Advertisment

Parents of Single Child- இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Single child ஆக குழந்தையை வளர்க்க இப்பொழுது பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அது நிதி ரீதியாகவும் சரி மனநிலை ரீதியாகவும் சரி அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது ஒற்றை குழந்தைகளை கான வளர்ப்பு என்பது. ஆனால் அது சுலபமே. இதை படியுங்கள்!

author-image
Pava S Mano
New Update
Single child

Image is used for representational purpose only

ஒரே குழந்தையை வளர்ப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. வளர்ந்து வரும் சமூகத்தில்  விலைவாசியை மனதில் வைத்து அனைவரும் இப்பொழுது ஒரே குழந்தையை போதும் என்று நினைக்கிறார்கள். இத்தோடு அதிகரித்து வரும் கல்விச் செலவு, பிரசவ செலவு போன்ற அனைத்தையும் யோசித்து இப்படி ஒரு முடிவுக்கு வருகின்றனர். பல பெற்றோர்களுக்கு அவர்கள் குழந்தை தனியாக வளருவதால் எங்கே பனிமையால் பாதிக்கப்பட்ட விடுவார்களோ என்று கவலை கொள்கின்றனர். மேலும் சமூகத்தில் ஒரே மாதிரியான பல எதிர்மறை கருத்துக்கள் ஒற்றை குழந்தைகளை மிகவும் கவனமாக வளர்த்த ஆதரிக்கிறது. ஒற்றை குழந்தை என்றாலே மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அவர்கள் விசித்திரமாக செயல்படுவார்கள் மற்றும் சுயநலத்துடன் கருதப்படுகிறது. உடன் பிறந்தவர்கள் இல்லாமல் வளருவதால் அவர்கள் சமூகத்தில் கூட்டமாக வாழ கஷ்டப்படுவார்கள் என்று பல கருத்துக்கள் பேசப்படுகிறது. 

Advertisment

ஒரே குழந்தையாக இருந்தால் பயம் வேண்டாம்!

குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடனும் பெரியவர்களுடனும் அதிக நேரத்தை செலவிடுவார்கள். மேலும் பெரியவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்து அவர்களும் அவ்வாறே செயல்படுவார்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது. பொதுவாக ஒற்றை குழந்தைகள் அதிக நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு மிக்கவர்களாக இருப்பார்கள். குழந்தைகளுடன் பழகுவதற்கு, பெற்றோர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு, அவைகளை அவர்களுக்கு கற்பிக்கும் பொழுது அவர்களுக்கான சிறந்த கல்வியை வழங்க முடியும். உடன்பிறப்புகள் இல்லாததால் குழந்தைகள் அதிகமான நேரத்தை தனிமையில் தான் செலவிடுகிறார்கள். எனவே இவர்களுக்கு கற்பனை திறன் மிகவும் அதிகமாக இருக்கும். மேலும் அவர்களுடைய நட்பு வட்டாரம் பெரிதாக இருக்கும். ஒரே குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் கவனம் அன்பு மற்றும் பாராட்டு அனைத்தையும் அவர்கள் மீதே செலுத்துவதால் ஒற்றைக் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகமாகவே இருக்கும். மேலும் அவர்கள் நேர்மையாக மற்றும் சுயமரியாதை அதிகம் உள்ளவராக இருப்பார்கள் என ஆராய்ச்சி  கூறுகிறது.

இவர்களை வளர்ப்பது சுலபமே!

