Advertisment

Live in relationship - அறியப்பட வேண்டிய உண்மைகள்!

Live in relationship என்னும் வாழ்க்கை முறை இப்பொழுது பல நகரங்களில் பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து திருமணம் ஆகாமல் வாழும் உறவை இச்சமூகம் எப்படி பார்க்கிறது மற்றும் சட்டம் என்ன சொல்கிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

author-image
Pava S Mano
New Update
Live in relationship

Image is used for representational purpose only

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், live in relationship என்பது பண்பாடற்ற ஒரு விஷயமாக தான் இன்றும் பார்க்கப்படுகிறது. ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ திருமண மட்டுமே சிறந்த வழி என்ற நம்பிக்கை இந்தியர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. ஆனால் அது arranged marriage ஆக இருந்தாலும் சரி love, marriage ஆக இருந்தாலும் சரி, சில சமயம் divorce இல் தான் வந்து முடிகிறது. அதற்கு காரணம் இந்திய குடும்பங்களில் இருக்கும் கோட்பாடுகளும் சூழலும் தான். Divorcing couple காக வாதாடும் சில வக்கீல்கள்,"இவர்கள் இதற்கு live in relationship இல் ஆவது இருந்திருக்கலாம்" என்று வருந்துகிறார்கள். வளர்ந்து வரும் சமுதாயத்தில் ஏற்படும் சில வளர்ச்சிக்கு நாம் தயாராவது தான் சரி. அதற்கு ஏற்ப live in relationship ஐ இந்திய சட்டம் எவ்வாறு ஆதரிக்கிறது என்பதை பார்ப்போம்!

Advertisment

Live in relationship

Live in relationship என்பது யாதெனில்!

Broad-minded people எனக் கூறப்படும் பரந்த மனப்பான்மை உள்ளவர்களால் உருவாக்கப்பட்டது இந்த concept. ஒரு உறவில் சேர்ந்து வாழ திருமணம் என்ற ஓர் அங்கீகாரம் தேவையில்லை என்பதே இதன் கருத்தாகும். இருவரின் மேல் இருக்கும் நம்பிக்கை போதும் என்கிறது இந்த உறவு. Live in relationship இல் இருப்பவர்கள் விரும்பினால் திருமணம் செய்து கொள்வார்கள், இல்லை என்றால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்ந்து வருவார்கள். இது இந்திய பாரம்பரியத்திற்கு புதிது என்பதால் பலரால் எதிர்க்கப்பட்டது இன்றும் எதிர்க்கப்படுகிறது. ஆனால் அது சரியா, தவறா என்று விவாதிக்கும் போது அது ஒருவரின் ஆளுமையை பொறுத்தது. மேலும் சேர்ந்து வாழும் போது தான் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாகும்.

Advertisment

இந்திய சட்டத்தின் விளக்கம்:

பொதுவாக நடைபெறும் திருமணத்திற்கு என்று இந்திய சட்டத்தில் சில உரிமைகளும், கடமைகளும் இருக்கிறது. Live in relationship என்பது இந்திய சட்டமன்றத்திற்கு புதிது என்பதால் இது போன்ற எந்த உரிமைகளும் கடமைகளும் இந்த உறவில் இல்லை. இதில் இருப்பவர்கள் திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபடுவதால் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு பரம்பரை மீது எந்த உரிமையும் இல்லை என்று சமூகத்தால் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அப்படி பிறக்கும் குழந்தைகளின் மீதான சமூக பார்வை முறைகேடாக இருக்கிறது. 1978ல், ஒரு தீர்ப்பில், இத்தகைய உறவுகள் செல்லும் என்று முதல்முறையாக உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டது. வயதுவரம்பு பூர்த்தி, மன உறுதி மற்றும் இருவரின் சம்மதமே போதுமானது என்று சட்டம் சொல்கிறது.

Women safety and Live in relationship:

Advertisment

Live in

பல்வேறு வகையான வாழ்க்கை முறையை இன்று மக்கள் பின்பற்றி வருகிறார்கள். எந்த உறவாக இருந்தாலும் அதை மேலோங்கி இருப்பது இருவருக்கும் இடையே உள்ள புரிதலாகும். இந்திய தம்பதியினர் திருமணம் செய்திருந்தாலும் சரி, live in relationship இல் இருந்தாலும் சரி, சில சந்தர்ப்பங்களில் பெண்கள் மீதான வன்முறை நடந்து கொண்டு தான் இருக்கிறது. குடும்ப வன்முறை சட்டத்தில், திருமணத்தை குறிப்பிடாமல் "திருமணத்தின் இயல்பில் உள்ள உறவு" என்று குறிப்பிட்ட அவர்களுக்கான பாதுகாப்பை அச்சட்டம் வழங்குகிறது. குற்றவியல் நடைமுறை சட்டம்,Section 125 கீழ், ஒரு பெண்ணுக்கு சரியான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்காவிட்டால் அந்த ஆண் குற்றவாளி என கருதப்படுகிறது.

Children safety and Live in relationship:

Advertisment

Live in relationship இல் இருக்கும் தம்பதியினர் தற்போதைய நிலையில் உறவில் இருந்தாலும், வருங்காலத்தில் அவர்களின் உறவுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அத்தகைய உறவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் மூதாதையர்கள் மற்றும் சொந்தமாக வாங்கும் சொற்றிற்கு சட்டபூர்வமான உரிமை உண்டு என்று சட்டம் சொல்கிறது. இருவருக்கும் உடல் மனம் மற்றும் பணரீதியான Stability இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் live In relationship இல் இருக்கும் தம்பதியினர் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று சட்டம் உருவாக்கப்பட்டது. 

Relationship

திருமணம் ஆனாலும் சரி, live In relationship இல் இருந்தாலும் சரி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது இருவரின் துணைக்காக தான். எனவே வாழ்வதை சிறப்பாக வாழலாம், Divorce வரை செல்லாமல்! 

Advertisment

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/things-to-know-about-good-parenting

https://tamil.shethepeople.tv/society/problems-women-entrepreneurs-face

Advertisment

https://tamil.shethepeople.tv/society/things-to-know-before-arranged-marriage

https://tamil.shethepeople.tv/news/important-things-to-know-about-solo-travelling

 

live in relationship
Advertisment