நம் இந்திய சமூகத்தை பொறுத்தவரை, திருமணமான உடனேயே குழந்தை பெற்றெடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கட்டும் கட்டுக் கதையும் வாய்ப்பேச்சுகளும் காதல் கேட்க முடியாது. ஒரு பெண்ணும் மானம் சேர்ந்து வாழ்க்கை தொடங்கும் போது, அவர்களின் அன்பிற்கு கிடைக்கும் பரிசு குழந்தையாகும். ஆனால் இன்று, Society Pressure மற்றும் Parents Pressure ஆல் குழந்தைகளுக்காக தயாராகிக் கொண்டுள்ளனர் இளம் தம்பதியினர். இதனால் அவர்களுக்கென நேரம் செலவிட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான நேரம் இல்லாமல் பல சிக்கல்களை சந்திக்கிறார்கள்.
இளம் தம்பதியினரின் மீதான சமூகப் பார்வை:
திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆனால் போதும், "வீட்ல விசேஷமா?" என அனைவரும் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் சேர்ந்து இப்பொழுது தானே வாழ்க்கையை தொடங்கியுள்ளார்கள் என்று நினைக்காமல், உடனே இப்படிப்பட்ட கேள்விகள் குவிய தொடங்கி விடும்.
மற்றவர்களின் வாயை அடக்கவே நமக்கு குழந்தை அவசியம் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர் இளம் தம்பதியினர். அவர்களுக்கென ஒரு வாழ்க்கை கோட்பாடு இருக்கும் அதற்கேற்ப அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள் என இச்சமூகம் புரிந்து கொள்ள நிலை என்று வருமோ தெரியவில்லை. மற்றவர்களின் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது அவசியமற்றது என்பது சமூகத்திற்கு புரிய வேண்டும். இவர்கள் கேட்கிறார்களே என்று குழந்தையைப் பெற்றுக் கொண்டு, சமாளிக்க முடியாமல் தவிக்கும் தம்பதியினர் நிறைய பேர் உள்ளனர். இந்த காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். இருவரும் ஒரு Financial Stability ஐ அடைந்த பிறகு தான் குழந்தையை பற்றி யோசிக்கிறார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனென்றால் இன்றைய விலைவாசியும் வாழ்வாதாரமும் அந்த சூழலில் உள்ளது.
அதற்காக Abortion செய்வதா?
குழந்தை பற்றிய Planning, முன்னரே இருவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். குழந்தை உருவானதிலிருந்து பெற்றெடுக்கும் வரையில் ஆகும் அனைத்து செலவுகளுக்கும் இருவரும் தயாரா என்று கலந்தாலோசிக்க வேண்டும். அதன் பிறகு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் திடமாக இருக்கிறீர்களா என்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இந்நிலையில் குழந்தையைப் பெற்றெடுப்பது மிகவும் கடினமான Task ஆக மாறி வருகிறது. சிலர் தங்களுக்கு திருமணமாகி சில நாட்களே ஆனதால் கரு உருவானதை கலைக்கின்றனர். அது அவரவர் விருப்பமே ஆனாலும் சூழ்நிலைக்கு ஏற்ப நீதிகள் மாறும். அதை Judge செய்யாமல் அவர்கள் மனதை புரிந்து நடப்போம்.
திருமணம் முன்னே பேசி விடுங்கள்!
Arranged Marriage ஆக இருந்தாலும் சரி Love Marriage ஆக இருந்தாலும் சரி, குழந்தை Planning பற்றி முன்னரே பேசிக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கமான Perspective மாறலாம். திருமணம் ஆன உடனே குழந்தை உருவாவது சந்தோஷமாக இருக்கலாம் ஆனால் சிலருக்கு சிறிது காலம் தள்ளியானால் நல்லது என்று நினைக்கலாம். அதனால் முன்னரே பேசிக்கொள்வது நல்லது. இது தம்பதியினரே முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும். இதில் வேறு யாரும் தலையிட உரிமை இல்லை என்பது இச் சமூகத்திற்கு விளங்க வேண்டும்.
Baby Planning என்பது ஒவ்வொரு தம்பதியினரின் தனிப்பட்ட விருப்பம் ஆகும். அது அவர்களின் முடிவாக இருக்க வேண்டுமே தவிர சமூகத்தின் Pressure ஆல் ஆனதாக இருக்கக் கூடாது. திருமணம் ஆன பிறகு Baby Planning அவசியம் என்பதே ஒரு Myth ஆகும். என்றுமே அது உங்கள் Choice!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/health/reasons-for-early-puberty
https://tamil.shethepeople.tv/society/things-to-know-before-arranged-marriage
https://tamil.shethepeople.tv/health/tips-to-overcome-postpartum-depression
https://tamil.shethepeople.tv/health/self-examination-for-breast-cancer