மாமியாரும் மருமகளும்(MIL and DIL) தெரிந்து கொள்ள வேண்டிய 6 Rules

மாமியார் மற்றும் மருமகள் பிரச்சனையை தீர்க்க அவர்கள் இருவரும் சேர்ந்து முடிவு எடுத்தால் மட்டுமே தீரும். இருவருக்கும் ஆன பரஸ்பர உறவு என்பது நீண்ட காலம் வரை நீடித்திருக்க அவர்கள் செய்ய வேண்டிய ஆறு கட்டாயமான விஷயங்களை பார்க்கலாம்!

author-image
Pava S Mano
Aug 29, 2023 11:55 IST
Mil and dil

Image is used for representational purpose only

பல குடும்பங்களில் பிரச்சனை வருவதற்கான முக்கிய காரணம் மாமியார் மருமகளுக்குள் ஒத்துப் போகாமல் இருப்பதுதான். கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைக்கும் சில சமயம் இதுவே காரணமாக அமைகிறது. நம் வாழ்க்கையில் மிக முக்கியமான உறவு மாமியார் மருமகள் உறவாகும். ஏனென்றால் அது நீண்ட காலம் வரை நீடிக்கும் உறவாகும். மனிதனுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் அவன் நிம்மதியாக இருக்கும் இடம் வீட்டில் மட்டும் தான். அப்படி வீட்டில் இருக்கும் பொழுது மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏற்படும் பிரச்சனை உறவையும் ஒற்றுமையையும் நிம்மதியையும் நிலைகுலைய செய்ய வைத்து விடும். பல வீடுகளில் இவர்களின் பிரச்சனையால் கணவன் எந்த பக்கம் பேசுவது என்று தெரியாமல் திண்டாடுவார்கள்.இந்த 6 Rules ஐ follow செய்து பாருங்கள், எந்த பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பே இருக்காது!

Advertisment

நியாயமாக இருங்கள்:

உங்கள் மகனுக்கு  திருமணமாகி, இப்பொழுது மருமகள் உங்கள் வீட்டில் ஒருவராக வந்து விட்டார். எவ்வளவு பிரச்சனைகள் உங்களுக்கும் உங்கள் மருமகளுக்கும் வந்தாலும்,  அவரை உங்கள் சொந்த மகள் போல் நடத்துங்கள். உங்கள் மகனுக்காக தான் அவள் குடும்பத்தை விட்டு உங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாள் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்களும் அவள் சூழலில் இருந்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். மருமகளிடம் நியாயமான அன்பை காட்டுங்கள். மாமியார் மட்டுமல்ல மருமகளும் இதை பின்பற்ற வேண்டும். உங்கள் மாமியாரை தாய் போல் நடத்துங்கள். ஒருபட்சமாக இருக்காமல் உங்கள் கணவரின் தாய் மற்றும் தந்தைக்கும் முன்னுரிமையை கொடுங்கள். சமமான உறவை மேம்படுத்த உங்களால் முடிந்த அனைத்தையும் செய்து அனைவரையும் ஆமோதித்து வாழுங்கள்.

Dil

Advertisment

Personal ah எடுத்துக்காதீங்க:

உங்கள் மாமியார் என்னதான் சங்கடப்படுத்தினாலும் சில சமயங்களில் அவர்கள் எதார்த்தமாக சொல்லும் விஷயத்தை Personal ஆக எடுத்துக் கொள்ளாதீர்கள். எதையும் அவர்கள் இப்படித்தான் என்று நினைத்து விட்டு விடுங்கள். அதுதான் உங்கள் மன அமைதிக்கும் குடும்பத்தின் அமைதிக்கும் நல்லதாகும். இல்லையேல் இது பெரிய பிரச்சினையாக மாறிவிடும். மாமியாரும், மருமகள் செய்யும் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்காமல், அவள் செய்யும் வேலைகளை குறை கூறாமல் இருக்க பழகிக் கொள்ளுங்கள். நீங்களும் அமைதியாக இருந்தால் அவர்களும் அமைதியை கடைப்பிடிப்பார்கள். இதுவே உங்கள் மகனின் வாழ்க்கைக்கு நீங்கள் செய்யும் நல்ல விஷயமாகும்.

