான திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தேவையற்ற ஆடம் வரும் தேவையற்ற சிக்கலில் சென்று முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் திருமணத்தில் எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. ஆனால் இன்று திருமணம் என்று ஆரம்பித்தாலே பல எதிர்பார்ப்புகள் அவர்கள் மனதில் தோன்றுகிறது அதன் காரணம் அவர்களுக்கு கிடைக்கும் Exposure தான். ஆடம்பரத்தை தவிர்த்து தம்பதியினர் ஆனந்தமாக வாழ என்ன வழி என்று பார்ப்போம்!

Suggested reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/society/truth-about-live-in-relationship

https://tamil.shethepeople.tv/society/things-to-know-before-arranged-marriage

https://tamil.shethepeople.tv/news/say-no-to-toxic-relationship-with-out-any-guilt

https://tamil.shethepeople.tv/news/important-things-to-know-about-solo-travelling

 

wedding
Advertisment