Women Entrepreneurs சந்திக்கும் பிரச்சனைகள்!

ஒரு பெண்ணின் படிப்பில் தொடங்கி அவள் கல்யாணம் வரை எல்லாமே குடும்பத்தினராலும் சமூகத்தாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதையும் மீறி அவளுக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்துவதற்கு சுய தொழிலில் ஒரு பாலமாக அமைகிறது. அதில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளோ ஏராளம்.

author-image
Pava S Mano
Aug 18, 2023 19:00 IST
Women

Image is used for representational purpose only

தொழில் தொடங்குவது என்பதே ஒரு சவாலான விஷயமாகும். அதிலும் பெண்கள் தொழில் தொடங்குகிறார்கள் என்றால் அவர்கள் சமாளிக்கும் பிரச்சனைகள் ஏராளம். இவை அனைத்தையும் தாண்டி அவர்களுக்கென ஒரு அங்கீகாரத்தை அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் தடம் பதித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள 100 தொழில் முனைவோரில் ஏழு பேர் மட்டுமே பெண்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பெண் தொழில் முனைவோர் அவர்களுக்கென பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. Women Entrepreneurs சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதை பற்றியும் கீழே காணலாம். 

Advertisment

 குறைவான women friendly sectors:

பல Scheme மற்றும் நடவடிக்கைகள் பெண்களின் முன்னேற்றத்திற்காக இருந்தாலும், இந்தியாவின் தொழில் முனைவோர் சூழலில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெண்களுக்கான தொழிலில் குறைந்த வருவாயும், ஆண்களுக்கான துறைகளில் அதிக வருவாயும் ஈட்டுவதாக இருக்கிறது. பழங்காலத்தில் இருந்தே "Women Friendly Sectors" என சில துறைகளை இச்சமூகம் பெண்களுக்கென ஒதுக்கியுள்ளது. அவைகளில் கல்வித்துறை ஆடை மற்றும் அழகு பராமரிப்புத் துறையில் தான் பெண்கள் தொழில் முனைய வேண்டும் எனும் அவநம்பிக்கையும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுவே அவர்களின் அனுபவம் மற்றும் திறன்களை வெளிக்காட்ட தடுக்கிறது. 

Business

Advertisment

குடும்ப ஆதரவின்மை:

பெரும்பாலான பெண்கள் தொழில் முனையும் போதும் சரி வேலைக்கு செல்லும் போதும் சரி அவர்களின் குடும்ப ஆதரவு என்பது மிகவும் முக்கிய பங்காக இருக்கும். ஒரு ஆணுக்கு குடும்பத்தில் கிடைக்கும் ஆதரவு எந்த பெண்ணுக்கும் தொழில் ரீதியாக அவள் குடும்பத்தில் கிடைப்பதில்லை. பெண் தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் முக்கிய சவாலை அவர்கள் குடும்பத்தை சமாளிப்பது தான். இந்தியாவில் குடும்ப கட்டமைப்பு என்பது ஒரு பெண்ணை முன்வைத்து கட்டப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் என எடுத்துக் கொண்டால் அதில் ஆண்களுக்கென்று ஒரு வேலை பெண்களுக்கு என்று ஒரு வேலை என தனித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலை மெதுவாக மாறிக்கொண்டே வருகிறது. சில குடும்பத்தில் பெண்கள் வேலைக்கு செல்லும் சமயத்தில் ஆண்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே வந்து தொழில் முனையவோ அல்லது ஒரு நிறுவனத்திற்கு பணிக்கு செல்வதோ மிகவும் சவாலாக இருப்பது எப்பொழுது மாறுகிறதோ அப்பொழுது என் சமூகத்தில் சிறந்த முன்னேற்றம் நிகழும். 



Women Entrepreneur

Advertisment

நிதி வாய்ப்பின்மை:

இந்தியாவில் பெண்களுக்கான நிதியளிப்பு நிறுவனங்கள் பாலினசார்பை கொண்டுள்ளது. பெண்களுக்கான நிதி உதவி பல காரணங்களுக்காக முதலீட்டாளர்கள் (Investors) கொடுப்பதில்லை. VC நிறுவனங்கள் மற்றும் Angel Investors பெண்களின் தொழில்களில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள், அது மட்டுமல்லாமல், வங்கிகள் பெண்களால் தொடங்கப்பட்ட நிறுவனத்தில் Credit Worth குறைவாக இருப்பதால் அவர்களுக்கு Personal financing மற்றும் Collateral loan கொடுக்க யோசனை செய்கின்றனர். இதன் காரணத்தை கூர்ந்து கவனித்தால் பெண்களின் பெயரில் எந்த சொத்தும் இருப்பதில்லை என்பதுதான். 

ஒரு தொழில் தொடங்குவதற்கு முன்பும் சரி பின்பும் சரி பெண்கள் சந்திக்க இருக்கும் பிரச்சனைகள் ஆயிரம். அவள் மிகவும் கஷ்டப்பட்டு பள்ளிக்கு சென்று, கல்லூரி படிப்பை முடித்து, பின் ஒரு நிறுவனத்திற்கோ அல்லது அவள் நினைத்தவாறு தொழில் செய்வதற்கோ முயற்சிக்கும்பொழுது இச்சமூகம் ஒத்துழைக்க வேண்டும். இவை அனைத்தையும் மீறி சாதிக்கும் பெண்களை மனதில் கொண்டு, சாதனையாளர்களாக ஒளிருங்கள்!

Advertisment

Suggested reading:

https://tamil.shethepeople.tv/news/importance-of-earning-for-women

https://tamil.shethepeople.tv/news/rights-of-working-women

Advertisment

https://tamil.shethepeople.tv/society/things-single-mothers-should-know

https://tamil.shethepeople.tv/society/5-things-women-should-not-compromise

 

#women entrepreneur