Thank and Praise பண்ணுங்க:

Advertisment

உங்கள் மாமியார் உங்களைவிட மேலோகியே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யும் செயல்கள் கசந்தாலும், சில சமயங்களில் அதற்கு நன்றி கூறுங்கள். ஏனென்றால் உங்கள் கணவனின் தாய் என்ற தகுதியை உடையவர்கள் அவர்கள். மாமியார்களும் நீங்கள் நினைத்த அளவிற்கு மருமகள் இல்லை என்றாலும் அவர்களை பாராட்ட தயங்காதீர்கள். உங்கள் வயதுக்கு ஏற்றவாறு பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் மகனுடன் அவள் வாழ்நாள் முழுவதும் வாழப் போகிறவள்.

உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்:

சில சமயங்களில் மாமியார் நினைத்தவாறு உங்களால் உதவி செய்ய முடியாமல் இருந்திருக்கலாம். அந்த சமயத்தில் அவர்களிடம் தெளிவாக கேளுங்கள் என்ன மாதிரியான உதவி உங்களுக்கு தேவை என்று. உங்கள் மருமகள் செய்யும் உதவியை பாராட்டுங்கள். நீங்கள் மட்டுமே அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தவிருங்கள். ஏனென்றால் அவளும் அந்த குடும்பத்தில் ஒரு நபராக வந்து விட்டால். அவளுக்கான உரிமையை நீங்கள் கொடுக்க வேண்டும். அவளுக்கும் அவள் கணவனுக்கும் குடும்பத்தாருக்கும் சமைக்க வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். அந்த எண்ணத்தை புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். அதே மாதிரி மாமியார், அவர்களால் முடிந்த உதவியை, மருமகள் வேலை பார்க்கும் பொழுது, எந்த சலிப்பும் இல்லாமல் செய்து கொடுங்கள்.

Advertisment

Control செய்யாதீர்கள்:

Mil

இப்பொழுது திருமணம் முடிந்து விட்டது. உங்கள் மகனும் மருமகளும் கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்து விட்டார்கள். அந்த சமயத்தில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை நீங்கள் திணிக்காதீர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் நீங்களும் கூடே செல்ல நினைப்பது தவறான விஷயம். அவர்களுக்கான Private Space ஐ கொடுங்கள். அவர்கள் இருவரின் உறவு மேம்பட அவர்களுக்கான தனிப்பட்ட நேரம் என்பது அவசியமானது. இதை புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். மருமகள்களும் அவர்களுக்கான மரியாதையை கொடுத்து, உறவும் மேம்பட செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் தெளிவாக செய்யுங்கள்.

Advertisment

Tolerate பண்ணாதீங்க Accept பண்ணுங்க:

எந்த ஒரு உறவிலும் tolerance இருந்தால் அந்த உறவில் பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கும். இதே அவர்கள் அப்படித்தான் என்று நம் மனம் accept செய்து கொண்டால் அந்தப் பிரச்சனையை தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. இது மாமியார் மருமகள் உறவில் பெரிதாக உதவும். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்தாலே எந்த பிரச்சனையும் வராது. இருவரும் நேசிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஆனால் இருவருக்கும் ஆன மரியாதையை இருவரும் வழங்க வேண்டும். உங்கள் மருமகள், எடை குறைவாகவோ, அதிகமாகவோ, உயரம் குறைவாகவோ, அதிகமாகவோ, நிறம் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் அதை மற்றவர் முன் கேலியாக பேசாமல் இருக்க தெரிந்து கொள்ளுங்கள். 

இருவருக்கும் ஆன பிரச்சனையை தீர்த்துக் கொள்ள மற்றவரை இடையில் கொண்டு வராதீர்கள். நீங்களே உங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள். இருவரும் உங்கள் குடும்பத்தை நிம்மதியாக கொண்டு போக என்ன வழியோ அதை தேர்ந்தெடுத்து சந்தோஷமாக இருங்கள்!

Advertisment

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/things-about-love-marriage

https://tamil.shethepeople.tv/society/things-you-should-never-do-in-front-of-children

Advertisment

https://tamil.shethepeople.tv/society/truth-about-live-in-relationship

https://tamil.shethepeople.tv/society/is-baby-planning-necessary-after-marriage

 

#daughter in law #mother in law