என்னதான் பெண் பிள்ளைகளை பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் அனுபவத்தை கற்றுக் கொடுக்க மறக்கிறோம். பெண் பிள்ளைகளைப் பெற்ற உடனேயே எல்லோர் மனதிலும் தோன்றுவது அவர்களை நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி அவர்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதல்ல, அவர்களை திருமணம் செய்து கரை சேர்ப்பது எப்படி என்பதை தான். எந்த வீட்டில் பெண் குழந்தை பிறந்தாலும், அவர் குடும்பத்தினர் பயப்படுவது, எப்படி நகை சேர்த்து திருமணம் முடிப்பது என்பது தான். பெண் பிள்ளைகள் என்றாலே ஏன் திருமணத்தோடு வாழ்க்கை முடிந்து விடுகிறது. "பொண்ணுக்கு கல்யாணம் பண்ணியாச்சு இனி எனக்கு என்ன கவலை" என்று நினைக்கும் பெற்றோர்கள் ஏராளம்.
ஒரு ஆண் தனக்கான அங்கீகாரத்தை வாழ்க்கை முழுதும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறான். பள்ளியிலும் கல்லூரியிலும் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கங்களை வாங்கிய ஒரு பெண்ணால் திருமணத்திற்கு பின் அவள் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதன் காரணம் குடும்பத்தை பெண் தான் தாங்க வேண்டும் என கட்டமைக்கப்பட்ட தவறான சமூக கோட்பாடு ஆகும். அதற்கு அவளின் தாயும் ஒரு காரணம்தான். அன்றைய நிலையில் கணவன் வேலைக்கு சென்று மனைவி வீட்டில் பிள்ளைகளையும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் இன்றும் அந்த நிலை மாறி இருக்கிறது. இருந்தாலும் பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பதிலேயே பாலின பாகுபாட்டை ஊட்டி விடுகிறார்கள். ஒரு வீட்டில் ஒரு ஆண், ஒரு பெண் என்று இரு குழந்தைகள் இருந்தால், அவர்களில் அதிகம் வீட்டு வேலை செய்வது பெண் குழந்தையாக தான் இருக்கும். இதை பார்த்து வளர்கின்ற ஆண் குழந்தையின் மனதில், பெண் தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று எண்ணம் தானாக உருவாகிறது. அவன் வளர்ந்த பிறகு இதே தவறை தான் அவன் மனைவியிடமும் செய்கிறான். இந்த நிலை மாற பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு Gender Equality ஐ கற்றுக் கொடுக்க வேண்டும்.
வீட்டு வேலை என்பது அனைவருக்கும்மான வேலை:
வீட்டில் vessel washing, சமையல், துணி துவைப்பது முதல் அனைத்தையும் செய்வது பெண்களே. இதில் ஆண்கள் சிறிது உதவியாக இருந்தால் போதும் அவர்களை நாம் பாராட்டுவதற்கு அளவே இல்லை. குழந்தைகளுக்கு, அனைத்து வேலையும் அனைவரும் செய்யலாம், நாம் செய்யும் வேலைக்கு பெண் என்று ஆண் என்று பாகுபாடு கிடையாது என்பதை புரிய வைக்க வேண்டும். நாம் என்ன செய்கிறோமோ அதையே தான் அவர்களும் செய்கிறார்கள். ஒரு வீட்டில் அம்மா குடும்பத்தை பார்த்துக் கொள்வார், அப்பா வெளியே சென்று சம்பாதித்து வருவார். இதையே பார்த்து வளர்ந்த குழந்தைகளின் மனதில் பதிந்து விடுகிறது, பெண் தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் ஆண் தான் சம்பாதிக்க வேண்டும் என்பது. பெரியவர்கள் ஆன பின்பு அதே தான் Repeat ஆகிறது. நாம் என்ன செய்கிறோமோ, எப்படி நடந்து கொள்கிறோமோ அதையே தான் பிள்ளைகளும் வருங்காலத்தில் செய்வார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். அதனால் அனைத்து வேலைகளையும் பெண் பிள்ளைகளோடு சேர்த்து ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்.
Financial Independence:
பெண் பிள்ளைகள் என்றால் திருமணத்திற்கு முன் பெற்றோர்களையும் திருமணத்திற்கு பின் கணவரையும் Financially Dependent ஆக இருக்கிறார்கள். இந்த நிலை மாற பெண் பிள்ளைகளை கல்லூரி படிப்பு முடிந்த பிறகு அவர்களுக்கென ஒரு சம்பாத்தியம் வருமாறு, வேலைக்கோ அல்லது அவர்கள் விரும்பினால் Entrepreneur ஆக விடுங்கள். சம்பாதிப்பது என்பது Gender Centric role கிடையாது என்பதை நீங்களும் உணருங்கள் அவர்களுக்கும் உணர்த்துங்கள். தன் அக்காவோ, தங்கையோ வேலைக்கு சென்று Financially Dependent ஆக இருப்பதை பார்த்து வளரும் ஆண் பிள்ளைகளுக்கு அவர் மனைவி வேலைக்கு செல்வது ஒரு பிரச்சனையாக தெரியாது. இப்படித்தான் குடும்பத்தில் இருந்து பல சமூக மாற்றங்களை கொண்டுவர முடியும்.
Sex Education:
சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கான பாலியல் கல்வி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தப் பாலியல் அறிவு இல்லாத காரணத்தால் தான் பல ஆண்கள் பெண்களை பார்க்கும் கோணம் தவறாக இருக்கிறது. பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் எதைப் பற்றி வேணாலும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை உருவாக்குங்கள். இதைப் பற்றி எப்படி பெற்றோரிடம் பேசுவது என்ற தயக்கத்தாலே தான் பல பெண் பிள்ளைகளும் சரி, ஆண் பிள்ளைகளும் சரி பல சிக்கல்களை சந்திக்கின்றனர். ஒரு ஆணிற்கு எப்படி ஒரு உடலமைப்பு இருக்கிறதோ அதை தான் ஒரு பெண்ணிற்கும் இருக்கிறது என்பதை உணர்த்த வேண்டும். Periods pain பற்றி சில பெண்கள் அவர்களுக்கானவரிடம் கூட கூறுவதில்லை. இந்த தவறை நாம் செய்யக்கூடாது. அனைத்தையும் வெளிப்படையாக பேசினால் மட்டுமே புரிதல் உருவாகும். பாலியல் கல்வியை பெண் பிள்ளைகளுக்கும் ஆண் பிள்ளைகளுக்கும் சரியான முறையில் கற்றுக் கொடுங்கள்.
ஒரு சமூகமான முதல் படி குடும்பத்திலிருந்து ஆரம்பம் ஆகிறது. நல்லவைகளை கற்றுக் கொடுப்பதற்கு Gender அவசியமில்லை!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/things-single-mothers-should-know
https://tamil.shethepeople.tv/society/is-baby-planning-necessary-after-marriage
https://tamil.shethepeople.tv/news/important-things-to-know-about-solo-travelling
https://tamil.shethepeople.tv/health/reasons-for-early-puberty