கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் சுற்றுலா செல்ல மக்களிடம் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது. அதுவும் பெண்கள் தனியாக பயணம் செய்வது Trend ஆக மாறி வருகிறது. அவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுற்றுலா சென்று எடுத்து பதிவிடும் போட்டோஸ் மற்றும் வீடியோக்களுக்கு Social media வில் நல்ல மதிப்பு இருந்து வருகிறது. Norwegian cruise line என்னும் கப்பல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஒன்றில் மூன்று சுற்றுலா பயணிகள் Solo Travel செய்பவர்களே, அதிலும் வயதான பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கூறி இருக்கிறார்கள். 2019 ஆம் வருடத்தை காட்டிலும் 2022 ஆம் ஆண்டில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகமே மாறிக் கொண்டிருக்கும் நிலையிலும், பெண்கள் வெளி உலகத்தை காண வேகம் எடுத்து வரும் சூழலிலும், அவர்கள் தனியாக சுற்றுலா செல்ல தயாராக வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளது.
முதலில் மனதால் தயாராகுங்கள்:
ஒரு பெண் தனியாக வெளியூருக்கு பயணிக்கிறார் என்றால், அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் இருக்கும். முதலில் மனதிற்கு வருவது பாதுகாப்பை பற்றிய பயம் தான். எங்கு செல்வது, எப்படி செல்வது, எங்கு தங்குவது, பிறரை எப்படி நம்புவது என பல குழப்பங்கள் மனதில் இருக்கும். இந்த சமயத்தில் நீங்கள் தைரியமாக ஒரு Itenary ஐ உருவாக்குங்கள். அதில் அனைத்தையும் தெளிவாக Pre-plan செய்யுங்கள். இந்த நாள் இந்த இடத்தை பார்த்து விடலாம் என நேரம் மற்றும் பயண அட்டவணையை தயார் செய்யுங்கள். உங்களுக்கென ஒரு தெளிவான நம்பிக்கை வந்த பின்பு குடும்பத்தினரிடம் தெரிவியுங்கள். உங்கள் Plan ஐ அவர்களிடம் காட்டுங்கள். அதற்காக நீங்கள் எப்படி தயாராக இருக்கிறீர்கள் மற்றும் எந்த முறையில் Safety Measures ஐ கடைப்பிடிக்க போகிறீர்கள் என அவர்களுக்கு தைரியம் கொடுங்கள். உங்கள் நம்பிக்கைதான் அவர்களுக்கு ஊக்கம் தரும்.
பயணத்திற்கு Ready ஆகலாம் வாங்க:
ஆரம்பத்தில் சின்ன தயக்கம் இருந்தாலும், நாம் எங்கு செல்ல இருக்கிறோம் என்று இடத்தை நிர்ணயித்த பின், அந்த இடத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கும்போது நாம் உற்சாகமாக உணர்வோம். எந்த ஊருக்கும் தனியாக பயணிக்கும் போதும், அந்த இடத்தை பற்றியும், அங்கு உள்ள சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பழங்கால இடங்கள் மற்றும் மக்களின் கலாச்சாரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை போக்குவரத்து முறை என்பது நமக்கு பழகிய ஒன்று. ஆனால் வெளிநாடுகளில் போக்குவரத்து முறை மிகவும் வித்தியாசமாக இருக்கும். உதாரணத்திற்கு, நான் Melbourne சென்று இருந்தபோது, அங்கு Tram மற்றும் Metro வில் தான் எங்கள் அதிகப்படியான பயணம் இருந்தது. எங்கள் போக்குவரத்திற்காக Myki Card கொடுக்கப்பட்டது. அந்த Card இல் Recharge செய்தால் மட்டுமே Tram மற்றும் Metro வில் பயணம் செய்ய முடியும். இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் பலவிதமான போக்குவரத்து முறை இருக்கும். அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். வெகு தூரம் தனியாக பயணிக்கும் போது நிறைய துணிகளை Pack செய்யாதீர்கள். எடை கம்மியான Luggage ஐ எடுத்துக் கொள்ளுங்கள். பணத்தை பத்திரமாக மறைத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் Socks அல்லது உள்ளாடைகளில் கவரில் கட்டி மறைத்து வைத்துக் கொள்ளுங்கள். எங்கு செல்கிறீர்களோ அங்கே உள்ள Local Police number ஐ குறித்து வைத்துக் கொள்ளுங்கள். Portable Charger வாங்கிக் கொள்ளுங்கள் அத்தோடு Period Kit மற்றும் Medical Kit அவசியமாக வைத்துக் கொள்ளுங்கள். பயணத்திற்கு தேவையானதை முன்னரே சரிபார்த்து எடுத்து வையுங்கள்.
பயணத்தின் போது கண்டிப்பாக இதை செய்யுங்கள்:
-
நீங்கள் தனியாக பயணிப்பவர்கள் என மூன்றாம் நபர் யாரிடமும் சொல்ல வேண்டாம்
-
உங்கள் சுற்றத்தை கவனித்தவாறு பேருந்துகளில், ரயில்களில் பயணம் செய்யுங்கள்
-
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என நெருங்கிய ஒருவருக்காவது Location Update கொடுங்கள்
-
முடிந்தவரை பகலில் பயணம் மேற்கொள்ளுங்கள்
-
உங்கள் நண்பர்களிடம் Hostel மற்றும் Hotel Number ஐ பகிர்ந்து கொள்ளுங்கள்
-
Hostel இல் தங்கி இருந்தால் அந்த நண்பர்களுடன் வெளியே செல்லுங்கள்
எங்கு சென்றாலும் உங்கள் பாதுகாப்பை முன்னிலையில் வைத்து தைரியமாக உலகத்தை சுற்றுங்கள். ஏனென்றால் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் உலக அளவு உள்ளது!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/news/say-no-to-toxic-relationship-with-out-any-guilt
https://tamil.shethepeople.tv/news/importance-of-earning-for-women
https://tamil.shethepeople.tv/society/things-to-know-before-arranged-marriage
https://tamil.shethepeople.tv/news/boundaries-and-sex-education