Advertisment

Parenting

ஒரே குழந்தைகள் மிகவும் தனியாக இருப்பார்கள் யாருடனும் ஒன்று சேர மாட்டார்கள் என்று பலவிதமான கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் உண்மை கிடையாது. ஒரே குழந்தைகளை பொருத்தவரை அவர்கள் தாங்களாகவே அல்லது அவர்களின் கற்பனை நண்பர்களுடன் விளையாடுகிறார்கள். இது அவர்களுக்கான சமூக தொடர்பை மிகவும் சிரமமாக்கும். எனவே அவர்கள் வயதுடைய குழந்தைகளுடன் வழக்கமாக விளையாட விடுங்கள். சமூகத்திறனை வளர்க்க என்ன விதமான வித்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். உடன் பிறந்தவர்கள் இல்லாததால் முக்கியமான உறவை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். எப்படி சண்டை வந்தால் ஒருவருடன் சமரசம் செய்வது, சாப்பிடும் பொருட்களையோ அல்லது மற்ற பொருட்களையோ எப்படி பகிர்ந்து கொள்வது ,வெற்றி தோல்விகளை எவ்வாறு அணுகுவது மற்றும் உறவுகளை எப்படி மதிப்பது போன்ற சிக்கல்களை கையாள அவர்களை பழக்கங்கள். Single child அதிகமாக பெற்றோரை சார்ந்த இருப்பார்கள். இது ஒரு விதத்தில் நல்லதாக இருந்தாலும் மறுபக்கம் பார்க்கும் பொழுது இது ஆரோக்கியமற்றதாகும். எனவே எப்பொழுதும் ஒரு படி பின்வாங்கியே இருங்கள். ஏனென்றால் சில சிக்கல்களை அவர்களே எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கு இது உபயோகமாக இருக்கும். பெற்றோர்கள் இல்லாத சமயத்தில் எப்படி சூழ்நிலையை கையாள்வது என்ற தன்னம்பிக்கையை மற்றும் தன் அறிவையும் இது வளர்க்கும். ஒற்றை குழந்தைகளின் கருணையை மேம்படுத்த செல்லப்பிராணிகளை அவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள்.

Self identity அ ஊக்கப்படுத்துங்கள்:

Advertisment

ஒரே குழந்தைகள் நடைபெற்ற பெற்றோர்கள் பெரும்பாலும் செல்வாக்கு உடையவர்களாக இருக்கிறார்கள். இதன் விளைவாக குழந்தை சில சமயங்களில் தமக்கென சொந்த அடையாளம் இல்லாதது போலவும் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நம்மால் செய்ய முடியவில்லை என்று உணரவும் வாய்ப்புள்ளது. உங்களால் முடியாததை உங்கள் குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள். ஒரே குழந்தை என்பதால் நீங்கள் அப்படி திணிக்கும் பொழுது தான் நினைத்ததை செய்ய முடியவில்லை என்ற வருத்தம் வாழ்நாள் முழுதும் அவர்கள் மனதில் நின்று விடும். அவர்களின் திறன் என்ன என்று ஆராய்ந்து அவர்களின் சொந்த முடிவுகளை எடுக்க ஊக்குவியுங்கள். நீங்கள் அதிருப்தி அடைவது இயற்கை தான் என்றாலும், குழந்தைகளுக்கு என்ன வருமோ அதை பாராட்டி இன்னும் எப்படி சிறப்பாக செய்யலாம் என்று ஊக்கப்படுத்துங்கள். ஒற்றை குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். சில சமயம் பெற்றோர்கள் தொடர்பான பிரச்சனையில் அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவும் வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள்.

Single child

ஒரே குழந்தை என்பதால் அவர்களின் மேல் Overprotectiveness ஆக இருந்து அவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்த ஒரு தடையாக உங்கள் வளர்ப்பு என்றும் இருக்கவே கூடாது என்பதை உணர்ந்து அவர்களுக்கான வாழ்க்கையை வாழ விடுங்கள்!

Advertisment

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/6-rules-all-dil-and-mil-should-follow

https://tamil.shethepeople.tv/society/things-you-should-never-do-in-front-of-children

Advertisment

https://tamil.shethepeople.tv/society/things-to-know-about-good-parenting

https://tamil.shethepeople.tv/society/things-single-mothers-should-know

 

single child
Advertisment